’2019ல் முதலில் பரிந்துரைத்ததே இவரைத்தான்’ – கமல்ஹாசனை கௌரவித்த ஐக்கிய அரபு அமீரகம்!
நடிகர் கமல்ஹாசனுக்கு கோல்டன் விசா வழங்கி ஐக்கிய அரபு அமீரகம் கௌரவித்துள்ளது. நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என தமிழ் சினிமாவில் பன்முகத் திறமைக் கொண்டவராக வலம் வருபவர் உலக நாயகன் கமல்ஹாசன். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘விக்ரம்’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், ஐக்கிய அரபு அமீகரகத்தின் கோல்டன் விசா கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்தியாவைச் சேர்ந்த பிரபலங்களான ஷாருக்கான், அமிதாப்பச்சன், மோகன் லால், … Read more