புதிய கல்விக் கொள்கை தொடர்பான மாநில கல்வி அமைச்சர்கள் மாநாடு – புறக்கணித்தது தமிழ்நாடு அரசு!

அமைச்சர் பொன்முடி அண்மையில், “தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் புதிய கல்விக் கொள்கை என்பது நடைமுறைக்கு வரவேண்டிய அவசியமே இல்லை. அதை ஏற்றுக்கொள்ளவேண்டிய அவசியமும் இல்லை என்பதை முதலமைச்சர் தெளிவாக வலியுறுத்தியிருக்கிறார்” என்று திட்டவட்டமாக கூறினார். இந்தநிலையில், இன்று மற்றும் நாளை குஜராத்தில் புதிய கல்விக் கொள்கை குறித்து விவாதிக்க மாநாடு நடைபெறவிக்கிறது. இதைத்தொடர்ந்து, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையிலான மாநாட்டிற்கு அனைத்து மாநில கல்வி அமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அமைச்சர் பொன்முடி இந்த மாநாட்டில், கல்வி … Read more

கடன் வழங்கியதாக போலி ஆவணம் தயாரித்து, ரூ.97.37 லட்சம் மோசடி செய்த வங்கி பெண் மேலாளர்..!

வேலூர் அருகே, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கியதாக போலி ஆவணம் தயாரித்து 97 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த, கூட்டுறவு வங்கி பெண் மேலாளரை வணிக குற்றப்புலனாய்வு போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம் மத்திய கூட்டுறவு வங்கியின் குடியாத்தம் கிளையில், கடந்த 2018, 2019-ம் ஆண்டுகளில் மேலாளராக பணியாற்றிய உமாமகேஸ்வரி, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கியதாக போலி ஆவணங்கள் தயாரித்து மோசடியில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பான புகாரின்பேரில், உமா மகேஸ்வரியை போலீசார் … Read more

சீன லைட்டர்களுக்கு தடை விதித்து தீப்பெட்டித் தொழிலைப் பாதுகாக்க வேண்டும்: மநீம

சென்னை: தீப்பெட்டி உற்பத்தியெனும் “மேக் இன் தமிழ்நாடு” பிரச்சினைக்கு மத்திய அரசு விரைவில் தீர்வுகாண வேண்டும், மாநில அரசும் இவ்விவகாரத்தில் மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி வலியுறுத்தியுள்ளது இது குறித்து அக்கட்சி மாநில செயலாளர் செந்தில் ஆறுமுகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ” “மேக் இன் இந்தியா” திட்டத்தின் மூலம் இந்திய உற்பத்திப் பொருட்களை ஊக்குவிக்க வேண்டும் என்று மத்திய அரசு கூறிவந்தாலும், தமிழகத்தின் தூத்துக்குடி, விருதுநகர் … Read more

பாடகர் கேகே மரணம் தொடர்பாக கொல்கத்தா போலீஸ் வழக்கு: உடற்கூறாய்வு செய்ய திட்டம்

பிரபல பின்னணி இசை பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் (கேகே) மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 53. தமிழ் திரைப்படங்களில் சுமார் 66 பாடல்களை அவர் பாடியுள்ளார். காதல் வளர்த்தேன் (மன்மதன்), அப்படி போடு (கில்லி), காதலிக்கும் ஆசை (செல்லமே), நினைத்து நினைத்து (7ஜி ரெயின்போ காலனி), உயிரின் உயிரே (காக்க காக்க), ஸ்ட்ராபெர்ரி கண்ணே (மின்சார கனவு) உள்ளிட்ட பாடல்கள் இதில் அடங்கும். இந்நிலையில், கொல்கத்தாவில் நடைபெற்ற கல்லூரி கலாச்சார விழா ஒன்றில் பங்கேற்றுள்ளார் கேகே. … Read more

சர்ச்சைக்குள்ளாகும் பொது மன்னிப்பு விவகாரம்! ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கப் போகும் குழு

அரசியலமைப்பினால் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள பொதுமன்னிப்பு வழங்கும் அதிகாரம் தொடர்பில் சர்ச்சைக்குரிய விடயங்கள் தற்போது காணப்படுகிறது ஆகவே பொது மன்னிப்பு தொடர்பில் ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்க விசேட ஆலோசனை சபை ஸ்தாபிக்கப்பட வேண்டும் என முன்னாள் அமைச்சர் பைஸர் முஸ்தபா  தெரிவித்துள்ளார்.   சுதந்திரக் கட்சியின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். திருத்த யோசனைகள் முன்வைப்பு அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச்சட்ட மூலவரைபு தொடர்பில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி நீதியமைச்சரிடம் பல … Read more

ஆஸ்திரேலிய அமைச்சரவையில் புதிய சாதனை.!

