மணிக்கு 400 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ஹைபிரிட் சூப்பர்காரை அமெரிக்காவின் சிங்கர் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.
செயற்கை நுண்ணறிவு மற்றும் 3-டி பிரின்ட்டிங் தொழில்நுட்பத்தின் மூலம் குறைந்த கால அவகாசத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த காரில் ஒருவர் பின் ஒருவராக அமர்ந்து 2 பேர் பயணிக்க முடியும்.
21சி என பெயரிடப்பட்டுள்ள இந்த சூப்பர் கார் அடுத்த ஆண்டு அமெரிக்க சந்தையில் சுமார் ஒரு கோடியே 60 லட்ச ரூபாய்க்கு அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
மின்சாரம் மற்றும் பெட்ரோலில் இயங்கக்கூடிய இந்த காரில் இரண்டே வினாடிகளில் 100 கி.மீ வேகத்தை எட்டி விட முடியும் என கூறப்படுகிறது.