பிரித்தானியாவில் 5 வயது சிறுவனை கொலை செய்த குற்றத்திற்காக, சிறுவனின் தாய், வளர்ப்பு தந்தை, மற்றும் 14 வயது மதிக்கதக்க சிறுவன் ஆகிய மூன்று பேருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது.
பிரித்தானியாவில் லோகன் முவாங்கி(5) என்ற சிறுவனின் உடல் Bridgend பகுதியில் உள்ள தனது வீட்டில் இருந்து 250 மீட்டர் தொலைவில் உள்ள ஓக்மோர் நதிக்கரையில் கண்டெடுக்கப்பட்டது.
இதுத் தொடர்பான வழக்கு விசாரணை கார்டிஃப் கிரவுன் நீதிமன்றத்தில் நடந்த நிலையில், லோகனுக்கு 56 வெளிப்புற வெட்டுக்கள் மற்றும் பயங்கரமான உள்காயங்கள் ஏற்பட்டு இருப்பதாக தெரிவந்தது.
மேலும் அவர் பொருந்தாத பைஜாமாக்களை அணிந்திருந்தார், மேலும் அவர் மிருகத்தனமான மற்றும் தொடர்ச்சியான தாக்குதலுக்கு உள்ளானதாகவும் கூறப்படுகிறது.
லோகனின் காயங்கள் அதிவேக விபத்துகளால் பாதிக்கப்பட்டவர்களின் காயங்களுடனும், உயரத்தில் இருந்து விழுந்தவர்கள் காயத்தை போன்றும் இருப்பதாக நீதிமன்றத்தில் விவரிக்கப்பட்டது.
இந்த வழக்கில் லோகனின் தாயார் அங்கரட் வில்லியம்சன்(31) கொலைக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நிலையில், அங்கரட் வில்லியம்சன்(31) 28 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், லோகனின் வளர்ப்பு தந்தை ஜான் கோலுக்கு 29 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்படுவதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 14 வயது சிறுவனுக்கு 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிப்பதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: அடுத்த ஆண்டு லிதுவேனியா…நோட்டோ உச்சி மாநாட்டில் தகவல்
இந்த கொடுங்செயலுக்கு மூல காரணம், வில்லியம்சனை லோகனின் தந்தை பென் முவாங்கி ஏமாற்றிவிட்டான் என்ற எண்ணத்தில் குற்றவழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் ஆவேசமடைந்தே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.