இந்தியாவின் மிக பிரபலமான நடிகையான பிரியங்கா சோப்ரா, உலக அளவில் பிரபலமான நட்சத்திரமாவார். நடிகை மட்டுமல்ல, சிறந்த தொழிலதிபர் என்றும் கூட கூறலாம்.
பிரியங்கா சோப்ரா சமீபத்தில் தனது ஹோம்வேர் சேகரிப்பான சோனா ஹோமை அறிமுகப்படுத்தினார்.
ஜிஎஸ்டி கவுன்சில்: 3 துறைக்கு முக்கிய அறிவிப்பு.. சிறப்பான வரி சலுகை..!
இந்த சோனா ஹோமில் உள்ள பொருட்கள் இந்திய பாரம்பரியத்தினை போற்றும் வகையிலும், அழகான பொருட்களாகவும் உள்ளன. இதில் மேஜை மேல் போடப்படும் துணி என பலவும் அடங்கும்.
பிரமிக்க வைக்கும் அழகு
இந்த பொருட்கள் அனைத்தும் பார்ப்போரின் கண்ணை கவரும் விதமாகவும், பிரமிக்க வைக்கும் விதமாகவும் உள்ளது. எனினும் இதன் அழகு மட்டும் அல்ல, இதன் விலையும் பிரமிக்க வைக்கும் விதமாக உள்ளது.
சோனா ஹோம் என்பது பிரியங்கா சோப்ரா மற்றும் மனிஷ் கோயல் ஆகியோரால் தொடங்கப்பட்ட ஒன்றாகும். இதன் விலை மிக அதிகம் என்று தோன்றினாலும், பார்ப்பதற்கு மிக அழகாகவும், நேர்த்தியாகவும் உள்ளது.
இந்தியா ஓரு பகுதி
இது பிரியங்கா சோப்ரா அவரின் இன்ஸ்டா பக்கத்தில் சோனா ஹோமை உங்கள் அனைவருக்கும் அறிமுகப்படுத்துவதில் நான் பெருமை பட முடியாது. இந்தியாவில் இருந்து வந்த நான், அமெரிக்காவினை எனது இரண்டாவது வீடாக மாற்றுவது சவாலாக இருந்தது, ஆனால் எனது பயணம் என்னை எனது நண்பர்கள் மற்றும் இரண்டாவது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளது. நான் செய்யும் எல்லாவற்றிலும் இந்தியாவின் ஒரு பகுதியினை கொண்டு வருகின்றேன்.
கலாச்சாரத்துடன் இணைந்த வணிகம்
மனிஷ் கோயலுடன் இணைந்து , எங்களுக்கு பிடித்த பாரம்பரியமான ஒன்றை உருவாக்குவது மிக அற்புதமானது. இந்திய கலாச்சாரம் அதன் விருந்தோம்பலுக்கு பெயர் பெற்றது. இது சமூகம் மற்றும் மக்களை ஒண்றிணைப்பது பற்றியது. சோனா ஹோம் அதனை அனுபவிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என நான் நினைகிறேன் என கூறி ஷாப்பிங் செய்ய எங்களை பின் தொடருங்கள் என சோனா ஹோமின் லிங்கினையும் பதிவிட்டுள்ளார்.
கோஸ்டர்கள்
உண்மையில் சோனா ஹோமில் உள்ள அனைத்தும் மிக நேர்த்தியானதாகவும்,அழகானதாகவும் உள்ளன. ஆனால் விலை சற்று அதிகமாகவே உள்ளது. எனினும் இது பிரத்தியேகமான வடிவமைப்புகள்.
கோஸ்டர்கள் (Coasters) – set 4 – இதன் விலை 58 டாலர்களாகும். இதன் இந்திய மதிப்பு 4500 ரூபாயாகும்.
காக்டெய்ல் நாப்கின்கள்
காக்டெய்ல் நாப்கின்கள் (Panna cocktail napkins) – இதன் விலை 5300 ரூபாயாகும். set 4 – இதன் விலை 68 டாலர்களாகும்.
ரொட்டி கூடைகள்
ரொட்டி கூடைகள் (Breat Baskets) – இதன் விலை இந்திய மதிப்பில் 7500 ரூபாயாகும். இதே டாலரில் 95 டாலராகும் – ஒரு செட் 2
பாட்டில் கூலர்
பாட்டில் கூலர் (Bottle Cooler) – இதன் விலை இந்திய ரூபாயில் 30,000 ரூபாயாகும். இதே டாலரில் 398 டாலர்களாகும்.
பாட்டில் கோஸ்டர்
பாட்டில் கோஸ்டர் (Panna Bottle coaster) – இதன் விலை இந்திய ரூபாயில் 3800 ரூபாயாகும். இதே டாலரில் 48 டாலர்களாகும்.
ஸ்ட்ராஸ்
ஸ்ட்ராஸ் (Straws) – இதன் விலை இந்திய ரூபாயில் 2200 ரூபாயாகும். இதே டாலரில் 28 டாலர்களாகும்.
டேபிள் கிளாத்
டேபிள் கிளாத் (Panna Rectangular TableCloth) – இதன் விலை இந்திய ரூபாயில் 30,000 ரூபாயாகும். இதே டாலரில் 388 டாலர்களாகும்.
டேபிள் ரன்னர்
டேபிள் ரன்னர் (Tablerunner) – இதன் விலை இந்திய ரூபாயில் 14,000 ரூபாயாகும். இதே டாலரில் 178 டாலர்களாகும்.
பிரெட் கவர்கள்
பிரெட் கவர்கள் (Panna Bread covers) – ஒரு செட் 2 – இதன் விலை இந்திய ரூபாயில் 4500 ரூபாயாகும். இதே டாலரில் 58 டாலர்களாகும்.
பிளேஸ்மேட்ஸ்
பிளேஸ்மேட்ஸ் (Placemats ) – ஒரு செட் 4 – இதன் விலை இந்திய ரூபாயில் 11,700 ரூபாயாகும். இதே டாலரில் 148 டாலர்களாகும்.
சட்னி பாட்ஸ்
சட்னி பாட்ஸ் (Chutney pots) – ஒரு செட் 6 – இதன் விலை இந்திய ரூபாயில் 15,000 ரூபாயாகும். இதே டாலரில் 198 டாலர்களாகும்.
மேற்கண்ட இந்த பொருட்கள் வசதியான வாடிக்கையாளர்களுக்கு சரியானதாக தோன்றலாம். ஆனால் சாமானியர்களுக்கு ஏற்றதாக இருக்காது. எனினும் இது மேல்தட்டு மக்கள் விரும்பும் பொருட்களாக உள்ளன. எது எப்படியோ விலை கொஞ்சம் பயங்கரமாத் தான் இருக்கு. நீங்க என்ன நினைக்கிறீங்க..
Tablecloth for Rs 30,600: Netizens Slam Priyanka Chopra’s Sona Home Brand
Priyanka Chopra has recently launched Sona Home, a homeware collection. The items in this Sona Home are in keeping with the Indian heritage and beautiful items.