ஒரே நாளில் பாம்பு கடித்து 5 பேர் சிகிச்சை பலனின்றி மரணம் என்பது தவறானது.. திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி டீன் மறுப்பு..!
திருவாரூரில் ஒரே நாளில் பாம்பு கடித்து 5 பேர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வந்த செய்தி தவறானது என்று டீன் ஜோசப்ராஜ் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாம்பு கடிக்கு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் மட்டுமே உயிரிழந்துள்ளார். பாம்புக் கடிக்கான அனைத்து மருந்துகளும் இந்த மருத்துவமனையில் கையிருப்பு உள்ளதாக கூறிய அவர், பாம்பு கடித்தால் காலம் தாழ்த்தாமல் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு வந்தால் இறப்பு விகிதத்தை குறைக்கலாம் … Read more