பதவி கொடுத்த பிறகு தான் எடப்பாடியின் குணம் தெரிந்ததாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த குழப்பம் நீடித்து வரும் நிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். தலைமைக் கழக செயலாளர் கழக அமைப்புச் செயலாளர்கள், அணிச் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் என 138 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் இருந்து 320 கழக நிர்வாகிகளை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன்,’ ‘ வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பது தற்போது அதிமுகவில் நடந்து கொண்டிருக்கிறது. நாங்கள் திணை விதைத்தவர்கள். அவர்கள் வினை விதைத்தவர்கள். ஆட்சி, அதிகாரம், வசதி வாய்ப்பு தாண்டி தொண்டர்கள் ஆதரவு அவசியம். பொதுக்குழு என்கிற பெயரில் நடந்த கூத்தை பார்த்திருப்பீர்கள். அதிமுகவில் இருப்பது அசிங்கங்கள், அதிலிருந்த சிங்கங்கள் எல்லாம் எங்கள் பக்கம் உள்ளனர். நாங்கள் நரி கூட்டத்தில் சேர விரும்ப மாட்டோம்.
ஜெயக்குமாரை நிதி அமைச்சராகியது யார் என அவரே சொல்லட்டும். தர்மயுத்தம் தொடங்கிய போது ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்தேன். அதற்கு பிறகு சந்திக்கவில்லை. ஓ.பி.எஸ் எனது நண்பர்
எம்.ஜி.ஆர் கட்சி நயவஞ்சகர்கள் கையில் உள்ளது. உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையம் வரை முறையீடு செய்தோம். எனவே அதிமுக கட்சிக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை. அதிமுகவின் தற்போதைய நிலையை பார்த்தால் வருத்தமாக உள்ளது. நிர்வாகிகளின் பெரும்பான்மையை வைத்து முடிவு எடுக்க முடியாது. தலைமை பதவியை தொண்டர்கள் தான் தேர்தேடுக்க வேண்டும். சமுதாயம், மதம் எங்களுக்கு கிடையாது. நாங்கள் அம்மாவின் தொண்டர்கள். அரசியல் பதவிக்கு நீட் தேர்வு எல்லாம் வைக்க முடியாது.
பதவி கொடுத்த பிறகு தான் எடப்பாடியின் குணம் தெரிந்தது. நேர்மையாக செயல்படுவதுதான் ராஜதந்திரம். இங்கு ஐ.பி.எல் ஏலம் நடந்து கொண்டிருக்கிறது. அருவருப்பாக உள்ளது. உறுப்பினர்கள் தொண்டர்கள் வாகளிக்கட்டும் யார் தலைவர் என தெரியும். அதிமுகவில் நடக்கும் பிரச்சனைகளுக்கு பாஜக காரணமாக இருக்கலாம்; இல்லாமலும் இருக்கலாம். இன்னும் அதிமுகவில் எனது ஸ்லீப்பர் செல் இருக்கிறார்கள்
நரி கூட்டத்தில் மோத விருப்பமில்லை. நாங்கள் எங்கள் சின்னத்தில் போட்டியிட போகிறோம். அதிமுக வேட்பாளர்கள் சுயேச்சையாக போட்டியிட போகிறார்கள். 2024 நாடாளுமன்ற தேர்தலுக்குள் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் எந்த தேசிய கட்சியுடன் இணைந்து செயல்படப் போகிறது என உங்களுக்குத் தெரியும்.
பாஜகவை நான் விமர்சிக்கவில்லை என கூறுகிறார்கள். தேவையில்லாமல் யாரையும் விமர்சிக்க மாட்டேன். திமுகவை கூட அவசியப்பட்டால் தான் விமர்சித்துள்ளேன்’’ என்று கூறினார்.
இதையும் படிக்கலாம்: “அன்புள்ள அண்ணன் ஓபிஎஸ் அவர்களுக்கு..”.. ஈபிஎஸ் எழுதிய கடிதமும், பின்னணியும்!Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM