விழுப்புரம்: கல்குவாரி பணி; கொத்தடிமைகளாக பழங்குடி மக்கள்; 11 வருடங்களுக்கு பின் கிடைத்த நீதி!

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள மேல்மாம்பட்டு கிராமத்தை சேர்ந்த கணேசன் என்பவர், வேட்டைக்காரன்பட்டி எனும் பகுதியில் கல்குவாரி நடத்தி வந்துள்ளார். கடந்த 2010ம் ஆண்டு, இவரின் கல்குவாரியில், கல்லுடைக்கும் இருளர் சமூக பழங்குடி மக்கள் சிலர் கொத்தடிமைகளாக நடத்தப்பட்டுவதாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியருக்கு புகார் சென்றுள்ளது. புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட கல்குவாரிக்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்ட வருவாய்த்துறை அதிகாரிகள், 6 குழந்தைகள் உட்பட 13 குடும்பங்களை சேர்ந்த 35 பேரை மீட்டுள்ளனர். கல்குவாரி – … Read more

முழு மதுவிலக்கு..! ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு? ஜான் பாண்டியன் கேள்வி..!

Follow –> இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த அதிமுக ஆட்சியின்போது திமுக எதிர்க்கட்சியாக இருந்து வந்தது. அப்போது டாஸ்மாக்குக்கு எதிரான கொடுத்த வாக்குறுதிகளும், நடத்திய நாடகங்களும் மறவாதீர்கள். மீண்டும் நினைவு படுத்துகிறேன். மக்களைப் பற்றி சிந்திக்காமல் மதுக்கடைகள் பற்றி சிந்திக்கும் எடப்பாடி அரசை கண்டிக்கிறோம் என்று கோஷமிட்டதை மறவாதீர்கள். தற்போது திமுக அரசு தமிழக மக்கள் நலனுக்கு எதிராக டாஸ்மாக் என்பது எந்த வகையில் தமிழகத்தில் தினசரி குறைந்த தொற்று பரவல் குறையும் விகிதம் … Read more

பட்டாக்கத்தியுடன் உலா வந்த மர்ம கும்பல்.. பொதுமக்களை தாக்கி மிரட்டி அட்டூழியம்..!

சென்னை சேலையூரில் புகைப்படத்துடன் உலா வந்த மர்ம கும்பல் ஒன்று அப்பகுதி மக்களை பட்டாகத்தியால் தாக்கிய சம்பவம் நடைபெற்றுள்ளது. முத்தாலம்மன் கோவில் தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் வீட்டின் அருகே நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது 6 இரு சக்கர வாகனத்தில் கஞ்சா போதையில் ஹெல்மெட் அணிந்து வந்த 12பேர் கிருஷ்ணமூர்த்தியிடம் புகைப்படம் ஒன்றை காட்டி இவரை தெரியுமா என்று கேட்டுள்ளனர். இதற்கு தெரியாது என்று பதிலளித்த போது தாங்கள் மறைத்து வைத்திருந்த பட்டாக்கத்தியை எடுத்து அவரை … Read more

தமிழகத்தில் தங்கியிருக்கும் வட மாநிலத்தவர் விவரங்களை சேகரிக்க டிஜிபி உத்தரவு

சென்னை: ராமேஸ்வரம் அருகே மீனவப் பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்டார். இந்த குற்றச் செயலில் ஈடுபட்டதாக, வட மாநிலத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை மயிலாப்பூரில் தொழிலதிபர், மனைவியுடன் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவர்களிடமிருந்து 1,000 பவுன் தங்கம்மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இது தொடர்பாக நேபாளத்தைச் சேர்ந்த கார் ஓட்டுநர், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மற்றொருவர் என 2 பேர் கைது செய்யப்பட்டனர். இதேபோல, மேலும் சில குற்ற … Read more

நீதிமன்ற தடையை மீறி வெளியான கியான்வாபி கள ஆய்வறிக்கை – தங்களுக்கு எதிரான சதி என இந்து தரப்பினர் புகார்

புதுடெல்லி: வாரணாசி மாவட்ட நீதிமன்ற தடையை மீறி, கியான்வாபி மசூதி கள ஆய்வறிக்கை ஊடகம் மற்றும் சமூக வலைதளங்களில் வைரலானது. இது தங்களுக்கு எதிரான சதி என இந்து தரப்பினர் புகார் கூறியுள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலின் சிங்கார கவுரி அம்மன் தரிசன வழக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 18-ல்தொடரப்பட்டது. இந்த வழக்கில் கோயிலை ஒட்டியுள்ள கியான்வாபி மசூதியில் கள ஆய்வு நடத்த வாரணாசி சிவில் நீதிமன்ற நீதிபதி ரவி குமார் … Read more

