தடையை மீறி பா.ஜனதா பேரணி- அண்ணாமலை உள்பட 4 ஆயிரம் பேர் மீது வழக்கு

சென்னை: பெட்ரோல்-டீசல் விலையை தமிழக அரசு குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோட்டை நோக்கி பா.ஜனதா கட்சி பேரணி நடத்தியது. இதற்காக எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் திரண்டு அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. அதே நேரத்தில் சென்னையில் 144 தடை உத்தரவும் அமலில் உள்ளது. இந்த உத்தரவு அமலில் இருக்கும்போது யாரும் ஆர்ப்பாட்டம், போராட்டம் போன்ற நிகழ்வுகளில் ஈடுபடக்கூடாது என்று ஏற்கனவே போலீசார் … Read more

இந்த ஆண்டில் இந்தியாவில் யூ-டியூப்பில் இருந்து 11 லட்சம் வீடியோ நீக்கம்

புதுடெல்லி: பிரபல சமூக வலைதளமான யூ-டியூப்பில் இருந்து ஆட்சேபத்துக்குரிய வீடியோ நீக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் 11 லட்சத்து 75 ஆயிரத்து 859 வீடியோக்கள் யூ-டியூப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக சமூக வழிகாட்டுதல்கள் அமலாக்கம் வெளியிட்ட தகவலில் தெரிவித்துள்ளது. மற்ற நாடுகளை விட இந்தியாவில்தான் யூ-டியூப்பில் இருந்து அதிக வீடியோக்கள் நீக்கப்படுகிறது. யூ-டியூப் நிறுவனம் சமூக ரீதியில் அனுமதிக்கக்கூடாத வீடியோக்களுக்கான விதிகளை அமைத்து சமூக வழிகாட்டுதல் அமலாக்கம் மூலம் கண்காணிக்கிறது.

குரங்கு அம்மை நோய் அறிகுறி உள்ளவர்கள் உடலுறவு கொள்ளக்கூடாது

லண்டன்: கொரோனாவைத் தொடர்ந்து இப்போது குரங்கு அம்மை நோய் மக்களை மிரட்டி  வருகிறது. குறிப்பாக பிரிட்டனில் இந்நோய் பாதிப்பு அதிகம் உள்ளது. பிரிட்டனில் நேற்று புதிதாக 71 பேருக்கு குரங்கு அம்மை நோய் கண்டறியப்பட்டுள்ளதாகவும், இதுவரை 179 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவத்துள்ளது. உலக அளவில் 555 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறி உள்ளது.  கொரோனா போன்று குரங்கு அம்மையும், பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய பொருட்களை பயன்படுத்தும்போது மற்றவர்களுக்கு பரவும் தன்மை கொண்டது. … Read more

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை பதவிக்கு போட்டியிடும் திமுக, அதிமுக, காங். வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்பு..!!

சென்னை: தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை பதவிக்கு போட்டியிடும் திமுக, அதிமுக, காங். வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது. திமுக – 3, அதிமுக – 2, காங்கிரஸ் -1 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவதற்காக தாக்கல் செய்த 7 சுயேச்சை வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.

கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவர் பிரிஜேஷ் கலப்பா காங்கிரஸில் இருந்து விலகுவதாக அறிவிப்பு

பெங்களூரு: கர்நாடக காங்கிரசின் மூத்த தலைவர் பிரிஜேஷ் கலப்பா அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். காங்கிரஸ் கட்சியில் ஆர்வமின்மையை சுட்டிக்காட்டி விலகுவதாக அவர் தெரிவித்தார்.

