விருப்பம் இருந்தா வாங்க, இல்லாட்டி வீட்டிலேயே இருங்க.. ஐடி நிறுவனங்கள் முடிவால் ஊழியர்கள் குஷி..!

இந்திய ஐடி நிறுவனங்கள் கொரோனா தொற்று முடிந்த காரணத்தால் ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைக்க முடிவு செய்த நிலையில், அலுவலகத்திற்காக அழைக்கப்படும் ஊழியர்கள் அடுத்தடுத்து பணியை ராஜினாமா செய்யும் வழக்கம் தொடர்ந்தது. ஏற்கனவே ஊழியர்கள் தட்டுப்பாடு காரணமாக மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இந்தத் திடீர் வெளியேற்றம் பல நிறுவனங்களைப் பயமுறுத்தியது. இதனால் ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைக்கும் பணிகளைத் தற்காலிகமாக நிறுத்திவிட்டுத் தற்போது முன்னணி ஐடி சேவை நிறுவனங்கள் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. தடுமாறும் பங்குச்சந்தை.. … Read more

2022 ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி காரின் அறிமுக தேதி வெளியானது

வரும் ஜூன் 16, 2022 வென்யூ காம்பாக்ட் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை அறிமுகப்படுத்த ஹூண்டாய் இந்திய திட்டமிட்டுள்ளது. கூடுதலாக ஹூண்டாய் கார் நிறுவனம் இந்திய சந்தையில் பெர்ஃபாமென்ஸ் ரக வென்யூ N-Line மாடலை அறிமுகப்படுத்தும். கடந்த 2019 ஆம் ஆண்டின் மத்தியில் அறிமுகப்படுத்தப்பட்ட ஹூண்டாய் வென்யூ மூன்று வருடங்களுக்கு பிறகு மேம்பட்டுள்ளது. இப்போது மிட் லைஃப் ஃபேஸ்லிஃப்ட் வரவுள்ளது. காரின் அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு முன்னதாக, இந்நிறுவனம் வடிவமைப்பு படத்தை வெளியிட்டுள்ளது. 2022 ஹூண்டாய் வென்யூவை பற்றி அறிந்து … Read more

நாகர்கோவில் மாநகராட்சி கட்டடத்துக்கு கருணாநிதி பெயரா? எதிர்ப்பால் முடிவை மாற்றிய அரசு

நாகர்கோவில் புதிய மாநகராட்சி கட்டடத்துக்கு கருணாநிதி பெயர் சூட்டப்படும் என்ற அறிவிப்புக்கு பல தரப்பிலும் எதிர்ப்பு எழுந்த நிலையில், கட்டடத்துக்கு முன்பிருந்த கலைவாணர் பெயரே சூட்டப்படும்’ என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த முடிவை அ.தி.மு.க., – பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் வரவேற்றுள்ளன. நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்துக்கு வடசேரியில் அண்ணா விளையாட்டு அரங்கம் அருகே புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. அங்கு ஏற்கனவே இருந்த கலைவாணர் அரங்கத்தை இடித்துவிட்டு புதிதாக இந்த அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற … Read more

இன்றைய (01.06.2022) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.!!

தமிழகத்தின் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் குறைந்துள்ளது. தொழில்துறை தேக்கத்தை தொடர்ந்து உலகம் முழுவதும்  முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பினர். பங்கு சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தின் முதலீடு செய்து வருகின்றனர். நேற்று 22 கார்ட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ. 4775 ஆகவும், 8 கிராம் ஆபரண தங்கம் ரூ. 38200-க்கு விற்பனை செய்யப்பட்டது. 24 காரட் தங்கம் விலை, … Read more

கணவரை பிரிந்த பெண்; பாலியல் வன்கொடுமை, 6 முறை கருகலைப்பு – கடை உரிமையாளர் வீட்டின் முன் தீக்குளிப்பு

ஈரோடு மாவட்டம், கர்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரோஜா (வயது 37, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகியுள்ளது. ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தன் பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். தீக்குளித்த பெண் அங்கிருந்தபடியே, சிமெண்ட், டைல்ஸ் கடையில் வேலை பார்த்து வருகிறார். கடை உரிமையாளர் வீடு கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ளது. திடீரென உரிமையாளர் வீட்டுக்கு வந்த பெண், உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். அலறல் சத்தம் கேட்டு … Read more

