பங்குச்சந்தை சரிவு! ஜூன் மாதத்தில் ரூ.14 லட்சம் கோடி இழப்பு! என்ன காரணம்?

ஜூன் மாதத்தில் பங்குச்சந்தை கடுமையான சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் சுமார் 2300 புள்ளிகள் வரை சரிந்தது. இதனால் முதலீட்டாளர்களுக்கு சுமார் 13 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டது. ஜூன் 30-ம் தேதி முடிவில் மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிட்டுள்ள நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு ரூ.14 லட்சம் கோடி குறைந்து 243 கோடி ரூபாயாக இருக்கிறது. சென்செக்ஸ் 52 வார குறைந்தபட்ச புள்ளியை இந்த மாதத்தில் தொட்டது. ஏப்ரல் மே மற்றும் ஜுன் காலாண்டில் … Read more

இன்று தேசிய டாக்டர்கள் தினம்| Dinamalar

உயிர் காக்கும் பணியைசெய்வதால், கடவுளுக்குஇணையாக மதிக்கப்படுபவர்கள் டாக்டர்கள். உடலில் ஏதாவதுஒரு பிரச்னை ஏற்பட்டால்,நாம் நாடிச் செல்வது டாக்டரை தான். . இவர்களது சேவைகளுக்கு நன்றிதெரிவிக்கும் விதமாகவும்,டாக்டர்கள் மருத்துவத் துறைக்கு செய்யும் அர்ப்பணிப்பை நினைவுபடுத்திக் கொள்ளும் வகையிலும் ஜூலை 1ம் தேதி, டாக்டர்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஏன் ஜூலை 1 மேற்கு வங்கத்தின் 2வது முதல்வராக பதவி வகித்தவர் டாக்டர் பி.சி. ராய். சுதந்திர போராட்ட வீரராக மட்டுமல்லாமல், சிறந்த டாக்டராகவும் பணியாற்றிய இவர் பிறந்ததும், மறைந்ததும் ஜூலை … Read more

கமலுக்கு கோல்டன் விசா

ஐக்கிய அரபு அமீரக அரசு இந்திய திரைக்கலைஞர்களுக்கு சிறப்பு கோல்டன் விசாவை வழங்கி வருகிறது. இந்த விசா மூலம் அந்நாட்டில் அவர்கள் 10 ஆண்டுகள் இருக்கலாம். பாலிவுட் பிரபலங்கள் மட்டுமின்றி தென்னிந்திய சினிமாவில் மம்முட்டி, மோகன்லால், பிருத்விராஜ், துல்கர் சல்மான், திரிஷா, காஜல் அகர்வால், பார்த்திபன், அமலாபால், விஜய் சேதுபதி, சரத்குமார் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இந்த விசாவை பெற்றனர். இவர்கள் வரிசையில் தற்போது நடிகர் கமல்ஹாசனுக்கு கோல்டன் விசாவை ஐக்கிய அரபு அமீரக அரசு வழங்கியுள்ளது. … Read more

காஷ்மீரில் ஜி – 20 மாநாடு சீனா கடும் எதிர்ப்பு

பீஜிங்:அடுத்த ஆண்டு ஜம்மு – காஷ்மீரில் ‘ஜி – 20’ மாநாடு நடத்த, சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட, 20 நாடுகள் அடங்கிய கூட்டமைப்பு, ஆண்டுதோறும் கூடி சர்வதேச விவகாரங்கள், பொருளாதார வளர்ச்சி உள்ளிட்டவை குறித்து விவாதிக்கும். இந்தாண்டு ‘ஜி – 20’ மாநாடு, இந்தோனேஷியாவின் பாலி தீவில், நவ.,15ல் துவங்க உள்ளது. ‘அடுத்த ஆண்டு, இந்தியா தலைமையில் ஜி – 20 மாநாடு, ஜம்மு – காஷ்மீரில் நடக்கும்’ என, மத்திய அரசு … Read more

நாளை முதல் வரவிருக்கும் முக்கிய 3 வருமான வரி மாற்றங்கள்.. உஷாரா இருங்க!

