வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி-அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவதற்கான தேர்தல் பத்திரங்கள், இன்று வெளியிடப்படுகின்றன.
அரசியல் கட்சிகள் திரட்டும் தேர்தல் நிதி, ஒளிவுமறைவின்றி வெளிப்படைத் தன்மையுடன் இருப்பதற்காக, மத்திய அரசு, 2018ல் தேர்தல் பத்திரங்களை அறிமுகப்படுத்தியது.
இந்த பத்திரங்களை தனி நபர்கள், நிறுவனங்கள் வாங்கி, தங்களுக்கு விருப்பமான அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கலாம். ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவுக்கு மட்டும், தேர்தல் பத்திரங்களை வெளியிடும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.இதுவரை, 20 முறை மத்திய அரசின் ஒப்புதலுடன் தேர்தல் பத்திரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இன்று, 21வது முறையாக, தேர்தல் பத்திரங்கள் வெளியிடப்படுகின்றன
.இவற்றை, வரும் 10ம் தேதி வரை, சென்னை, புதுடில்லி, ஸ்ரீநகர், போபால், மும்பை, லக்னோ உள்ளிட்ட நகரங்களில் செயல்படும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கிளைகளில் வாங்கலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.’தேர்தல் பத்திரங்கள் வழங்கப்பட்ட நாளில் இருந்து, 15 நாட்களுக்கு செல்லுபடியாகும். அதற்கு மேல் காலாவதியாகி விடும்.
காலாவதியான தேர்தல் பத்திரங்களை ‘டிபாசிட்’ செய்தால், எந்த அரசியல் கட்சிக்கும் பணம் வழங்கப்படமாட்டாது’ என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.பார்லி., அல்லது சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகளில், 1 சதவீதத்திற்கு மேல் பெற்ற அரசியல் கட்சிகள் மட்டுமே, தேர்தல் பத்திரங்கள் வாயிலாக நன்கொடை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement