52 வார சரிவில் உள்ள பங்கினை வாங்கலாம் என கூறும் நிபுணர்கள்.. என்ன காரணம்?

உள்நாட்டு தரகு நிறுவனம் ஒன்று 52 வார சரிவில் உள்ள ஒரு பங்கினை வாங்கலாம் என கணித்துள்ளது. ஏன் இவ்வளவு சரிவினைக் கண்டுள்ள ஒரு பங்கினை வாங்க பரிந்துரை செய்ய்துள்ளது.

அது இனியும் சரியாதா? அப்படி என்ன பங்கு அது? நிபுணர்களின் கணிப்பு என்ன?

அதிலும் தற்போது பங்கு சந்தைகள் ரத்த களரியாகி வரும் நிலையில், இனி என்னவாகுமோ? என்ற நிலையே இருந்து வருகின்றது. தொடர்ந்து ஏற்ற இறக்கம் அதிகளவில் உள்ளது?

வேற லெவல் கூட்டணி: டாடா மோட்டார்ஸ் உடன் கைகோர்க்கும் Renesas எலக்ட்ரானிக்ஸ்!

என்ன நிறுவனம்?

என்ன நிறுவனம்?

இப்படி ஒரு சவாலான நிலைக்கு மத்தியில் தரகு நிறுவனம் ராலிஸ் இந்தியா வாங்கி வைக்க பரிந்துரை செய்துள்ளது. இதன் இலக்கு விலையினை 230 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது.

ராலிஸ் இந்தியா அதன் முதல் காலாண்டுக்கு முன்னதாக உள்நாட்டு பயிர் பராமரிப்பு மற்றும் விதைகள் பிரிவில், கணிசமான வளர்ச்சியினை எட்டலாம் என தரகு நிறுவனம் தெரிவித்துள்ளன.

 

எந்த துறையை சார்ந்தது?

எந்த துறையை சார்ந்தது?

ராலிஸ் இந்தியா டாடா குழுமத்தினை சேர்ந்த கெமிக்கல் துறை சார்ந்த துணை நிறுவனமாகும். இது சோடா சாம்பல் உற்பத்தியில் உலகின் இரண்டாபது பெரிய உற்பத்தியாளராகும். இது ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, மற்றும் தென் அமெரிக்காவில் அதன் உற்பத்தியினை கொண்டுள்ளது.

கடந்த காலாண்டில் சற்று இழப்பினை கண்டிருந்தாலும், தற்போது அதன் வளர்ச்சி அதிகரித்திருக்கலம். முதல் காலாண்டில் இழப்பினை ஈடுகட்டலாம்.

 

வளர்ச்சி அதிகரிக்கும்
 

வளர்ச்சி அதிகரிக்கும்

இதன் ஏற்றுமதியும் வரவிருக்கும் காலாண்டுகளில் அதிகரிக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகின்றது. மார்ஜினில் உள்ள அழுத்தமும் குறையலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகின்றது. இதற்கிடையில் இதன் எபிட்டா விகிதமும் மேம்படலாம். இதற்கிடையில் கடந்த காலாண்டில் இந்த நிறுவனம் விலை அதிகரிப்பினையும் செய்துள்ளது. இதனால் முதல் காலாண்டில் நல்ல வளர்ச்சியினை எட்டலாம்.

 நடப்பு ஆண்டு நிலவரம்

நடப்பு ஆண்டு நிலவரம்

செலவினங்கள் அதிகரித்துள்ள நிலையில் அது சற்று தாக்கத்தினை ஏற்படுத்த கூடும். எனினும் விலை அதிகரிப்பானது சற்று கைகொடுக்கலாம்.

ஓராண்டில் இப்பங்கின் விலையானது 41% சரிவினைக் கண்டுள்ளது. இதே நடப்பு ஆண்டில் இதுவரையில் 32% சரிவினைக் கண்டுள்ளது. தற்போது இப்பங்கின் விலையானது அதன் 52 வார சரிவில் காணப்படுகிறது. இது 182 ரூபாய் என்ற லெவலில் காணப்படுகின்றது. இது கடந்த ஜூன் 20, 2022ல் தொட்டது.

 

மார்ச் காலாண்டு நிலவரம்

மார்ச் காலாண்டு நிலவரம்

ராலிஸ் இந்தியா மார்ச் காலாண்டில் 14 கோடி ரூபாய் நஷ்டத்தினை கண்டுள்ளது. இது முந்தைய ஆண்டில் 8 கோடி ரூபாய் லாபத்தில் இருந்தது. இதே இதன் வருவாய் விகிதம் 7.8% அதிகரித்து, 508 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முன்னதாக 471 கோடி ரூபாயாக இருந்தது.

இன்றைய பங்கு நிலவரம்?

இன்றைய பங்கு நிலவரம்?

இப்பங்கின் விலையானது தற்போது என் எஸ் இ-யில் 1.63% அதிகரித்து, 189.80 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதன் 52 வார குறைந்தபட்ச விலை 182.50 ரூபாயாகவும், 52 வார உச்ச விலை 341.85 ரூபாயாகவும் உள்ளது.

இதே பிஎஸ்இ-ல் 1.60% அதிகரித்து, 189.95 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதன் 52 வார குறைந்தபட்ச விலை 182.55 ரூபாயாகவும், 52 வார உச்ச விலை 341.65 ரூபாயாகவும் உள்ளது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

This Tata group stock trades near 52 week low: brokerage upgrades rating to buy

Brokerage firm recommended to buy Rallis india. The target price has been fixed at 230 rupees.

Story first published: Thursday, June 30, 2022, 16:23 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.