மட்டக்களப்பு வாகனேரி நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் செய்கை பண்ணப்பட்ட சிறுபோக வேளாண்மை அறுவடை விழா இன்று (30) காலை 10 மணிக்கு கிரான் தவணை கண்டத்தில் மிகச்சிறப்பாக இடம்பெற்றது.
வாகனேரி திட்ட முகாமைத்துவக்குழுவின் தலைவர் சி.புஸ்பாகரன் தலைமையில் நடைபெற்ற விழா நிகழ்விற்கு பிரதம விருந்தினராக
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் கலந்துகொண்டார்.
மட்டக்களப்பு நீர்ப்பாசனப் பணிப்பாளர் எந்திரி.ந.நாகரெத்தினம், மட்டக்களப்பு மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் கே.ஜெகன்நாத், ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கலந்துகொண்னர்.
ஆலய வழிபாடுகளைத் தொடர்ந்து அறுவடை விழா இடம்பெற்றது. விழாவில் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் கிரான் தவணை கண்டத்தில் வேளாண்மை செய்த விவசாயிகள் உள்ளிட பலர் கலந்து சிறப்பித்தனர்.