ஆஸ்திரேலியாவில் இன்று புதிதாக அமைக்கப்பட்ட அமைச்சரவையில் முதன்முறையாக பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 21-ம் தேதி நடைபெற்ற தேர்தலில் தொழிலாளர் கட்சித் தலைவர் அந்தோணி அல்பேனிஸ் வெற்றிபெற்று கடந்த மாதம் 23-ம் தேதி பிரதமராக பொறுப்பேற்றார். இன்று பொறுப்பேற்றுக்கொண்ட அவரது அமைச்சரவையில் மொத்தம் உள்ள 23 பேரில் பெண்கள் 10 பேர் இடம்பெற்றுள்ளனர். கடந்த ஆட்சியில் அதிகபட்சமாக 7 பெண்கள் மட்டுமே அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தனர்.  Source link

காற்றில் கரைந்த கே.கே-யின் குரல்..!

தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் எண்ணற்ற பாடல்களைப் பாடிய பாடகர் கே.கே. இசை நிகழ்ச்சியின்போது மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 53. பிரபல பாலிவுட் பாடகர் கே.கே என அழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னத் கொல்கத்தாவில் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நிகழ்ச்சி முடிந்த பின்னர் இரவு 10.30 மணியளவில் தங்கியிருந்த ஓட்டலுக்கு வந்த அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது அவர் மாரடைப்பால் காலமாகிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 5 ஆயிரத்திற்கும் … Read more

இளையராஜா 75 – “ஆர்மோனியம் வாசித்து அடிவாங்கினேன்!”

பெத்த பிள்ளைக்கு ‘ராசய்யா’ என்று பெயர் வைத்த அந்த பண்ணைபுரத்துப் பெற்றோர், ‘இசையய்யா’ என்றே பெயர் வைத்திருக்கலாம். இந்த இசைக்குழந்தைக்கு 75 வயது என்றால் நம்புவது கடினம்தான். இந்த வயதிலும் தசை முழுக்க இசையாய் நடமாடுகிறார் இசைஞானி. கொடும் வெயில் சூழ்ந்த வெப்ப நேரத்தில் அந்த ராகப் பனிமலைக்குள் செல்லும் போது ஆர்மோனியத்தால் அபிஷேகம் செய்கிறது ராஜாவின் குரல். ஜூன் 2, அவர் முக்கால் நூற்றாண்டை எட்டிப்பிடிக்கிறார்.‘‘75 என்றால் ஆச்சர்யமாக இருக்கிறது” என்றால், ‘‘எனக்கு இல்லை’’ என்கிறார். … Read more

தரையிறங்கமுடியாமல் 15 நிமிடங்களாக லண்டனுக்கு மேலே தவித்த மகாராணியாரின் விமானம்: நடந்தது என்ன?

பிரித்தானிய மகாராணியார் ஓய்வெடுப்பதற்காக ஸ்காட்லாந்திலுள்ள பால்மோரல் எஸ்டேட்டுக்கு சென்றிருந்த நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் லண்டனுக்குப் புறப்பட்டுள்ளார். ஸ்காட்லாந்தின் அபர்தீன் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட மகாராணியாரின் விமானம், ஒன்றரை மணி நேரப் பயணத்திற்குப் பின் லண்டனை அடைந்துள்ளது. லண்டன் விமானப்படை விமான தளத்தில் அந்த விமானம் தரையிறங்கவேண்டும். ஆனால், தரையிறங்குவதற்குமுன் திடீரென ஒரு புயல் உருவாக, ஆலங்கட்டி மழை, மின்னல் என தொடர்ச்சியாக பல தடைகள் விமானத்தை தரையிறங்கவிடாமல் தடுக்க, விமானி மீண்டும் விமானத்தை மேலெழுப்ப, விமானம் … Read more

11 ஆம் வகுப்பு மாணவியை கத்தியால் குத்திவிட்டு ஓடிய வாலிபர் ரயில்முன் பாய்ந்து தற்கொலை?

திருச்சி: மணப்பாறை அருகே 11ம் வகுப்பு படிக்கும் மாணவியை கத்தியால் குத்திவிட்டு தப்பி  ஓடிய வாலிபரை காவல்துறையினர் தேடி வந்த நிலையில், அவர் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மணப்பாறை அத்திகுளம் (எ) கீரைத்தோட்டம் பகுதியை சேர்ந்த 11ம் வகுப்பு படிக்கும் மாணவி,. திண்டுக்கல் ரோட்டில் உள்ள அரசு உதவிபெறும் பெண்கள் மேல்நிலை பள்ளியில் படித்து வருகிறார். நேற்று மாலை பள்ளியின் இறுதிதேர்வு முடிந்து வீடு நோக்கி நடந்து சென்ற மாணவியை வாலிபர் … Read more