புதுச்சேரியில் இருந்து தமிழகத்தில் இணையப் போகும் பகுதி.? பரபரப்பை ஏற்படுத்திய சுவரொட்டி.!!

புதுச்சேரி ஆட்சியாளர்களால் காரைக்கால் மாவட்டத்தை புறக்கணிக்கப்படுவதாக பல ஆண்டுகளாக குற்றம்சாட்டி வரும் நிலையில், காரைக்காலை தமிழகத்தோடு இணைக்க வேண்டும் என கோரி ஒரு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.  இந்த இயக்கத்தின் சார்பில் காரைக்கால் முழுவதும் முக்கிய சாலைகள், மக்கள் கூடும் இடங்களில் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. இந்த சுவரொட்டியில் அசிங்கம்! அவமானம்!! வெட்கம்!! புதுவை அரசே …? நாங்கள்… என்ன அனாதைகளா…! காரைக்கால் மக்களுக்கு காலம் காலமாக எவ்வித அரசு நலத்திட்டங்கள் அனைத்தும் வழங்காத புதுவை அரசை நாங்கள் புறக்கணிக்கின்றோம். … Read more

அடேய் அப்ரண்டிஸ் டாக்டர், பெண் வயிற்றுக்குள்ள இதெல்லாமாடா வைத்து தைப்பீங்க…? அலட்சியத்தால் 7 மாதமாக அவதி..!

காட்டுமன்னார் கோவிலில் ஏ.கே.செந்தில்குமார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின் போது பெண்ணின் வயிற்றில் துணி,நூல், இரும்புத்துண்டு மற்றும் ஊசி உள்ளிட்டவற்றை வைத்து தைத்துவிட்டதாக, 7 மாதமாக வலியால் அவதிக்குள்ளான அந்த பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே மாதர் சூடாமணி கிராமத்தை சேர்ந்த 36 வயது பெண் கலைச்செல்வி. இவருக்கு திருமணமாகி கணவர் பிரிந்து சென்ற நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கர்ப்பப்பை கோளாறு சம்பந்தமாக சிதம்பரம் சாலையில் காட்டுமன்னார் கோவிலில் இயங்கும் ஏ.கே.செந்தில் … Read more

பெரியார் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைப் படிப்புகளுக்கு அங்கீகாரமில்லை: மாணவர்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு எச்சரிக்கை

சென்னை: பல்கலைக்கழக மானியக்குழுவின்(யுஜிசி) செயலர் ரஜினீஷ் ஜெயின் வெளியிட்ட அறிவிப்பு: சேலம் பெரியார் பல்கலை. தொலைநிலைப் படிப்புகளுக்கு அங்கீகாரம் பெறாமல் மாணவர் சேர்க்கை நடத்திவருவது தெரியவந்துள்ளது. இது விதிகளை மீறும் செயலாகும். பெரியார் பல்கலை.யில் உள்ள தொலைநிலைப் படிப்புகளுக்கு 2020 ஜூன் மாதம்வரையே அனுமதி தரப்பட்டுள்ளது. அதன்பின் எவ்வித படிப்புக்கும் பல்கலை. அங்கீகாரம் பெறவில்லை. இதனால் பெரியார் பல்கலை. மீது உரிய நடவடிக்கை எடுக்க யுஜிசி முடிவெடுத்துள்ளது. அதன்படி அடுத்த 2 கல்வியாண்டுகள் பெரியார் பல்கலை.யின் தொலைநிலைக்கல்வி … Read more

10 கோடி விவசாயிகளுக்கு ரூ.21,000 கோடி நிதியுதவி – பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார்

சிம்லா: நான் பிரதமர் கிடையாது, ஒவ்வொரு இந்திய குடும்பத்தின் உறுப்பினர் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் 10 கோடி விவசாயிகளுக்கு ரூ.21,000 கோடி நிதியுதவியை அவர் வழங்கினார். கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார். கடந்த 2019 தேர்தலிலும் பாஜக வெற்றி பெற்றதையடுத்து, 2-வது முறையாக மோடி பிரதமரானார். அவர் ஆட்சிப் பொறுப்பேற்று 8 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதையொட்டி இமாச்சல பிரதேச … Read more

