நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் இம்முறை வழமைபோன்று மிகச் சிறப்பாக  நடைபெறும்

நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக கடந்த மூன்று வருடங்களாக மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம் பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் இம்முறை மிகச் சிறப்பாக  இடம்பெறுமென யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன்  தெரிவித்துள்ளார்..

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவ ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் நேற்று (29) யாழ் மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இடம்பெற்றது.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஆகஸ்ட் 1 ஆம் திகதி காலையில் இருந்து நல்லூர் ஆலய சுற்றுவீதிகளில் போக்குவரத்து தடை அமுல்படுத்தப்பட்டு ஆகஸ்ட் 29 ஆம் திகதி வைரவர் சாந்தி நிறைவடைந்த பின்னரே திறக்கப்படும் எனறும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆலய வெளி வீதியைச் சூழ ஆலய நிர்வாகத்தினரால் சிவப்புஇ வெள்ளை வர்ணக் கொடிகளால் எல்லையிடப்படும் வீதித்தடை பகுதிகளினுள் மாநகர சபையின் நீர் விநியோக வண்டி மற்றும் கழிவகற்றும் வண்டியை தவிர எக்காரணம் கொண்டும் வாகனங்கள் உட் செல்ல முடியாது.

அதேபோல வெள்ளை வர்ணக் கொடிகளால் எல்லையிடப்படும் வீதித்தடை பகுதிகளினுள் எந்தவிதமான வியாபார நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாது.

ட்ரோன் கமராக்களை பயன்படுத்தி காணொளி பதிவுசெய்ய முடியாது.

காலணிகளுடன் ஆலய வளாகத்திற்குள் பிரவேசிக்க முடியாது போன்ற கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன.

ஆலயத்துக்கு நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுவதற்காக  வருகின்ற தூக்குகாவடிகள் அனைத்தும் ஆலயத்தின் முன்பக்க பருத்தித்துறை வீதி வழியாக மட்டுமே உள்நுழைய முடியும். அவ்வாறு வருகின்ற காவடிகள் இறக்கப்பட்டதும்இ வாகனங்கள் அனைத்தும்இ செட்டித்தெரு வீதி வழியாக வெளியேறுவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டும்.

வீதி மூடப்பட்டிருக்கும் சமயங்களில் பருத்தித்துறை வீதி வழியாக வரும் வாகனங்கள் யாழ் மாநகர சபைக்கு முன்பாக உள்ள வீதியால் பயணித்து யாழ் நகரை அடைய முடியும். ஆனால் இரதோற்சவம் மற்றும் சப்பர திருவிழாக்களின் போது கச்சேரி நல்லூர் வீதியினூடாக பயணிக்க முடியும்.

இதேவேளை ஒவ்வொரு தனி மனிதனும் தங்களது சுகாதாரத்தில் கவனம் எடுத்து செயல்பட வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கலந்துரையாடலில் யாழ் மாநகர முதல்வர்இ மாநகர ஆணையாளர்இ மாநகர  பிரதிமுதல்வர்இ நல்லூர் ஆலய பரிபாலன பிரதிநிதிகள்இ மாநகர சபை உறுப்பினர்கள்இ மாநகர அதிகாரிகள்இ பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் உட்பட சம்பந்தப்பட்ட துறைசார் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்

.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.