சென்ற ஆண்டிற்கான 10 மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வுகள் முடிவுகள் சென்ற வாரம் வெளிவந்தன. இதில் சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த ஆயிஷா சித்திஹா மொபைல் ஃபோன் போன்ற எந்த வசதியுமின்றி, குடும்ப வறுமை சூழ்நிலை மத்தியிலும் 580 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார். இரண்டு பாடங்களில் 100 மதிப்பெண்கள் எடுத்துள்ள ஆயிஷா சித்திஹா விடாமுயற்சி வீண் போவதில்லை என நிரூபித்து காட்டியுள்ளார்.
இது குறித்து பேசும் அவர் “நான் 580 மார்க் எடுத்தது ரொம்பவும் சந்தோசம். இதுக்கு என் ஆசிரியார்களோட முயற்சியும், ஆதரவும்தான் காரணம். என்னோட அப்பா, அம்மா என்ன ரொம்ப ஊக்குவிச்சாங்க. எனக்கு கொரோனா காலக்கட்டத்துல படிக்க ரொம்ப கஷ்டமா இருந்துச்சு, பொதுத்தேர்வை எப்படி எதிர்கொள்ள போறோம்னு பயமாவும் இருந்துச்சு. அப்போ என் ஆசிரியர்கள் சொன்ன கீ பாய்ண்ட்ஸ், முக்கியமான வினாக்கள் எனக்கு ரொம்பவும் உதவியா இருந்துச்சு. மொபைல் ஃபோன் இல்லாததால ஆசிரியர்களுக்கு கால் பண்ணிதான் என்னோட சந்தேகங்கள தீர்த்துப்பேன்.
என் தலைமை ஆசிரியை, தமிழக முதல்வர், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அவர்களுக்கு என் நன்றிகள். அவங்க எங்களுக்காக பல வசதிகள் செஞ்சு கொடுத்ததால தான் என்னால நல்லா படிச்சு இவ்ளோ மார்க் ஸ்கோர் பண்ண முடிஞ்சது.” என்று கூறினார்