நகை வியாபாரியிடம் இருந்து 6.6 கிலோ தங்கம், ரூ.14 லட்சம் கொள்ளை… கைவரிசை காட்டிய வெள்ளை சட்டை கும்பல்

தஞ்சாவூரில், நகை வியாபாரியிடம் இருந்து 6 கிலோ 600 கிராம் தங்கம் மற்றும் 14 லட்சம் ரூபாய் பணத்தை பறித்துச்சென்ற 9 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடிவருகின்றனர். தஞ்சையை சேர்ந்த மணி என்பவர், பல்வேறு பகுதிகளில் உள்ள நகைக்கடைகளில் ஆர்டர் எடுத்து மொத்தமாக நகை விற்பனை செய்து வருகிறார். நேற்று இரவு ஆர்டர் எடுத்த நகைகளை, அவர் கடைகளில் கொடுத்து வந்த போது, மணியை பின்தொடர்ந்து வந்த வெள்ளை சட்டை அணிந்த 9 பேர் கொண்ட … Read more

சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் அதிகரிக்கும் கரோனா தொற்று: ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் சுற்றறிக்கை

சென்னை: சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் அதிகரிக்கும் கரோனா தொற்று காரணமாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுகாதாரத்துறை செயலாளர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். சென்னை மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்துவருகிறது. ஏப்ரல் 15 ஆம் தேதி நிலவரப்படி 22 ஆக இருந்த அன்றாட கரோனோ பாதிப்பு தற்போது 100 ஆக பதிவாகி வருகிறது. தொடர்ந்து அடுத்தடுத்த நாட்கள் மற்றும் வார இறுதிகளில் பாதிப்புகள் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நோய்த் தடுப்பு … Read more

மக்களவை தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெறுவது நடக்காது: மம்தா பானர்ஜி கணிப்பு

மக்களவை தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெறுவது நடக்காது என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். ஏனெனில், பாஜகவின் வெறுப்பு, வன்முறை நிறைந்த அரசியலை நாடு வரவேற்காது என்று அவர் தனது நிலைப்பாட்டுக்கு விளக்கம் கூறியுள்ளார். மோடி அரசின் 8 ஆண்டு நிறைவை பாஜக கொண்டாடி வருகிறது. இதனையொட்டி பிரமர் மோடி பேசுகையில், “2014க்கு முன்னர் ஊழல், பல கோடி ரூபாய் மதிப்பிலான முறைகேடுகள், குடும்ப ஆட்சி, தீவிரவாத அமைப்புகள் … Read more

உக்ரைன் படையெடுப்பு – ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு ஐரோப்பிய யூனியன் தடை..!

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு 97 நாட்களை எட்டிய நிலையில் ஐரோப்பிய யூனியன் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்குத் தடையை அறிவித்துள்ளது. மூன்றில் இரண்டு பங்கு இறக்குமதிகளுக்குத் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் 90 சதவீத கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்தி விடப்போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கச்சா எண்ணெய் விலை சர்வதேச அளவில் கடுமையாக உயர்ந்துள்ளது.ஒரு பேரல் கச்சா எண்ணெய் 122 புள்ளி 84 டாலருக்கு சர்வதேச சந்தையில் விலை நிர்ணயிக்கப்பட்டது.  Source link

இந்தியாவின் நியூ ஜல்பைகுரி – டாக்கா இடையே புதிய ரயில் போக்குவரத்து.. ரயில்வே அமைச்சர்கள் காணொலி மூலம் திறந்து வைப்பு..!

மேற்கு வங்கத்தின் நியூ ஜல்பைகுரி, வங்கதேசத் தலைநகர் டாக்கா இடையிலான மிட்டாலி விரைவு ரயில் போக்குவரத்தை இரு நாட்டு ரயில்வே அமைச்சர்களும் காணொலி மூலம் கொடியசைத்துத் தொடக்கி வைத்தனர். கொரோனா சூழலில் நிறுத்தப்பட்ட ரயில் போக்குவரத்து, இப்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. டெல்லியிலும் டாக்காவில் இருந்தும் இருநாட்டு ரயில்வே அமைச்சர்களும் காணொலி மூலம் ரயில் போக்குவரத்தைத் தொடக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ரயில் போக்குவரத்தின் மூலம் இருநாட்டு உறவுகள் மேலும் வலுவடைந்துள்ளதாகத் தெரிவித்தார். Source … Read more