உதய்பூர் சம்பவம்: “வன்முறை தீர்வல்ல…பிரதமர் மோடி உடனடியாக மக்களிடம் பேச வேண்டும்!" – அசோக் கெலாட்

நபிகள் நாயகம் விவகாரத்தில் பா.ஜ.க-வின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மாவின் கருத்துக்கு ஆதரவாக ஃபேஸ்புக்கில் வீடியோ வெளியிட்டதாக, கடந்த செவ்வாயன்று ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில், டெய்லர் ஒருவர் இரண்டு நபர்களால் தலைதுண்டித்துக் கொலைசெய்யப்பட்டார். இந்தச் சம்பவத்தில் கொலையாளிகளான கவுஸ், ரியாஸ் ஆகியோரை அன்றிரவே போலீஸார் கைதுசெய்தனர். மேலும் இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் மேற்கொண்டுவருகின்றனர். மோடி இந்த படுகொலை காரணமாக எந்த நேரத்திலும் கலவரம் ஏற்படலாம் என அதை தடுக்கும் … Read more

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.1.26 கோடி மோசடி செய்த இருவர் கைது

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, மதுரை ஆட்சியர் அலுவலகத்திலேயே நேர்காணல் நடத்தி ஒரு கோடியே 26 லட்ச ரூபாய் மோசடி செய்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். முனீஸ்வரன் என்பவன் தனக்கு அறிமுகமான சேகர் என்பவரின் மகனுக்கும், மகளுக்கும் ஆட்சியர் அலுவலகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி 8 லட்ச ரூபாய் பெற்று கொண்டு, பின் அவர்களது வீட்டிற்கு போலி பணி ஆணைகளை அனுப்பி உள்ளான். 26 பேரிடம், ஒன்றரை லட்ச ரூபாய் முதல் 8 … Read more

தென்னிந்தியாவில் முதல் முறை: திருநங்கைகளுக்கான ‘ரோட்டராக்ட் கிளப் ஆஃப் டிரான்ஸ்மாம்’ – கோவையில் தொடக்கம்

கோவை: தென்னிந்தியாவில் முதல் முறையாக, திருநங்கைகளுக்கான ‘ரோட்டராக்ட் கிளப் ஆஃப் டிரான்ஸ்மாம்’ கோவையில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த உலகில் ஆண்கள், பெண்கள் போல் மூன்றாம் பாலினத்தவர்களான திருநங்கைகளும் தற்போதைய சூழலில், சமுதாயத்தின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு ஆற்றுகின்றனர். பல்வேறு இடங்களில் திருநங்கைகள் தங்களைப் போல் உள்ளவர்களுடன் இணைந்து சிறு அமைப்பைத் தொடங்கி சேவையாற்றி வருகின்றனர். தங்களைப் போல் உள்ள ஆதரவற்ற திருநங்கைகளை மீட்டு அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த தேவையான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் திருநங்கைகளின் வாழ்க்கையை … Read more

விமானத்தில் புகுந்து அலறவிட்ட குருவி : அந்தரத்தில் பயணிகள் அச்சம்

சீனாவில், பல ஆயிரம் அடி உயரத்தில் பறந்த விமானத்துக்குள் திடீரென பறக்கத் தொடங்கிய குருவியை பணிப்பெண்கள் லாவமாகப் பிடித்தனர். அன்ஹுய் மாகாணத்தின் மீது ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமானம் பறந்த போது இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது. விமானம் பறக்கும் போது அந்த குருவி உள்ளே நுழைந்திருக்க வாய்ப்பில்லை என அந்த விமானத்தின் கேப்டன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். மேலும், பயணிகள் அமரும் இடத்தில் அந்த குருவி பறந்ததாகவும், பைலட்கள் விமானத்தை இயக்கும் காக்பிட்டிற்குள் அது நுழையாததால், பயணிகளின் உயிருக்கு … Read more

தனித்துவமான உள்ளூர் பொருட்களை உலக சந்தைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை – பிரதமர் மோடி

நாட்டில் சிறு, குறு, மத்திய தர தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க புதிய திட்டத்தை மத்திய அரசு வடிவமைத்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் இந்திய தொழில்முனைவோர் அமைப்பின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், உள்ளூர்ப் பொருளுற்பத்தியை ஊக்கப்படுத்தும் வகையில் 200 கோடி ரூபாய் வரையிலான கொள்முதலுக்கு உலகளாவிய டெண்டர் விடுவதைத் தவிர்க்கத் தீர்மானித்துள்ளதாகப் கூறினார். மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ளூர் அளவில் தனித்துவமான பொருட்களின் உற்பத்தியைப் பெருக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். Source link

சட்டை இல்லாமல் உங்களை பார்க்க சகிக்காது: மேற்கத்திய தலைவர்களுக்கு புடின் பதிலடி!

