காங்கிரசுக்காக இனிமேல் பணியாற்ற மாட்டேன்: பிரசாந்த் கிஷோர்

பாட்னா : பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், பீகார் மாநிலம் முழுவதும் ‘ஜன் சுராஜ்’ என்ற பெயரில் யாத்திரை நடத்தி வருகிறார். அதையொட்டி, வைஷாலி மாவட்டத்துக்கு வந்த அவர், அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- நாட்டில் தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலைக்கேற்ப காங்கிரஸ் கட்சி தன்னை மாற்றிக் கொள்ளவில்லை. நான் நல்ல யோசனைகளை சொன்னபோதிலும், தனது வியூகத்தை மாற்றிக்கொள்ள காங்கிரஸ் முன்வரவில்லை. அது காங்கிரசுக்கு கெடுதலாக அமையும். எனது 10 ஆண்டு … Read more

எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தி கொழும்பு துறைமுகத்தில் இலவச மிதிவண்டி சேவை தொடக்கம்

கொழும்பு : இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. அந்நாட்டு அரசு பெரும் கடன் சுமையில் சிக்கியுள்ளது. இதனால் கடும் விலைவாசி உயர்வு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு உள்ளிட்ட பல அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் திண்டாடுகின்றனர். இலங்கை விமானங்கள், திருவனந்தபுரம் விமான நிலையத்தில் எரிபொருளை நிரப்பி செல்கின்றன. இந்த நிலையில், இலங்கையின் பிரதான துறைமுகமான கொழும்பு துறைமுகத்தில், இலவச மிதிவண்டி சேவை நேற்று தொடங்கப்பட்டது. இதன் … Read more

இலங்கையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு 3 பேர் அகதிகளாக வருகை!!

ராமேஸ்வரம் : இலங்கையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு 3 பேர் அகதிகளாக வருகை புரிந்துள்ளனர். இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தனுஷ்கோடிக்கு வந்துள்ளனர். அதிகாலையில் தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கோதண்டராமர் கோயில் எதிரே கடற்கரையில் வந்து இறங்கிய இவர்களை மரைன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இலங்கையில் இருந்து இதுவரை 83 தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு அகதிகளாக வந்துள்ளனர்.

90ஸ் கிட்ஸ்-க்கு மிகவும் பிடித்த பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் மரணம்…. அதிர்ச்சியில் ரசிகர்கள்; பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல்!!

கொல்கத்தா : பிரபல திரைப்பட பின்னணி இசைப்பாடகர் கே.கே என்று அழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னத் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 53. கொல்கத்தாவில் நடைபெற்ற பல்வேறு கலாச்சார விழா ஒன்றில் பங்கேற்ற கிருஷ்ணகுமார் குன்னத்திற்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தான் தங்கி இருந்த விடுதிக்கு திரும்பிய அவரது உடல்நிலை மேலும் மோசம் அடைந்த காரணத்தால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். கிருஷ்ணகுமார் குன்னத்தின் திடீர் மறைவிற்கு … Read more

“தென்மேற்கு பருவமழை: எதிர்பார்த்ததை விட அதிகரிக்க வாய்ப்பு”- வானிலை ஆய்வு மையம்

இந்தியாவில் தென்மேற்குப் பருவமழை எதிர்பார்த்ததை விட அதிகம் பெய்ய வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. இந்தியாவில் தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்ததை விட அதிகமாக பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வானிலை மைய இயக்குநர் மிருத்யுஞ்சய் மொகபாத்ரா, “நடப்பு பருவமழை காலத்தில் மழை அளவு நீண்ட கால சராசரியில் 103% ஆக இருக்கும். இது எதிர்பார்க்கப்பட்ட அளவை விட அதிகம். குறிப்பாக தெற்கு மற்றும் மத்திய இந்திய பகுதிகளில் மழைப்பொழிவு அதிகமாகவும், வடகிழக்கு … Read more

