நோன்பு கடைபிடித்த ரோகித் சர்மாவின் முன்னாள் காதலி! ஏற்பட்ட பரிதாப நிலை


நடிகையும், இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மாவின் முன்னாள் காதலியுமான சோபியா ஹயாத் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தி பிக்பாஸ்-7 நிகழ்ச்சியில் பங்கேற்று புகழ்பெற்றவர் சோபியா ஹயாத். இவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் காதலி ஆவார்.

சில நாட்களுக்கு முன்னர் 21 நாட்கள் உண்ணாமல் நோன்பு இருக்கப்போவதாக சோபியா அறிவித்தார். ஆனால் உண்ணாவிரத முறை அவருக்கு ஒத்துப்போகாததால் உடல்நிலை பாதிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அவரது உடலில் உப்பு அளவு குறைந்திருப்பது தெரிய வந்தது. இதனால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Sofia Hayat

இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘நான் தனியாக இருக்கிறேன், என் குடும்பம் என்னுடன் இல்லை. என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக மருத்துவர் கூறினார். ஆகவே எனக்கு அன்புகாட்ட வேண்டும்.

நான் இதற்கு முன்பு கூட நோன்பு கடைபிடித்திருக்கிறேன். மேலும் இது எனது முந்தைய பிறவிகளைச் சந்திக்கவும், கடவுள் என்னைச் சுற்றி இருக்கிறார் என்பதை உணரவும் எனக்கு உதவியது. உண்ணாவிரதத்தைத் மேற்கொண்டு தொடர நேர்மறை ஆற்றல்கள் எனக்கு உதவுகின்றன’ என தெரிவித்துள்ளார்.    

Sofia Hayat



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.