நேபாள விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்பு – விபத்து தொடர்பாக விசாரிக்க 5 பேர் கொண்ட குழு நியமனம்

காத்மாண்டு: விபத்துக்குள்ளான நேபாள விமானத்தின் கருப்புப் பெட்டி நேற்று கண்டெடுக்கப்பட்டது. நேபாள நாட்டிலுள்ள தாரா விமான நிறுவனத்துக்குச் சொந்தமான ‘ட்வின் ஓட்டா் 9 என்-ஏஇடி’ என்ற சிறிய ரக விமானம் பொக்காராவிலிருந்து மத்திய நேபாளத்தில் உள்ள பிரபல சுற்றுலா தலமான ஜோம்சோம் நோக்கி கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 9.55 மணிக்குப் புறப்பட்டது. விமானம் புறப்பட்ட 15 நிமிடங்களில், தரைக் கட்டுப்பாட்டு அறையுடனான விமானத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து விமானம் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் விமானத்தைத் தேடும் … Read more

மியான்மரில் பேருந்து நிறுத்தம் அருகே வெடிகுண்டு தாக்குதல்.!

மியான்மர் யங்கூன் நகரில் பேருந்து நிறுத்தம் அருகே நடந்த வெடிகுண்டு தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். ராணுவ ஆட்சிக்கு எதிரான அமைப்பு தாக்குதல் நடத்தியதாக பாதுகாப்புத்துறை குற்றஞ்சாட்டிய  நிலையில், எந்த அமைப்பும் இதுவரை தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை. பேருந்துக்காக காத்திருந்தவர்கள் என பலர் தாக்குதலில் படுகாயம் அடைந்தனர். சம்பவ இடத்தில் இருந்து வெடிக்காத குண்டு ஒன்றை பாதுகாப்பு வீரர்கள் பறிமுதல் செய்தனர்.   Source link

காஷ்மீரில் பண்டிட் இனத்தவர்கள் பாதுகாப்பு கோரி போராட்டம்.!

காஷ்மீரில் பண்டிட் இனத்தவரை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி பள்ளியில் ஆசிரியை ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து பண்டிட் இனத்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு தங்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று ஆசிரியர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். பாதுகாப்பு உறுதி செய்யப்படாதவரை பள்ளிகளுக்கு விடுமுறை விடுமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே சுட்டுக் கொல்லப்பட்ட ஆசிரியை ரஜினியின் உடல் அவருடைய சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அங்கு அவருக்கு இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.     … Read more

இலங்கையில் இருந்து அகதிகளாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தனுஷ்கோடி வருகை

தனுஷ்கோடி: பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில் இருந்து அகதிகளாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தனுஷ்கோடி வந்தடைந்துள்ளனர். இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு உள்ளதால் அனைத்து பொருட்களின் விலையும் பலமடங்கு உயர்ந்துள்ளது. அதிலும் முக்கியமாக காய்கறிகள் மற்றும் உணவு பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்தது. இதன் காரணமாக இலங்கையில் ஏழை எளிய மற்றும் நடுத்தர குடும்பங் களை சேர்ந்த மக்கள் வாழ முடியாத நிலை ஏற்பட் டுள்ளது. ஆகையால் வாழ வழியின்றி … Read more

லைவ் அப்டேட்ஸ்: ரஷியாவில் இருந்து உரங்கள், தானியங்கள் ஏற்றுமதிக்கு அமெரிக்கா ஆதரவு

01.06.2022 04.50: உக்ரைனுக்கு ஆயுத உதவி வழங்குவது குறித்து, அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் லாயிட் ஆஸ்டின், உக்ரேனிய பாதுகாப்பு மந்திரி ஒலெக்ஸி ரெஸ்னிகோவ் உடன் தொலைபேசி மூலம் ஆலோசனை நடத்தினார். உக்ரைன் பாதுகாப்பை பலப்படுத்துதல், போரிடுவதற்கு ஆயுத விநியோகம் குறித்து விவாதம் நடைபெற்றதாக ரெஸ்னிகோவ் தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைனுக்கு 40 பில்லியன் டாலர் உதவி வழங்கும் உத்தரவில் கையெழுத்திட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 03.40: ரஷியாவில் இருந்து உரங்கள் மற்றும் … Read more