மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது: 6 இடங்களுக்கு 13 பேர் மனு தாக்கல்; இன்று பரிசீலனை
சென்னை: தமிழகத்தில் விரைவில் காலியாகும் 6 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு, அரசியல் கட்சி களின் வேட்பாளர்கள் 6 பேர் உட்பட 13 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இன்று (ஜூன் 1) வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட உள்ளன. தமிழகத்தில் இருந்து தேர்வான 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்காலம் முடிவடைய உள்ளதையொட்டி, புதிய உறுப்பினர்களுக்கான தேர்தல் ஜூன்10-ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. சட்டப்பேரவை உறுப்பினர்கள் பலத்தின் அடிப்படையில் இந்த தேர்தல் நடைபெறுவதால், 6-ல் … Read more