திருச்சி மாமன்றக் கூட்ட விவாதத்தின்போது வீண் அரட்டை – பார்வையாளர் பகுதியில் இருந்து வீடியோ பதிவு

திருச்சி: திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் விவாதத்தின்போது வீண் அரட்டை, வீடியோ பதிவு செய்வது என வழக்கத்துக்கு மாறாக நடைபெற்ற நிகழ்வுகளை தடுக்க வேண்டும் எனவும், இருக்கை ஒதுக்கீட்டை முறைப்படுத்த வேண்டும் எனவும் கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வெள்ளிவிழா கண்ட திருச்சி மாநகராட்சியில் மாதம் ஒருமுறை சாதாரணக் கூட்டமும், தேவைப்படும் நேரங்களில் அவசரக்கூட்டமும் நடத்தப்படுவது மரபு. மேயர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டங்களில் அனைத்து கவுன்சிலர்களும் பங்கேற்று தங்களது கருத்துகள், குறைகள், கோரிக்கைகளை … Read more

EXCLUSIVE: யார் இந்த ஏக்நாத் ஷிண்டே? – ஆட்டோ டிரைவர் முதல் முதல்வர் வரை..!

மகாராஷ்டிர மாநிலத்தின் முதலமைச்சராக பதவியேற்றுள்ள ஏக்நாத் ஷிண்டே குறித்த சுவாரசிய தகவல்களை தற்போது காண்போம். 288 சட்டப்பேரவைத் தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிர மாநிலத்தில், கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜக – சிவசேனா ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. தேர்தலில் இந்தக் கூட்டணி வெற்றி பெற்றது. எனினும், முதலமைச்சர் பதவியை தங்களுக்கு தர வேண்டும் என, சிவசேனா கட்சி பிடிவாதம் பிடித்தது. இதை சற்றும் எதிர்பார்க்காத பாஜக, முதலமைச்சர் பதவியை எல்லாம் … Read more

தாய் தந்தையுடன் சேர்ந்து 5 வயது தம்பியை கொலை செய்த சிறுவனின் புகைப்பட அடையாளம் வெளியீடு!

பிரித்தானியாவில் தாய் தந்தையுடன் சேர்ந்து 5 வயது தம்பியை கொன்று ஆற்றில் வீசிய 14 வயது சிறுவனின் புகைப்படம் மற்றும் அடையாளம் இன்று வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் பிரித்தானியாவின் தெற்கு வேல்ஸில் உள்ள சர்னில் உள்ள ஓக்மோர் நதியில் அதிவேக கார் விபத்தில் ஏற்பட்ட காயங்களுடன் 5 வயது சிறுவனான லோகன் முவாங்கி (Logan Mwangi) இறந்து கிடந்தார். விசாரணைக்கு பின் சிறுவன் கொலை செய்யப்பட்டு நதியில் வீசப்பட்டான் என்றும், அவனைக் கொன்றது அவரது … Read more

மராட்டியத்தில் பாஜக ஆட்சி கவிழ்க்கப்பட்டது: யஷ்வந்த் சின்ஹா விமர்சனம்

சென்னை: குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிடும் யஷ்வந்த் சின்ஹா பேட்டியளித்தார். திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவை திரட்ட சிறப்பான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார். மராட்டியத்தில் பாஜக ஆட்சி கவிழ்க்கப்பட்டுள்ளது; சிவசேனா அதிருப்தி தலைவர் தலைமையிலான அரசை பாஜக ஆதரிக்கிறது என கூறினார்.  

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர நீட் தேர்வு விவரங்களின் மையங்கள் வெளியீடு

புதுடெல்லி: நீட் தோ்வு மையங்கள் குறித்த விவரங்களை இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம் என தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது. எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர நீட் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வு, தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டுக்கான நீட் தகுதி தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் ஜூலை 17ம் … Read more

மதுரை: திமுக கொடி கட்டப்பட்ட காரில் ஆவின் பால் பொருட்கள் சென்றதாக சர்ச்சை

மதுரை ஆவின் பால் பண்ணையில் திமுக கட்சி கொடி கட்டிய வாகனத்தில் பால் பொருட்கள் ஏற்றப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மதுரை சாத்தாமங்கலம் பகுதியில் உள்ள ஆவின் பால் பண்ணையில் பல்வேறு முறைகேடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அவ்வப்போது அந்த முறைகேடுகள் தொடர்பாக புகார் எழுந்த பின்னர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆவின் பால் பண்ணையில் இருந்து திமுக கொடிகட்டிய ஆடம்பர கார் ஒன்றில் ஏராளமான பால் பொருட்கள் ஏற்றிச்செல்லப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி … Read more

