OnePlus Nord 2T: ஒன்பிளஸ் நார்ட் 2டி வெளியீட்டு தேதி – எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் என்னென்ன?

OnePlus Nord 2T launch date: ஒன்பிளஸ் நிறுவனம் தொடர்ந்து புதிய போன்களை அறிமுகம் செய்துவருகிறது. அதன்படி, OnePlus Nord 2T 5G ஸ்மார்ட்போனை மே மாதம் ஐரோப்பிய சந்தையில் அறிமுகப்படுத்தியது. தற்போது, இந்த 5ஜி மொபைல் ஜூலை 1 ஆம் தேதி இந்தியாவில் வெளியாகிறது.

OnePlus Nord 2T 5G ஆனது 6.43 இன்ச் டிஸ்ப்ளே, 50 மெகாபிக்சல் பிரதான கேமரா, 4,500 mAh பேட்டரி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. Jade Fog & Shadow grey ஆகிய இரு நிறங்களில் போன் விற்பனைக்குக் கொண்டுவரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒன்பிளஸ் நார்ட் 2டி 5ஜி அம்சங்கள் (OnePlus Nord 2T 5G Specifications)

ஒன்பிளஸ் நார்ட் 2டி ஆனது பஞ்ச்-ஹோல் வடிவமைப்புடன் 6.43-இன்ச் AMOLED டிஸ்ப்ளே உடன் வருகிறது. இந்த டிஸ்ப்ளே FHD+, 90Hz ரெப்ரெஷ் ரேட்டுடன் இருக்கும். போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனரும் கொடுக்கப்படும்.

Phone Under 15k: உங்களுக்கு விருப்பமான பட்ஜெட் விலை போன்கள்; சும்மா தெறிக்கவிடும் ஒரு லிஸ்ட் இருக்கு!

பின்பக்கம் 50 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட், 2 மெகாபிக்சல் ஆகியவை அடங்கிய டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு கொடுக்கப்படும். செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்பிற்கான 32 மெகாபிக்சல் முன்பக்க கேமரா இருக்கலாம்.

Period Cycle: மாதவிடாய் சுழற்சியை இனி எளிதாகப் பார்க்கலாம்; இது பெண்களுக்கான வாட்ஸ்அப் ட்ரிக்!

இதில் 12 ஜிபி வரை ரேம் ஆதரவும், 256ஜிபி வரை சேமிப்பகமும் வழங்கப்படும். போனில் 80 வாட் ஃபாஸ்ட் சூப்பர்வூக் சார்ஜிங் அம்சம் பயனர்களுக்குக் கிடைக்கும். 4,500mAh பேட்டரி புதிய ஒன்பிளஸ் போனை சக்தியூட்டும். இந்த போன் ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான OxygenOS 12.1 இல் இயங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் நார்ட் 2டி 5ஜி விலை (OnePlus Nord 2T 5G Price)

OnePlus Nord 2T 5G ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜூலை 1 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும். இதன் முதல் விற்பனை ஜூலை 5 ஆம் தேதி தொடங்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

1G to 5G: 1G முதல் 5G மொபைல் நெட்வொர்க் வரை… வரலாற்றை திரும்பிபார்ப்போம்!

போன் 8ஜிபி ரேம் + 128ஜிபி சேமிப்பகத்துடனும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி சேமிப்பகத்துடனும் வருகிறது. இதன் விலை முறையே ரூ.28,999 மற்றும் ரூ.33,999 ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.