17 வயதில் கோடிக்கணக்கில் கையில் பணம்! எலுமிச்சை பழத்தால் இளம்பெண்ணிற்கு அடித்த அதிர்ஷ்டம்


எலுமிச்சை பழங்களால் 17 வயது பெண் ஒருவர் பெரும் கோடீஸ்வரர் ஆகியுள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த 17 வயது டீன் ஏஜ் பெண் Mikaila Ulmer.
இவரின் சொத்து மதிப்பு 5 மில்லியன் டொலர்கள்
(ரூ 1,81,35,67,500.00) வரை இருக்கும்.

இவ்வளவு பணத்தையும் எலுமிச்சை பழங்கள் மற்றும் தேனீக்கள்
தான் இவருக்கு கொடுத்தது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
ஆம்! மீ அண்ட் தி பீஸ் லெமனேட் என்ற நிறுவனத்தின் தலைவராக Mikaila உள்ளார்.

17 வயதில் Mikaila தொழிலதிபராகக் காரணமே தேனீக்கள்தான். ஆம், தேனடைகளில் இருந்து எடுக்கப்படும் தேனுடன், சுவையான புதினா, ஆளிவிதை, எலுமிச்சை ஆகியவற்றைக் கலந்து ‘பீ ஸ்வீட் லெமனேட்’ என்னும் பெயர் கொண்ட இயற்கைப் பானத்தைத் தயாரித்து பெரிய அளவில் விற்பனை செய்து வருகிறார்.

17 வயதில் கோடிக்கணக்கில் கையில் பணம்! எலுமிச்சை பழத்தால் இளம்பெண்ணிற்கு அடித்த அதிர்ஷ்டம் | Mikaila Ulmer Millionaire Young Age Lemon

instagram/mikailasbees

அமெரிக்காவில் பல இடங்களில் கிளைகளைக் கொண்டு இயங்கும் ஹோல் புட்ஸ் என்ற சூப்பர் மார்க்கெட் நிறுவனம் தனது 55 கடைகளில் Mikaila நிறுவனம் தயாரிக்கும் பானத்தை விற்பனை செய்து வருகிறது.

அதற்காக, Mikailaவுடன் ரூ. 70 கோடிக்கு ஒப்பந்தம் ஒன்று போடப்பட்டுள்ளது.
மேலும், ‘ஷார்க் டாங்க்’ என்ற தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சி மூலம் இச்சிறுமிக்கு ரூ. 38.59 லட்சம் முதலீடு கிடைத்துள்ளது.

இந்த வகை பானங்களை கடந்த 1940-ல் மிகைலாவின் பாட்டி முதலில் தயாரித்தார். அதற்கான ரகசியம், வாழையடி வாழையாகத் தற்போது Mikaila வரை வந்து சேர்ந்துள்ளது.

17 வயதில் கோடிக்கணக்கில் கையில் பணம்! எலுமிச்சை பழத்தால் இளம்பெண்ணிற்கு அடித்த அதிர்ஷ்டம் | Mikaila Ulmer Millionaire Young Age Lemon

Mikaila-வுக்கு இந்த வியாபாரத்துக்கான யோசனை 4 வயதாக இருக்கும் போது வந்திருக்கிறது. நான்கு வயதில் அவரை தேனீ கடித்துள்ளது. அப்போது வலியால் துடித்த Mikaila, பின்னர் அதன் மேல் கொண்ட ஆர்வத்தால் தேனீக்களை குறித்துப் படிக்கத் தொடங்கியுள்ளார்.

அதன் பின்னர் பீ ஸ்வீட் லெமனேட் பானம் தயாரிக்கும் தொழிலை கடந்த 2009-ல் தொடங்கினார். தன் வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை தேனீக்களைக் காப்பாற்றுவதற்காகச் செலவிட்டு வரும் Mikaila, தேனீக்களைக் காப்பதே தன் மிகப்பெரிய குறிக்கோள் என்கிறார்.

Mikaila தனது முயற்சியைத் தொடங்கியதிலிருந்து தேனீக்களைக் காப்பாற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு லாபத்தில் 10% நன்கொடையாக அளித்துள்ளார்.

17 வயதில் கோடிக்கணக்கில் கையில் பணம்! எலுமிச்சை பழத்தால் இளம்பெண்ணிற்கு அடித்த அதிர்ஷ்டம் | Mikaila Ulmer Millionaire Young Age Lemon



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.