இயற்கைக்கு மாறான மரணமாக வழக்குப்பதிவு; தலை, முகத்தில் காயம் -கே.கே.வின் கடைசி நிமிட வீடியோ

பிரபல பாடகர் கே.கே.வின் திடீர் மறைவு ரசிகர்களை ஒருபக்கம் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளநிலையில், அவரது மரணம் இயற்கைக்கு மாறான மரணம் என கொல்கத்தா காவல்துறையால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அவரது தலை மற்றும் முகத்தில் காயம் உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரபல பின்னணிப் பாடகரான கிருஷ்ணகுமார் குன்னத் என்கிற கே.கே. (53), நேற்றிரவு கொல்கத்தா நஸ்ரூல் மஞ்சாவில் உள்ள விவேகானந்தா கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசை நிகழ்ச்சியில், ரசிகர்களின் மொபைல் ஒளிவெள்ளத்தில் மிக எனர்ஜிட்டிக்காக பாடிக்கொண்டிருந்துள்ளார். … Read more

சாலை விபத்துகளில் தமிழகம் முதலிடம்| Dinamalar

புதுடில்லி : இந்தியாவில் 2020ல் 3,66,138 சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இதில் 1,20,806 பேர் பலியாகினர். மேலும் 3,48,279 பேர் காயமடைந்தனர் என மத்திய நெடுஞ்சாலை போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் சாலை விபத்துகள் அதிகம் நடந்த மாநிலங்களில் தமிழகமும் (45,484) உயிரிழப்பு எண்ணிக்கையில் உத்தரபிரதேசமும் (19,149) முதலிடம் வகிக்கின்றன. தமிழகம் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக அதிக சாலை விபத்துகள் நிகழும் மாநிலமாக நீடித்து வருகிறது.‘இந்தியாவில் 2020ல் பதிவான சாலை விபத்துகள்’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள புள்ளி … Read more

குரங்கு காய்ச்சல் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

புதுடெல்லி, குரங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. தொற்று பாதித்தவருடன் தொடர்பில் இருந்தவர்களை 21 நாட்கள் கண்காணிக்குமாறு கூறியுள்ளது. உலகம் முழுவதும் 24 நாடுகளில் சுமார் 400 பேருக்கு குரங்கு காய்ச்சல் பாதித்து இருப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. இதை இப்போதே பெருந்தொற்றாக அறிவிக்க முடியாது என்றபோதிலும், இந்நோய் அதிகமாக பரவக்கூடியது என்று தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை குரங்கு காய்ச்சல் நுழையவில்லை. இருப்பினும், பல நாடுகளில் பரவி இருப்பதால், அதை … Read more

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் : பெண்கள் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா ஜோடி வெளியேற்றம்

பாரீஸ், ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது.இதில் பெண்கள் இரட்டையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் சானியா மிர்சா (இந்தியா)- லூசி ஹ்ரடேக்கா (செக்குடியரசு) ஜோடி அமெரிக்காவின் கோகோ காப் -ஜெசிகா பெகுலா இணையை எதிர்கொண்டனர் . இந்த ஆட்டத்தில் 4-6,3-6 என்ற செட் கணக்கில் கோகோ காப் -ஜெசிகா பெகுலா இணையிடம் தோல்வி கண்டு சானியா மிர்சா -லூசி ஹ்ரடேக்கா ஜோடி வெளியேறியது தினத்தந்தி Related … Read more

உக்ரைனுக்கு நீண்ட தூர அதிநவீன ராக்கெட் அமைப்புகளை அனுப்பும் அமெரிக்கா – ஜோ பைடன் அறிவிப்பு

வாஷிங்டன், உக்ரைன் நாட்டின் மீது ரஷியா தொடுத்து வரும் போர் 100-வது நாளை எட்ட உள்ளது. தற்போது கிழக்கு உக்ரைனில் உள்ள மற்ற நகரங்களிலும் ரஷிய படைகள் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் கிழக்கு உக்ரைனின் லுஹான்ஸ்க் மாகாணத்தில் போர் குறித்து செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பிரான்ஸ் நாட்டு பத்திரிகையாளர் ஒருவர் நேற்று சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் உக்ரைனுக்கு நீண்ட தூர அதிநவீன ராக்கெட் அமைப்புகளை அமெரிக்கா … Read more