நோன்பு கடைபிடித்த ரோகித் சர்மாவின் முன்னாள் காதலி! ஏற்பட்ட பரிதாப நிலை

நடிகையும், இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மாவின் முன்னாள் காதலியுமான சோபியா ஹயாத் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்தி பிக்பாஸ்-7 நிகழ்ச்சியில் பங்கேற்று புகழ்பெற்றவர் சோபியா ஹயாத். இவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் காதலி ஆவார். சில நாட்களுக்கு முன்னர் 21 நாட்கள் உண்ணாமல் நோன்பு இருக்கப்போவதாக சோபியா அறிவித்தார். ஆனால் உண்ணாவிரத முறை அவருக்கு ஒத்துப்போகாததால் உடல்நிலை பாதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அவரது உடலில் உப்பு அளவு குறைந்திருப்பது … Read more

ஆளுநர்களின் செயல்பாடு அரசியல் அமைப்பு சட்டப்படி இருக்க வேண்டும், ஆனால் தற்போது அப்படி இல்லை: யஷ்வந்த் சின்ஹா பேட்டி

சென்னை: ஆளுநர்களின் செயல்பாடு அரசியல் அமைப்பு சட்டப்படி இருக்க வேண்டும், ஆனால் தற்போது அப்படி இல்லை என யஷ்வந்த் சின்ஹா கூறியுள்ளார். மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசிடம் தவறாக நடக்கும் வேலையை தமிழ்நாடு ஆளுநரும் செய்து வருகிறார் என ஜனாதிபதி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.

ஆந்திராவில் இன்று காலை சோகம்; ஆட்டோ மீது மின்கம்பி அறுந்து விழுந்து தொழிலாளர்கள் உள்பட 8 பேர் பலி

திருமலை: ஆந்திராவில் இன்று காலை உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததில் லோடு ஆட்டோவில் சென்ற தொழிலாளர்கள் உட்பட 8 பேர் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர். ஆந்திர மாநிலம் சத்யசாய் மாவட்டம் குன்றம்பள்ளி கிராமத்தில் ஏராளமான விவசாயிகள் கூலி வேலை செய்து வருகின்றனர். அவர்கள் தினசரி மற்ற கிராமங்களுக்கு சென்று நாற்று நடவுப்பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் ஷேர் ஆட்டோக்களில் சென்றுவருவது வழக்கம். அதன்படி இன்று காலை 6.30 மணியளவில் … Read more

"அதிமுகவை காப்பாற்றுங்கள் சின்னம்மா" – மதுரையில் வைக்கப்பட்ட பேனரால் பரபரப்பு

ஒற்றை தலைமை விவகாரம் அதிமுகவில் வெடித்துள்ள நிலையில், அதிமுகவை காப்பாற்றுங்கள் சின்னம்மா என்ற வாசகங்கள் அடங்கிய பேனரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுகவில் ஒற்றை தலைமை தேவை என்ற கோரிக்கை எழுந்துள்ள நிலையில், எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தனித்தனியாக பிரிந்து தங்களது ஆதரவாளர்களுடன் செயல்பட்டு வருகின்றனர். நாள்தோறும் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அ.தி.மு.க. மாவட்டச்செயலாளர்கள் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், தொண்டர்கள் தன் பக்கம் உள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் பேசியது ஒற்றைத்தலைமை … Read more

'5 கட்ட சோதனைக்குப் பின் ககன்யான் விண்ணுக்கு ஏவப்படும்' – இஸ்ரோ தலைவர் சோமநாத்

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இஸ்ரோவின் விண்வெளிப் பயணத் திட்டம் ‘ககன்யான்’  ஐந்து  கட்ட ஆளில்லா சோதனைக்குப் பின் மனிதனுடன் விண்ணுக்கு செல்லும்” எனக் கூறியுள்ளார் இஸ்ரோ தலைவர் சோமநாத்.   மூன்று செயற்கைக் கோள்களை தாங்கியபடி, பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய இஸ்ரோ தலைவர் சோமநாத் , ”விண்ணுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. 3 செயற்கைக்கோள்கள் விண்ணுக்கு அனுப்பப்பட … Read more