ஒர்பாலின ஈர்ப்பாளர்கள் சேர்த்து வைத்தது நீதிமன்றம்| Dinamalar

கொச்சி : கேரளாவில், பெற்றோர்களால் பிரிக்கப்பட்ட ஓரினச்சேர்க்கையாளர்களான இரு பெண்களை அம்மாநில உயர் நீதிமன்றம் நேற்று இணைத்து வைத்தது. கேரளாவின் எர்ணாகுளம் மற்றும் கோழிக்கோட்டை சேர்ந்த இரு பெண்கள், பள்ளியில் ஒன்றாக படிக்கும்போது தோழிகள் ஆகினர். ஒருகட்டத்தில் இருவரும் ஓரினச்சேர்க்கையாளர்கள் என்பது தெரியவந்தது. இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, கோழிக்கோட்டை சேர்ந்த பெண் வீட்டைவிட்டு வெளியேறி தன் தோழியுடன் எர்ணாகுளத்தில் வந்து தங்கினார். இந்நிலையில், கோழிக்கோட்டை சேர்ந்த பெண்ணின் பெற்றோர், தங்கள் பெண்ணை வலுக்கட்டாயமாக அழைத்து சென்றனர். … Read more

விக்ரம் – பஹத், விஜய் சேதுபதியின் கேரக்டர் வெளியீடு

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், ஷிவானி நாராயணன் உள்பட பலர் நடிப்பில் உருவாகி உள்ள படம் விக்ரம். ஜூன் மூன்றாம் தேதி திரைக்கு வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் புரமோஷன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் விக்ரம் என்ற கேரக்டரில் கமல் நடித்துள்ளார். அமர் என்ற வேடத்தில் பஹத் பாசில் நடிப்பதாக நேற்று போஸ்டர் வெளியிட்டனர். தற்போது விஜய் சேதுபதி நடிக்கும் வேடத்தின் கேரக்டர் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். … Read more

இன்று முதல் டெபாசிட்டுக்களுக்கான வட்டியை உயர்த்தியது சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ்: எவ்வளவு தெரியுமா?

சென்னையை சேர்ந்த சுந்தரம் ஹோம் பைனான்ஸ் லிமிடெட் நிறுவனம் புதிய வட்டி விகிதத்தை அறிவித்துள்ளது. ஜூன் 1 முதல் அதாவது இன்று முதல் டெபாசிட்டுக்களுக்கான வட்டி விகிதம் அதிகரித்து உள்ளதாகவும் அது குறித்த விவரங்களையும் அறிவித்துள்ளது. சுந்தரம் ஹோம் பைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் டெபாசிட் செய்பவர்கள் இந்த புதிய வட்டி விகிதத்தை அறிந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். வொர்க் ஃப்ரம் ஹோம்-க்கு எந்தெந்த நகரங்கள் பெஸ்ட்? சுந்தரம் ஹோம் பைனான்ஸ் சென்னையை சேர்ந்த சுந்தரம் பைனான்ஸ் லிமிடெட் ஒரு … Read more

கட்டணமே இல்லாமல் தபாலில் கோவில்பட்டி கடலை மிட்டாய்: அஞ்சல் துறை சிறப்பு ஏற்பாடு

Post office delivers Peanut candy to home without service charge: கோவில்பட்டி கடலை மிட்டாயை சேவைக் கட்டணம் இல்லாமல் தபாலில் பெற்றுக் கொள்ளலாம் என அஞ்சல் துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கோவில்பட்டி முதுநிலை அஞ்சல் கண்காணிப்பு அலுவலர் சிவப்பிரகாசம் விடுத்துள்ள பத்திரிக்கை செய்தியில், “புவிசார் குறியீடு பெற்ற கோவில்பட்டி கடலை மிட்டாயின் பெருமையை உலக அளவில் கொண்டு செல்ல, இந்திய அஞ்சல் துறை கடந்த அக்டோபர் மாதம் சிறப்பு அஞ்சல் உறையை வெளியிட்டது. … Read more

#BREAKING : இலங்கையில் இருந்து 3 பேர் அகதிகளாக தமிழகம் வருகை.!

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அந்த நாட்டின் அன்னிய செலவாணி கையிருப்பு குறைந்து பெட்ரோல் டீசலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது இதனால் தொழில்கள் பாதிப்படைந்து அத்தியாவசிய பொருட்களின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகின்றன. அதன் காரணமாக இலங்கை அரசுக்கு எதிராக கொழும்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்கள் எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடும் விலை உயர்வு வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற பல்வேறு காரணங்களுக்காக இலங்கை தமிழர்கள் கள்ளப்படகு மூலம் கடல் வழியாக தனுஷ்கோடிக்கு … Read more