தேர்தல் ஆணையத்தின் படி பொருளாளருக்கே முழு அதிகாரம் – ஓபிஎஸ் ஆதரவாளர் குன்னம் ராமச்சந்திரன்

அதிமுக தொண்டர்களின் நலன் கருதி, எடப்பாடி பழனிசாமியுடன் கலந்தாலோசிக்க ஓ. பன்னீர்செல்வம் தயாராக இருப்பதாக பெரம்பலூர் மாவட்ட செயலாளர் குன்னம் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
அதிமுக உட்கட்சி பிரச்சனை நாளுக்கு நாள் அக்கட்சியின் தொண்டர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது என்றே கூறலாம். கடந்த சில நாட்களாக ஒற்றை தலைமை விவகாரத்தால் அதிமுக இரண்டாக பிரிந்து கிடக்கின்றன. முன்னாள் முதல்வரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக கட்சிகள் நிர்வாகிகள் பலரும் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், ஓ.பி.எஸ். ஆதரவாளர்களும் அவ்வப்போது கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், அதிமுக தொண்டர்களின் நலன் கருதி, எடப்பாடி பழனிசாமியுடன் கலந்தாலோசிக்க ஓ. பன்னீர்செல்வம் தயாராக இருப்பதாக பெரம்பலூர் மாவட்ட செயலாளர் குன்னம் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
image
சென்னை பசுமை வழி சாலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், உள்ளாட்சித் தேர்தல் புறக்கணிப்பால் தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்திருப்பதாகவும் கூறினார். அவைத்தலைவர், பொருளாளருக்கு மட்டுமே கட்சியும், சின்னமும் செல்லும் என்றும், தேர்தல் ஆணையத்தின் படி பொருளாளருக்கே முழு அதிகாரம் என்பதால் ஓ.பன்னீர்செல்வத்துக்கே அதிகாரம் இருப்பதாக குன்னம் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.