#BREAKING || பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை  உட்பட 5000 பேர் மீது வழக்கு பதிவு.!

தமிழக அரசை கண்டித்து தலைமைச் செயலகம் நோக்கி போராட்டம் நடத்திய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட 5000 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு மே 21-ஆம் தேதி அதிரடியாக குறைத்தது. அதன்படி டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும், பெட்ரோல் விலை லிட்டருக்கு 9 ரூபாய் 50 காசுகளும் குறிக்கப்பட்டன. இதனையடுத்து சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், டீசல் விலை லிட்டர் ரூ.94.24-க்கும் … Read more

மும்பை: குடும்ப பிரச்னை; ஸ்டார் ஹோட்டலில் குழந்தையை பெற்று கழிவறையில் விட்டுச்சென்ற பெண்

மும்பையின் தென்பகுதியில் ஒர்லி என்னும் இடத்தில் இருக்கும் 5 நட்சத்திர ஹோட்டலின் 8 வது மாடியில் துப்புரவு பணியாளர் ஒருவர் பணியில் ஈடுபட்டிருந்தார். அந்நேரம் குழந்தை ஒன்று அழும் சத்தம் கேட்டது. இதனால் சந்தேகம் அடைந்த அப்பணியாளர் குழந்தையின் அழுகுரல் வரும் பக்கத்தை நோக்கி சென்றார். அங்கு இருந்த கழிவறை ஒன்றில் இருந்து சத்தம் வந்தது. உள்ளே சென்று பார்த்த போது அங்கு இருந்த குப்பை தொட்டியில் பிறந்து சில மணி நேரமே ஆகியிருந்த குழந்தை ஒன்று … Read more

திருவாரூரில் ஒரே நாளில் பாம்பு கடித்து 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வந்த செய்தி தவறானது – டீன் ஜோசப்ராஜ்

திருவாரூரில் ஒரே நாளில் பாம்பு கடித்து 5 பேர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வந்த செய்தி தவறானது என்று டீன் ஜோசப்ராஜ் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாம்பு கடிக்கு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் மட்டுமே உயிரிழந்துள்ளார். பாம்புக் கடிக்கான அனைத்து மருந்துகளும் இந்த  மருத்துவமனையில் கையிருப்பு உள்ளதாக கூறிய அவர்,  பாம்பு கடித்தால் காலம் தாழ்த்தாமல் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு வந்தால் இறப்பு விகிதத்தை குறைக்கலாம் … Read more

மற்றவர்களை தரமின்றி விமர்சனம் செய்ய சிவாஜி பெயரைப் பயன்படுத்த வேண்டாம்: இரா.முத்தரசனுக்கு ராம்குமார் வேண்டுகோள்

சென்னை: பிறரை தரமின்றி விமர்சிப்பதற்கு, நடிகர் சிவாஜியின் பெயரைப் பயன்படுத்த வேண்டாம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் இரா.முத்தரசனுக்கு, சிவாஜியின் மகன் ராம்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார் கணேசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் இரா.முத்தரசன்,பிரதமர் மோடியை விமர்சிக்கும்போது, தேவையின்றி தந்தை சிவாஜியின் பெயரை இழுத்திருக்கிறார். நடிகர் சிவாஜி கணேசன், பிரதமர் மோடி ஆகியோர், இடைவிடாத மற்றும்அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பால்உயர்ந்த இடத்தை … Read more

ஆர்யன் கான் வழக்கில் விசாரணை நடத்திய அதிகாரி சென்னைக்கு இடமாற்றம்

மும்பை: ஆர்யன் கான் வழக்கில் விசாரணை நடத்திய அதிகாரி சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்தி நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் கடந்த ஆண்டு, சொகுசுக் கப்பலில் போதைப் பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டார். அவருடன் மேலும் சிலரும் கைதாயினர். மும்பை போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வான்கடே இந்த கைது நடவடிக்கையில் ஈடுபட்டார். வழக்கில் இருந்து ஆர்யன் கானை விடுவிக்க அவர் லஞ்சம் கேட்டதாக புகார் எழுந்ததையடுத்து, மும்பையில் உள்ள பகுப்பாய்வு மற்றும் … Read more

வரலாற்றில் முதல் முறையாக இலங்கை எதிர்கொண்டுள்ள ஆபத்து

இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அடுத்த சில மாதங்களுக்கு தேவையான நிதி உதவிகளை பெறுவதற்கென்றால், வேறு ஒரு நாடு இலங்கைக்காக பிணையாக வேண்டிய அளவிற்கு நாடு வீழ்ச்சியடைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். இலங்கையின் வரலாற்றில் இவ்வாறானதொரு நிலைமை ஒரு போதும் ஏற்பட்டதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான கடன்களை பெறுவதற்கு வேறு நாடு இலங்கைக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என உலக வங்கி ஏற்கனவே கூறியுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார். ஆபத்தான நிலையில் … Read more

புதின் எதிர்ப்பாளர் அலெக்சி நவால்னி மீது கிரிமினல் வழக்கு.!

ரஷ்ய அதிபர் புதின் விமர்சகரான எதிர் கட்சி தலைவர் அலெக்சி நவால்னி மீது 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கும் வகையில் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தீவிரவாத அமைப்பை உருவாக்கி அரசு மற்றும் அதிகாரிகளுக்கு எதிரான சதிச்செயல்களில் ஈடுபட முயன்றதாக நவால்னி மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே அறக்கட்டளை நிதி மோசடி மற்றும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறையில் உள்ள நவால்னி, இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் கூடுதலாக 15 ஆண்டுகள் சிறையில இருக்க … Read more

மனைவியைக் கொன்று சூட்கேஸில் அடைத்த சைக்கோ ஐ.டி.ஊழியர்..! ஆடையின்றி அடித்து உதைத்த கொடுமை..!

விவாகரத்து தரமறுத்து தாய்வீட்டுக்குச் சென்ற மனைவியை சமாதானப்படுத்தி அழைத்து வந்த சைக்கோ குணம் கொண்ட ஐ.டி.ஊழியர் ஒருவர், அந்த பெண்ணைக் கொலை செய்து சூட்கேசில் அடைத்து ஏரியில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம், திருப்பதி கோரலகுண்டா பகுதியைச் சேர்ந்த பத்மாவுக்கும், திருப்பதி சத்திய நாராயணபுரம் பகுதியைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினியர் வேணுகோபால் என்பவருக்கும் 3 ஆண்டுகளுக்கு முன் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த நான்கே மாதங்களில் பத்மாவை தனியாக … Read more

பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உட்பட 5000 பேர் மீது வழக்கு பதிவு

சென்னை: பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உட்பட 5000 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலையை குறைக்க கோரி மாநில அரசுக்கு எதிராக பாஜகவினர் நேற்று போராட்டம் நடத்தினர். உரிய அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக, பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உட்பட 5000 பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. சட்ட விரோதமாக கூடுதல், அரசு அதிகாரி உத்தரவை மீறி செயல்படல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் … Read more

வணிக கியாஸ் சிலிண்டர் விலை 135 ரூபாய் குறைப்பு

சென்னை : சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் கியாஸ் சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.  ஒவ்வொறு மாதமும் 1-ம் தேதி எண்ணெய் நிறுவனங்கள் புதிய விலையை நிர்ணயித்து அறிவிக்கின்றன. அந்த வகையில் இந்த மாதத்திற்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக கேஸ் சிலிண்டரின் விலை 135 ரூபாய் குறைந்துள்ளது. 2508 ரூபாய்க்கு விற்று வந்த வணிக கேஸ் சிலிண்டர் 2373 ரூபாய்க்கு விற்பனையாகி … Read more