அடுத்தடுத்த அப்டேட்களால் குஷியில் சிம்பு ரசிகர்கள் – ‘பத்து தல’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகர் சிம்புவின் நடிப்பில் உருவாகி வரும் ‘பத்து தல’ படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ படத்திற்கு பிறகு சிம்பு, கௌதம் வாசுதேவ் மேனன் 3-வது முறையாக இணைந்துள்ள படம் ‘வெந்து தணிந்தது காடு’. இந்தப் படம் வருகிற செப்டம்பர் 15-ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழுவினர் நேற்று முன்தினம் அறிவித்தனர். இந்நிலையில், அடுத்ததாக ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்துள்ள சிம்புவின் ‘பத்து தல’ படம் வருகிற டிசம்பர் 15-ம் … Read more

ஆதார் – பான் எண் இணைக்காவிடில் நாளை முதல் இரு மடங்கு அபராதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: ‘பான்’ எனும் வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணுடன், ‘ஆதார்’ எண்ணை இன்னும் இணைக்கவில்லை என்றால், நாளை(ஜூலை 1) முதல் இருமடங்கு அபராதம் செலுத்த வேண்டியதிருக்கும். அரசின் உத்தரவுப் படி, ஒவ்வொரு குடிமகனும், தன்னுடைய பான் எண் மற்றும் ஆதார் எண் ஆகியவற்றை கட்டாயம் இணைக்க வேண்டும். இந்த இரு எண்களை இணைப்பதற்கு நடப்பாண்டு மார்ச் 31ம் தேதி கடைசி நாள் என வருமான வரி துறை அறிவித்திருந்தது. … Read more

பாலியல் புகார் நடிகரின் ஜாமீனை ரத்து செய்ய உச்சநீதிமன்றத்தை நாடும் கேரள அரசு

மலையாள திரையுலகில் தயாரிப்பாளரும் நடிகருமான விஜய்பாபு மீது கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, சினிமா வாய்ப்பு தருவதாக கூறி தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அடித்துத் துன்புறுத்தியதாகவும் துணை நடிகை ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், வெளிநாட்டிற்குச் சென்று கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் தலைமறைவாக இருந்த விஜய்பாபு பின்னர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி கேரளா திரும்பினார். தொடர்ந்து போலீசாரின் விசாரணையில் ஆஜரான அவர், சமீபத்தில் கைது செய்யப்பட்டு, பின் ஜாமினிலும் … Read more

ஜூலை முதல் வட்டி அதிகரிக்கலாம்.. முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் கிடைக்குமா?

இந்தியாவில் வட்டி விகிதம் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், சில முதலீடுகளுக்கான வட்டி விகிதமும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. வங்கிகள் தங்களது டெபாசிட்களுக்கான வட்டி விகித்ததினை ஏற்கனவே அதிகரிக்க தொடங்கியுள்ளன. இந்த நிலையில் தொடர்ந்து பல காலாண்டுகளாகவே வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படாத நிலையில், ஜூலை மாதத்தில் அஞ்சலக சிறு சேமிப்பு திட்டங்களுக்கும் வட்டி விகிதம் மாற்றம் செய்யப்படலாம் என்ற பெருத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. நாளை முதல் வரவிருக்கும் முக்கிய 3 வருமான வரி மாற்றங்கள்.. உஷாரா இருங்க! … Read more

தமிழகத்தில் பள்ளிகளில் முகக்கவசம் கட்டாயம்-பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு.!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனையடுத்து பொது இடங்களில் மீண்டும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் தொற்று பரவ அதிக வாய்ப்புள்ளதால் மாணவர்கள் ஆசிரியர்கள் கட்டாயம் மாஸ்க் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பள்ளிக்கு வருகை தரும் போது அனைவரும் … Read more