இந்தியா சார்பில் இலங்கைக்கு மேலும் 40 ஆயிரம் டன் டீசல்

புதுடெல்லி: இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியும் எரிபொருள் தட்டுப்பாடும் நிலவுகிறது. இந்த நெருக்கடியில் இருந்து மீள இலங்கைக்கு இந்தியா உதவி வருகிறது. ஏற்கெனவே தமிழகத்தில் இருந்து அரிசி, பால் பவுடர், மருந்துப் பொருட்கள் கப்பல் மூலம் இலங்கைக்கு அனுப்பப்பட்டது. இந்தியாவில் இருந்து பல தவணைகளாக பெட்ரோல், டீசலும் அனுப்பப்பட்டது. கடந்த 21-ம் தேதி 40,000 டன் டீசலை இந்தியா அனுப்பி வைத்தது. இந்நிலையில், இலங்கைக்கு மேலும் 40,000 டன் டீசலை கப்பல் மூலம் இந்தியா அனுப்பி வைத்தது. … Read more

உக்ரைன்-ரஷ்யா போர் முடிவுக்கு வர போப் பிரான்சிஸ் சிறப்பு பிரார்த்தனை..!

உக்ரைன் மீதான போரினை ரஷ்யா கைவிட வேண்டுமென போப் பிரான்சிஸ் தொடர்ந்து தெரிவித்து வரும் நிலையில், ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் முடிவுக்கு வந்து உலகில் அமைதி நிலவுவதற்காக சிறப்பு பிராத்தனை மேற்கொண்டார். இத்தாலி ரோம் நகரின் தேவாலயத்தில் நடைபெற்ற சர்வதேச பிராத்தனையில், பிஷப்கள்-பாதிரியார்கள், வாடிகனுக்கான உக்ரைன் தூதர் மற்றும் பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, கிறிஸ்துவ மத கடவுளின் தாய் என்றழைக்கப்படும் மேரி அன்னையிடம், வன்முறை மற்றும் பழிவாங்கும் இதயங்களை சமாதானம் செய்ய வேண்டி … Read more

காங். பிரமுகர் சித்து மூசேவாலா கொலை வழக்கில் ஒருவர் கைது..!

பஞ்சாபில் தொழில் முறை முன் விரோதத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட பாடகர் சித்து மூசேவாலாவின் கொலையாளிகளில் ஒருவரை உத்தரகாண்ட் போலீசார் டேராடூனில் கைது  செய்துள்ளனர். பஞ்சாப் காவல்துறையிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார்   மன்பிரீத் சிங் பாவ் என்பவரை போலீசார் மானசா நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி 5 நாள் போலீஸ் காவலில் அடைத்தனர். கடந்த 28 ஆம் தேதி காங்கிரஸ் பிரமுகர் சித்து மூசாவாலா வின் பாதுகாப்பு விலக்கப்பட்டதையடுத்து அவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பேரதிர்வை ஏற்படுத்தியிருந்தது. லாரன்ஸ் பிஷ்னோய் என்ற ரவுடி … Read more

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைப்பு

சென்னை: வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது. பொதுவாக சமையல்,வணிக கேஸ் சிலிண்டர் விலை மாதம் தோறும் முதல் தேதியில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.அதன்படி,கடந்த மே 1 ஆம் தேதி 19 கிலோ எடைகொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் ரூ.102.50 உயர்த்தின. வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டது பேக்கரி,தேநீர் கடை உள்ளிட்ட நடுத்தர தொழில் முனைவோருக்கு மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில்,அதன்பின்னர் வீட்டு உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் ரூ.50 … Read more

வேலை பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளத்தையே இந்தியா விரும்புகிறது- ராகுல் காந்தி

புதுடெல்லி: மத்திய கலாச்சார அமைச்சகம் இந்திய மரபணு வரலாறு மற்றும் இந்தியாவில் இனத்தின் தூய்மை குறித்து ஆய்வு திட்டத்திற்காக டிஎன்ஏ விவரக்குறிப்பு கருவிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய அதிநவீன இயந்திரங்களை வாங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சரும், அம்மாநில காங்கிரஸ் தலைவருமான சித்தராமையா, ஜவஹர்லால் நேருவின் நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய போது,  ஆர்.எஸ்.எஸ். காரர்கள் பூர்வீக இந்தியர்களா? என கேள்வி எழுப்பினார்.  இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆரியர்களா? … Read more