2 பொருட்களை வைத்து சூப்பரான ஆப்பம் தோசைக் கல்லிலேயே தயாரித்து சுடச்சுட தேங்காய் பாலுடன் இப்படி செய்து சாப்பிட்டு பாருங்கள், அதனுடைய ருசியே சூப்பராக இருக்கும். ஆப்ப மாவு சுலபமாக எப்படி அரைப்பது ? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்துகொள்வோம்
தேவையான பொருட்கள்
இட்லி அரிசி – 2 கப்,
சாதம் – 1 கப்
உப்பு – தேவையான அளவு.
முதலில் ஆப்பம் செய்வதற்கு 2 கப் அளவிற்கு இட்லி அரிசியை எடுத்துக் கொள்ளுங்கள். இட்லி அரிசிக்கு பதிலாக சாதாரண சாப்பாட்டுக்கு பயன்படுத்தும் அரிசியையும் நீங்கள் பயன்படுத்தலாம். அரிசியை சுத்தம் செய்து 3 அல்லது 4 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
4 மணி நேரத்திற்கு பிறகு ஊற வைத்த அரிசியை மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் ஒரு கப் அளவிற்கு சாதத்தை சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் இந்த மாவிற்கு தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அரைத்த இந்த மாவை 8 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். இரவு முழுவதும் நன்கு ஊற விட்டு விடுங்கள்.
மறுநாள் காலையில் பொங்கிய மாவை லேசாக கலந்துவிட்டு கொள்ளுங்கள். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடான, பின்னர் மிதமான தீயில் வைத்து ரெண்டு கரண்டி மாவை ஊற்றி தடிமனாக பரப்புங்கள். பின்னர் மூடி வைத்து இரண்டு நிமிடத்தில் திறந்து பார்த்தால் சுவையான ஆப்பம் தயாராகி இருக்கும்.