தொழில் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்திய டாப் 7 மாநிலங்கள்! முதலிடத்தில் தமிழ்நாடு

தொழில் சீர்திருத்த திட்டங்களை நடைமுறைப்படுத்திய முதன்மை மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாட்டுக்கு இடம் கிடைத்துள்ளது. மத்திய அரசு வெளியிட்ட பட்டியலில் தமிழ்நாடு, ஆந்திரா, குஜராத், அரியானா, கர்நாடகா, பஞ்சாப், தெலங்கானா மாநிலங்கள் முதன்மை மாநிலங்களாக திகழ்கின்றன. தொழில் சீர்திருத்த செயல்திட்ட அடிப்படையில் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கான மதிப்பீட்டு அறிக்கையை, மத்திய வர்த்தக தொழில் துறை அமைச்சர் பியூஷ்கோயல் முன்னிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று டெல்லியில் வெளியிட்டார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட இந்த பட்டியலில் … Read more

மீட்சி பாதையில் பொருளாதாரம் : ரிசர்வ் வங்கியின் அறிக்கை| Dinamalar

மும்பை :நாட்டின் பொருளா தாரம், மீட்சிப் பாதையில் நன்றாக சென்று கொண்டிருப்பதாக, ரிசர்வ் வங்கியின் அறிக்கை தெரிவித்து உள்ளது. ரிசர்வ் வங்கியின் 25வது நிதி ஸ்திரத்தன்மை அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:உக்ரைன் போர், பணவீக்கத்தை கட்டுப்படுத்த மத்திய வங்கிகள் எடுக்கும் முடிவுகள், கொரோனா தொடர் பாதிப்புகள் ஆகியவை காரணமாக, உலக பொருளாதாரத்தில் நிச்சயமற்ற நிலை நிலவுகிறது. இந்தியாவை பொறுத்தவரை பணவீக்க அழுத்தம், புவிசார் அரசியல் அபாயங்கள் ஆகியவை, நிலைமையை கவனமாகக் கையாள வேண்டிய சூழலை ஏற்படுத்தி உள்ள போதிலும், … Read more

இயக்குனர் சங்கத்திற்காக ஒன்றிணையும் ஜீத்து ஜோசப் – பிரித்விராஜ்

மலையாளத்தில் திரிஷ்யம் 2, டுவல்த் மேன் என தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார் இயக்குனர் ஜீத்து ஜோசப். இதையடுத்து தற்போது மலையாள சினிமாவின் இளம் நடிகரான ஆசிப் அலி என்பவரை வைத்து கூமன் என்கிற படத்தை இயக்கி வருகிறார்.. இதை முடித்த கையுடன் அடுத்ததாக ஏற்கனவே மோகன்லாலை வைத்து இயக்கிய, கொரோனா தாக்கம் காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ள ராம் படத்தின் படப்பிடிப்பை தொடங்குகிறார் ஜீத்து ஜோசப். இந்த நிலையில் பிரித்விராஜ் நடிக்கும் படமொன்றை ஜீத்து ஜோசப் … Read more

வரலாற்று சரிவில் ரூபாய் மதிப்பு.. ‘பட்’ நிர்மலா சீதாராமன் சொல்வதைக் கொஞ்சம் கேளுங்க..!

ஜூன் காலாண்டின் கடைசி வரத்தக நாளான இன்று காலை வர்த்தகம் துவங்கும் போது மும்பை பங்குச்சந்தையும் சரி, அமெரிக்க டாலருக்கு இணையான ரூபாய் மதிப்பும் சரி உயர்வுடனே இருந்தது. ஆனால் வர்த்தக நேரம் முடியும் போது இரண்டுமே சரிவைச் சந்தித்தது மட்டும் அல்லாமல் பெரும் பாதிப்பை இந்தியச் சந்தையில் உருவாக்கியுள்ளது. வியாழக்கிழமை வர்த்தக முடிவில் அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 5 பைசா சரிந்து 78.98 ரூபாயாகச் சரிந்து கடுமையான பாதிப்பை எதிர்கொண்டு உள்ளது. 3 … Read more