நாளை ஜூலை மாதம் தொடங்கவுள்ள நிலையில் பல முக்கிய மாற்றங்கள் வரவுள்ளன. குறிப்பாக வருமான வரியில் வரவுள்ள மாற்றங்கள் என்ன? இது யாருக்கு எந்த மாதிரியான தாக்கத்தினை ஏற்படுத்தலாம். குறிப்பாக பல முறை ஏற்கனவே அவகாசம் கொடுக்கப்பட்டுள்ள பான் ஆதார் இணைப்பு, கிரிப்டோகரன்சி-க்கு டிடிஎஸ், டாக்டர்களுக்கு டிடிஎஸ் பிடித்தம் என பல மாற்றங்கள் வரவுள்ளன. இந்த 3 முக்கிய மாற்றங்கள் ஜூலை 1, 2022 முதல் அமலுக்கு வரவுள்ளன. இதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன? வாருங்கள் … Read more

உதய்பூர் கொளையாளிகள்… தாவத்-இ-இஸ்லாமி சித்தாந்தமும் வளர்ச்சியும்

உதய்பூரில் தையல்காரரைக் கொன்ற 2 பேரில் ஒருவரை, ராஜஸ்தான் போலீஸார் தாவத்-இ-இஸ்லாமி அமைப்புடன் தொடர்புபடுத்தி தெரிவித்துள்ளனர். மும்பையைத் தளமாகக் கொண்ட இந்தியாவில் உள்ள இந்தக் குழு பிரிந்து சென்ற சன்னி குழுவான தாவத்-இ-இஸ்லாமி அமைப்புக்கு பாகிஸ்தானுடன் எந்த தொடர்பும் இல்லை. உதய்பூரில் செவ்வாய்க்கிழமை தையல்காரர் கன்ஹையா லாலைக் கொன்ற கவுஸ் முகமதுவை ராஜஸ்தான் காவல்துறை தாவத்-இ-இஸ்லாமி அமைப்புடன் தொடர்புபடுத்தியுள்ளது. 40 ஆண்டுக்ளுக்கு முன்னர் சன்னி பரேல்வி மதமாற்றக் குழு பாகிஸ்தானில் தொடங்கப்பட்டது. இது பல மேற்கத்திய நாடுகளில் … Read more

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கா.? தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தீவிர ஆலோசனை.!

தமிழகத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். தலைமை செயலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத் துறை அதிகாரிகள் மற்றும் பல்வேறு … Read more

ஒரே சார்ஜில் மூன்று நாள்கள் நீடிக்கும் பேட்டரி… Nokia-வின் புதிய மாடலின் சிறப்பம்சங்கள் என்னென்ன?

நோக்கியா மொபைல்களை இன்று சந்தையில் பார்ப்பதே அரிதாகிவிட்டது. என்னதான் பல புதிய ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் போட்டிப்போட்டு சந்தையைப் பிடித்தாலும் நோக்கியாவிற்கெனத் தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. காரணம் அதன் தரமான Build quality தான். அதை இன்றும் தவறவிடாமல் பின்பற்றி வருகிறது நோக்கியா. ஆனால் அதிக விலை, சுமாரான ஃபெர்பார்மென்ஸ் மற்றும் software போன்றவைதான் இதன் பெரிய பிரச்னை. இதனால் வாடிக்கையாளர்களின் ஏகோபித்த ஆதரவை நோக்கிய மொபைல்கள் பெறவில்லை. எனினும் இதன் G சீரியஸ் மாடல்கள் ஓரளவிற்கு … Read more

நடத்தையில் சந்தேகம் : தூங்கி கொண்டிருந்த மனைவியின் தலையில் கம்பியால் அடித்து கொன்ற கணவன்

மதுரை அருகே தூங்கி கொண்டிருந்த மனைவியின் தலையில் கம்பியால் அடித்து கொலை செய்த கணவன் காவல்நிலையத்தில் சரணடைந்தார்.  டி.கல்லுப்பட்டி பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் – முருகாம்பாள் தம்பதி  தனியார் மில்லில் வேலை செய்து வந்த நிலையில், கடந்த ஒரு வருடமாக கிருஷ்ணன் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் முருகாம்பாள் தினமும் செல்போனில் வேறு ஒருவருடன் பேசி வந்ததால் சந்தேகமடைந்த கிருஷ்ணன் அவருடன் தொடர்ந்து சண்டையிட்டுள்ளார். இதுதொடர்பாக நேற்றிரவு கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டதில் … Read more