வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-53

ஸ்ரீஹரிகோட்டா: வெளிநாட்டு செயற்கைக்கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட். சிங்கப்பூர் நாட்டின் ‘டிஎஸ்-இஓ’ உட்பட 3 வெளிநாட்டு செயற்கைக்கோள்களும் சூரிய ஒத்திசைவான துருவ சுற்றுப்பாதையில் திட்டமிட்டபடி நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ), வணிக ரீதியாக வெளிநாட்டு செயற்கைக்கோள்களையும் விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது. அதன்படி, சிங்கப்பூருக்கு சொந்தமான டிஎஸ்-இஒ, நியூசர் உட்பட 3 செயற்கைக்கோள்கள் பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து மாலை … Read more

மகாராஷ்டிர முதல்வராக பதவியேற்றார் ஏக்நாத் ஷிண்டே – பாஜகவுக்கு துணை முதல்வர் பதவி!

மகாராஷ்டிர மாநிலத்தின் 20வது முதலமைச்சராக சிவசேனா அதிருப்தித் தலைவர் ஏக்நாத் ஷிண்டே பதவியேற்றார். மகாராஷ்டிர மாநிலத்தின் பரபரப்பான அரசியல் திருப்பங்களுக்கு இடையே, முதலமைச்சர் பதவியை, சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று ராஜினாமா செய்தார். அவரது கட்சியைச் சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே, சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்களை திரட்டிக் கொண்டு போர்கொடி தூக்கியதால், உத்தவ் தாக்கரே முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டார். இதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சியான பாஜக உடன் சேர்ந்து, ஆட்சி அமைக்க … Read more

எகிப்து நாட்டின் தீவு ஒன்றில் கரை ஒதுங்கிய மர்ம விலங்கு ; வேற்றுகிரக மிருகம் போல இருந்ததாக தகவல்

எகிப்து நாட்டின் தீவு ஒன்றின் கடற்கரையில் அதிசய உருவம் கொண்ட விலங்கு ஒன்று இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு ஏலியன் போலவும், கடல் குதிரை போன்றும் இது காட்சியளிக்கிறது. தாடைக்குள் மற்றொரு சிறிய தாடையுடன், கூரிய பற்களுடன் கடற்கரையில் இதனை கண்டதாக சுற்றுலா பயணி ஒருவர் தெரிவித்துள்ளார். இறந்து கிடந்த அந்த விலங்கிற்கு கண்கள் இல்லை. அது எந்த வகையான விலங்கு, அது எப்படி இறந்து கரை ஒதுங்கியது என்பது குறித்து ஆராயப்பட்டு வருகிறது.   Source … Read more

பங்கு சந்தை வீழ்ச்சி : ஜூன் மாதத்தில் முதலிட்டாளர்களுக்கு ரூ. 13 லட்சம் கோடி இழப்பு

இந்திய பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக, ஜூன் மாதம் மட்டும் முதலிட்டாளர்களுக்கு 13 லட்சம் கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை அதிகரித்தது, தொடரும் உக்ரைன் -ரஷ்ய போர் உள்ளிட்ட காரணங்களால் இந்திய பங்கு சந்தைகள் கடுமையாக வீழ்ச்சியடைந்தன. குறிப்பாக மும்பை சென்செக்ஸ் குறியீட்டெண் சென்செக்ஸ் ஜூன் மாதத்தில் இரண்டாயிரத்து 300 புள்ளிகள் வீழ்ச்சியடைந்தது.  Source link

காலே டெஸ்ட்: இரண்டாவது நாளிலும் கெத்து காட்டிய இலங்கை

காலே டெஸ்டின் இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் அவுஸ்திரேலிய அணி 313 ஓட்டங்கள் எடுத்தது. அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் 212 ஓட்டங்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. பின்னர் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி, முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 98 ஓட்டங்கள் எடுத்திருந்தது. இன்று அந்த அணி இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. ஆனால் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறுது நேரம் பாதிக்கப்பட்டது. மழை … Read more

இரண்டாயிரத்தை தாண்டியது…. தமிழ்நாட்டில் இன்று 2069 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 909 பேருக்கு பாதிப்பு…

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 2069 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 909, செங்கல்பட்டில் 352, திருவள்ளூரில் 100 மற்றும் காஞ்சிபுரத்தில் 71 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்திருக்கிறது. கோவை 96, திருச்சி 62, கன்னியாகுமரி 61, திருநெல்வேலி 46, மதுரை 41, தூத்துக்குடி 38, சேலம் 28, ஈரோடு மற்றும் சிவகங்கையில் தலா 24 பேருக்கும், ராணிப்பேட்டை 22, விழுப்புரம் 18, திருப்பூர் 16, விருதுநகர் மற்றும் தென்காசியில் தலா 14 பேருக்கும், … Read more

அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடைவிதிக்க கோரிய வழக்கில் ஓபிஎஸ், ஈபிஸ் பதிலாக நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடைவிதிக்கக் கோரிய வழக்கில் ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் சூரியமூர்த்தி என்பவர் வழக்கு தொடர்ந்தார். கட்சி நிர்வாகிகள் தேர்தலை எதிர்த்த வழக்கு நிலுவையில் உள்ளதால் பொதுக்குழு கூட்டத்தை கூட்ட தடைவிதிக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

மகாராஷ்டிரா முதலமைச்சராக பதவியேற்றார் ஏக்நாத் சிண்டே

மும்பை: மகாராஷ்டிரா முதலமைச்சராக ஏக்நாத் சிண்டே பதவியேற்றார். சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ வான ஏக்நாத் சிண்டேவுக்கு ஆளுநர் பகத்சிங் கோஷியாரி பதவி பிராமணம், ரகசிய காப்பு பிரமாணம் செய்துவைத்தார்.

”எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கியதே பா.ஜ.க.தான்” – நயினார் நாகேந்திரன்

எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் ஆக்கியதே பாஜகதான் என்று அக்கட்சியின் மாநில துணைத் தலைவரும், எம்.எல்.ஏ.வுமான நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். அஇஅதிமுக கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா, கடந்த 2016-ம் ஆண்டு மறைந்தப் பிறகு, அக்கட்சியில் பல்வேறு குழப்பங்கள் நீடித்து வருகின்றன. குறிப்பாக கடந்த சில வாரங்களாக ஒற்றைத் தலைமை விவகாரம் சூடு பிடித்துள்ளது. இதில் 99 சதவிகித நிர்வாகிகளின் ஆதரவு இ.பி.எஸ்.க்கு தான் உள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வரும்நிலையில், இரட்டை தலைமை தான் சரி என்று ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் … Read more

3 மணி நேரத்தில் மனம் மாறிய பட்னாவிஸ்.. பால்தாக்கரே பெயரை சொல்லி பதவியேற்றார் ஷிண்டே!

மகாராஷ்ட்ராவில் திடீர் அரசியல் திருப்பமாக சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்களின் தலைவரான ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராக பதவியேற்றார். அமைச்சரவையில் இடம்பெற மாட்டேன் என மாலை 4.30 க்கு பேட்டியளித்த பட்னாவிஸ், 3 மணி நேரத்தில் மனம் மாறி இரவு 7.30 மணிக்கு துணை முதல்வராக பதவியேற்றார். மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்து மகா விகாஸ் அகாதி என்ற பெயரில் கூட்டணி ஆட்சி நடத்திவந்தன., கடந்த ஜூன் 21 ஆம்தேதி அதிருப்தியை வெளிப்படுத்திய சிவசேனா கட்சியின் … Read more