இந்தியாவில் ஒரே நாளில் 2,745 பேருக்கு கொரோனா..2,236 பேர் குணமடைந்தனர்..6 பேர் பலி!!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 2,745 பேர் பாதித்துள்ளனர்.* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,31,60,832 ஆக உயர்ந்தது.* புதிதாக 6 பேர் இறந்துள்ளனர்.* இதனால், … Read more

கடன் தொல்லையால் தந்தை தற்கொலை – குடிமைப்பணி தேர்வில் மகள் தேர்ச்சி

கர்நாடகாவில் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட விவசாயியின் மகள், 6-வது முயற்சியில் யு.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். தும்குர் மாவட்டத்தைச் சேர்ந்த அருணா இந்திய அளவில் 308-வது ரேங்க் எடுத்து குடிமைப்பணி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். பெரும்பாலான விண்ணப்பதாரர்களைப் போல், குடிமைப்பணி தேர்வுக்கு தயாராவது அருணாவின் முதல் இலக்கு அல்ல. ஆரம்பத்தில், அவள் ஒரு பொறியியல் பட்டம் மற்றும் ஒரு சாதாரண வேலை பெற எண்ணினாள். ஆனால் வாழ்க்கை அவளுக்கு வேறு திட்டங்களைக் கொண்டிருந்தது. அருணாவின் … Read more

ஜும்மா மசூதி சேதம் சீரமைக்க கோரிக்கை| Dinamalar

புதுடில்லி : டில்லியில் நேற்று முன் தினம் இடியுடன் கூடி கனமழை பெய்ததில் ஜும்மா மசூதியில் சேதம் அடைந்த மேல்புறப் பகுதியை சரி செய்துதர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டில்லியில் கடும் கோடை சுட்டெரித்து வரும் நேரத்தில் நேற்று முன் தினம் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. பலத்த காற்றும் வீசியது. இதில், சாலையோர மரங்கள் வேரோடு சாய்ந்தன.இதில், வரலாற்று சிறப்புமிக்க டில்லி ஜும்மா மசூதியின் மேல்புறத்தை அலங்கரிக்கும் கூம்பு வடிவிலான பகுதி சேதம் அடைந்தது.இதை சரி செய்து … Read more

விக்ரம் பார்த்த பிறகு மம்முட்டி சம்மதிப்பார் : கமல் நம்பிக்கை

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்துள்ள ‛விக்ரம்' திரைப்படம் வரும் ஜூன் 3ஆம் தேதி பான் இந்தியா ரிலீஸாக வெளியாக இருக்கிறது. இதற்காக கமல் சென்னை, மும்பை, ஐதராபாத், கொச்சி என இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் மாறிமாறி கலந்துகொண்டு வருகிறார். அந்த வகையில் கேரளாவுக்கு சென்ற கமல் அங்கே மோகன்லால் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று இந்த படத்தை புரமோட் செய்தார். மேலும் மற்றொரு புரமோஷன் நிகழ்ச்சியில் கமல் பேசும்போது மம்முட்டியுடன் தான் நடிக்க … Read more

அதிகரிக்கும் குரங்கு அம்மை | Dinamalar

காங்கோ : ஆப்ரிக்க நாடான காங்கோவில் குரங்கு அம்மை பரவியுள்ளது. நைஜீரியாவில் குரங்கு அம்மை பாதிப்புக்கு முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.பல வெளிநாடுகளில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு பரவி வருகிறது. ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து தற்போது ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் பரவி வருகிறது. இங்கிலாந்தில் இதுவரை 21 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பல நாடுகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.ஸ்பெயின், போர்ச்சுகல், கனடா, அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளில் 200 பேர் … Read more

மாநிலங்களவை தேர்தல்: 22 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பா.ஜ.க.

புதுடெல்லி, பல்வேறு மாநிலங்களில் நடைபெறும் மாநிலங்களவை தேர்தலுக்கான 22 வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க. நேற்று வெளியிட்டது. 2 சுயேச்சை வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்கவும் இக்கட்சி முடிவு செய்துள்ளது. மாநிலங்களவையில் காலியாகும் 57 உறுப்பினர்களுக்கான தேர்தல் வருகிற 10-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க.வின் 18 பேர் பட்டியல் கடந்த 29-ந் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி, நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கர்நாடகாவில் இருந்தும், வர்த்தக மந்திரி பியூஷ் கோயல் மராட்டியத்தில் இருந்தும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் … Read more

சர்வதேச ஆக்கி தரவரிசை : இந்திய பெண்கள் அணி 6-வது இடத்துக்கு முன்னேற்றம்

சர்வதேச ஆக்கி சம்மேளனம் வெளியிட்ட புதிய தரவரிசை பட்டியலில் இந்திய பெண்கள் அணி ஸ்பெயினை பின்னுக்கு தள்ளி 6-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இது இந்தியாவின் மிகச்சிறந்த தரநிலை இதுவாகும். தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் நெதர்லாந்து ,2வது இடத்தில் அர்ஜென்டினா ,3வது இடத்தில் ஆஸ்திரேலியா,4வது இடத்தில் இங்கிலாந்து ,5 வது இடத்தில் ஜெர்மனி அணிகள் உள்ளன . தினத்தந்தி Related Tags : ஆக்கி

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 50.35 கோடியாக உயர்வு

வாஷிங்டன், சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 53 கோடியே 26 லட்சத்து 12 ஆயிரத்து 686 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே … Read more

புகை பிடிப்பவர்களால் இந்தியாவுக்கு 766 மில்லியன் டாலர் செலவு: WHO தகவல்

புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களால் இந்தியாவுக்கு ஆண்டுக்கு 766 மில்லியன் டாலர் செலவு என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. புகையிலையின் கெடுதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும் புகையிலை பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக இந்தியாவில் புகையிலை விற்பனை கடந்த சில ஆண்டுகளாக உச்சத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. புகையிலை குப்பை இந்த நிலையில் குப்பையில் கொட்டப்படும் புகையிலை கழிவு பொருட்களை சுத்தப்படுத்துவதால் ஏற்படும் செலவு இந்தியாவுக்கு 766 மில்லியன் … Read more

அழகிய பெரியவன் எழுதும் ‘ஒவ்வொரு விரலிலும் உலகம்’ – 5

அழகிய பெரியவன் பெயரில் என்ன இருக்கிறது? நாடு நவீனமாகத் தொடங்கிய காலகட்டத்திலிருந்து ஒரு பெயர் இந்திய மக்களின் மனசாட்சியை தொடர்ந்து தொந்தரவு செய்துகொண்டிருக்கிறது. கீழ்மட்டத்திலிருந்து மேல்மட்டம் வரைக்கும் விசையூக்கம் கொண்டதாக அறியப்படுகிறது. இந்தியாவில் வைக்கப்படும் எல்லா பெயர்களையும் போல அதுவும் ஒரு பெயர்தான் என கடந்துச் சென்றுவிட முடியாதபடிக்கு இந்திய மக்கள் ஆளுக்கொரு அர்த்தத்தை அதிலிருந்து புரிந்துகொள்கிறார்கள். அல்லது ஆளுக்கொரு அர்த்தத்தை அதற்கு வழங்குகிறார்கள். அப்பெயரை வழிபடுகிறார்கள். அல்லது வெறுக்கிறார்கள். மூளையில் ஆழமாகச் சென்று மாயங்களை நிகழ்த்திவிடும் … Read more