 ஜனாதிபதி புடினை மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் கேலி செய்து இருந்த நிலையில், மேற்கத்திய தலைவர்கள் சட்டை அணியாவிட்டால் அவர்களை பார்க்க சகிக்காது என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமர் புதின் கடுமையாக விமர்சித்துள்ளார். உக்ரைன் மீதான போர் நடவடிக்கை தொடங்கியதில் இருந்தே, மேற்கத்திய நாடுகளுக்கும் ரஷ்யாவிற்குமான அனைத்து நட்புறவுகளும் விரிசலடைய தொடங்கியது. அமெரிக்கா, பிரித்தானியா, ஜெர்மன், பிரான்ஸ் மற்றும் கனடா போன்ற நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யாவின் மீது பொருளாதார தடைகளை விதித்தன. ரஷ்யாவும் ஐரோப்பிய நாடுகளுக்கு வழங்கி … Read more

காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் முக்கிய விவகாரங்களில் கட்சி நிலைப்பாட்டுக்கு எதிராக பேசுவதை தவிர்க்க ஆலசோனை

காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் மனிஷ் திவாரி எம்.பி. மற்றும் ஆச்சார்யா பிரமோத் கிஷன் ஆகியோர் தெரிவித்திருந்த கருத்துகள் கட்சி நிர்வாகிகளுக்குள் சலசலப்பை ஏற்படுத்தியதை அடுத்து அவர்களுக்கு கட்சி நிலைப்பாட்டுக்கு எதிராக பேசுவதை தவிர்க்க ஆலசோனை வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அக்னிபாத் மற்றும் உதய்பூர் சம்பவம் தொடர்பாக இந்த இருவரும் வெளியிட்ட கருத்து கட்சி நிலைப்பாட்டுக்கு முற்றிலும் முரணாக இருந்ததை அடுத்து அவர்களுக்கு ஆலோசனை வழங்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. காங்கிரஸ் எம்.பி. மனிஷ் திவாரி எழுதியிருந்த கட்டுரை … Read more

பள்ளி வளாகத்தில் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை

சென்னை: பள்ளி வளாகத்தில் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும். வெப்ப பரிசோதனை கருவி மூலம் பரிசோதித்த பின்னரே உள்ளே அனுமதிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. வகுப்பறைகளில் உரிய காற்றோட்டம் அமைந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும் உத்தரவிட்டுள்ளது.

கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜவுக்கு பின்னடைவு ஏற்படும்: ஆய்வில் தகவல்

பெங்களூரு: கர்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலை எதிர்கொள்ள ஆளும் கட்சியான பாரதிய ஜனதா உள்பட அரசியல் கட்சிகள் மும்முரமாக தயாராகி வருகின்றன. இந்த தேர்தலை மனதில் வைத்து பா.ஜனதா கட்சியின் பெரிய தலைவர்கள் கர்நாடகம் பக்கம் தங்களின் கவனத்தை திருப்பியுள்ளனர். பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் கர்நாடகத்திற்கு அடிக்கடி வர தொடங்கியுள்ளனர்.பிரதமர் மோடி சமீபத்தில் கர்நாடகம் வந்து ரூ.33 ஆயிரம் கோடி மதிப்பீட்டிலான … Read more

தேர்தல் ஆணையத்தின் படி பொருளாளருக்கே முழு அதிகாரம் – ஓபிஎஸ் ஆதரவாளர் குன்னம் ராமச்சந்திரன்

அதிமுக தொண்டர்களின் நலன் கருதி, எடப்பாடி பழனிசாமியுடன் கலந்தாலோசிக்க ஓ. பன்னீர்செல்வம் தயாராக இருப்பதாக பெரம்பலூர் மாவட்ட செயலாளர் குன்னம் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். அதிமுக உட்கட்சி பிரச்சனை நாளுக்கு நாள் அக்கட்சியின் தொண்டர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது என்றே கூறலாம். கடந்த சில நாட்களாக ஒற்றை தலைமை விவகாரத்தால் அதிமுக இரண்டாக பிரிந்து கிடக்கின்றன. முன்னாள் முதல்வரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக கட்சிகள் நிர்வாகிகள் பலரும் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், ஓ.பி.எஸ். ஆதரவாளர்களும் அவ்வப்போது கருத்து தெரிவித்து வருகின்றனர். … Read more