'தேவேந்திர பட்னவிசுக்கு ரொம்ப பெரிய மனசு!' – ஏக்நாத் ஷிண்டே நெகிழ்ச்சி!

தன்னை முதலமைச்சராக அறிவித்த தேவேந்திர பட்னவிசுக்கு சிவசேனா அதிருப்தித் தலைவர் ஏக்நாத் ஷிண்டே நன்றி தெரிவித்து உள்ளார். மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் பதவியில் இருந்து, சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று விலகினார். தனது கட்சியைச் சேர்ந்த மூத்தத் தலைவர் ஏக்நாத் ஷிண்டே, தனது ஆதரவு எம்எல்ஏக்களை திரட்டிக் கொண்டு போர்கொடி தூக்கியதால், உத்தவ் தாக்கரே இந்த அதிரடி முடிவை எடுத்தார். இதைத் தொடர்ந்து சிவசேனா அதிருப்தித் தலைவர் ஏக்நாத் ஷிண்டே, எதிர்க்கட்சியான பாஜகவுக்கு ஆதரவு … Read more

இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதன்படி, உலக சந்தையில் இன்று தங்கம் ஒரு அவுன்ஸ் இலங்கை ரூபாவின் படி 656,936 ரூபாவாக பதிவாகியுள்ளது. இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் இலங்கையில் இன்றைய தங்க நிலவரத்தின்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 185,400 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 170,000  ரூபாவாக பதிவாகியுள்ளது. மேலும், 21 கரட் தங்கப் பவுண் ஒன்றின் 162,300 … Read more

மணிக்கு 400 கி.மீ வேகத்தில் பயணிக்கும் ஹைபிரிட் சூப்பர் கார் அறிமுகம்

மணிக்கு 400 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ஹைபிரிட் சூப்பர்காரை அமெரிக்காவின் சிங்கர் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. செயற்கை நுண்ணறிவு மற்றும் 3-டி பிரின்ட்டிங் தொழில்நுட்பத்தின் மூலம் குறைந்த கால அவகாசத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த  காரில் ஒருவர் பின் ஒருவராக அமர்ந்து 2 பேர் பயணிக்க முடியும். 21சி என பெயரிடப்பட்டுள்ள இந்த சூப்பர் கார் அடுத்த ஆண்டு அமெரிக்க சந்தையில் சுமார் ஒரு கோடியே 60 லட்ச ரூபாய்க்கு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மின்சாரம் மற்றும் பெட்ரோலில் இயங்கக்கூடிய … Read more

ஜூலை 1-ல் தொடங்குகிறது 21-வது தேர்தல் பத்திர விற்பனை – மத்திய அரசு

21-வது தேர்தல் பத்திர விற்பனை ஜூலை ஒன்றாம் தேதி தொடங்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்க விரும்புவோர், அவற்றை தேர்தல் பத்திரங்கள் மூலம் அளிக்கலாம். அதன்படி ஆயிரம் ரூபாய் முதல் ஒரு கோடி ரூபாய் வரையிலான தேர்தல் பத்திரங்களை அவ்வப்போது, ஸ்டேட் பாங்க் இந்தியா வங்கியால் வெளியிடும். குஜராத், ஹிமாச்சல பிரதேச மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், ஜூலை ஒன்று முதல் 10 ஆம் தேதி … Read more

நடுரோட்டில் தாயையும் இரண்டு மகள்களையும் கத்தியால் குத்திய நபர்… பொலிசார் துப்பாக்கியால் சுட்டதில் நிகழ்ந்த பரிதாபம்

கடந்த திங்கட்கிழமையன்று, கனடாவின் தலைநகரில் ஒரு பெண்ணையும் அவரது இரண்டு மகள்களையும் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவத்தைக் கண்ணால் கண்ட ஒருவர் நடந்ததை விவரித்துள்ளார். கனடா தலைநகர் Ottawaவில் உள்ள Anoka Street என்ற இடத்தில் அமைந்துள்ள ஒரு வீட்டில் வாழும் Scott Babbitt என்பவர், வெளியே யாரோ அலறி சத்தமிடுவதைக் கேட்டு, என்ன நடக்கிறது என்று பார்ப்பதற்காக வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார். அப்போது, 21 வயது நபர் ஒருவரை பொலிசார் சுட்டுக் கொல்வதை அவர் … Read more

கொசு மருந்து தெளிக்கும் டிரோன் ஆபரேட்டர்களாக திருநங்கைகள் நியமனம்! சென்னை மாநகராட்சி

சென்னை: கொசு மருந்து தெளிக்கும் டிரோன் ஆபரேட்டர்களாக திருநங்கைகளை நியமிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் இந்த நியமனம் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் அதிகரித்து வரும் கொசுத்தொல்லையை கட்டுப்படுத்த, டிரோன்கள் மூலம் கொசு மருந்தை தெளிக்கும்  பணிகள் கடந்த அண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. இதற்கான தனியார் நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தபபட்டது. அதன்படி,சென்னையில் உள்ள 5 முக்கிய கால்வாய்களிலும், 31 சிறிய கால்வாய்களிலும் கொசு மருந்து டிரோன் மூலம் தெளிக்கப்படுகிறது. … Read more

தமிழ்நாட்டில் வலுவான அரசு அமைந்துள்ளது; பாஜக அசைத்துக்கூட பார்க்க முடியாது: யஷ்வந்த் சின்ஹா பேட்டி

சென்னை: தமிழ்நாட்டில் வலுவான அரசு அமைந்துள்ளது; தமிழ்நாட்டு அரசை பாஜக அசைத்துக்கூட பார்க்க முடியாது என சென்னையில் எதிர்க்கட்சிகளின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா கூறியுள்ளார். தேர்தல் பாத்திரங்கள் மூலம் பாஜக தனது பலத்தை மறைமுக பெருக்கிக் கொள்கிறது. அரசியல் அமைப்பில் உள்ள கூட்டாட்சி தத்துவமே பாஜக ஆட்சியில் ஆட்டம் கண்டுள்ளது என யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.

3 செயற்கைக்கோள்களும் வெற்றிகரமாக புவி வட்ட சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது: இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்

ஸ்ரீஹரிகோட்டா: 3 செயற்கைக்கோள்களும் வெற்றிகரமாக புவி வட்ட சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவித்தனர். நியூசார், டி.எஸ்.இ.ஓ. ஸ்கூப்-1 ஆகிய 3 செயற்கைக்கோளும் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!

தமிழ்நாட்டையே உலுக்கிய மேலவளவு சாதிய படுகொலை சம்பவம் அரங்கேறி 25 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. 1996 ஆம் ஆண்டு மதுரை மாவட்டம் மேலவளவில் பஞ்சாயத்து தலைவர் முருகேசன் உட்பட 7 பேர் கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம், அடக்கு முறைகளுக்கும் சாதியக் கட்டுப்பாடுகளின் கொடூர முகத்திற்கும் எடுத்துக்காட்டாய் இன்றும் நிற்கின்றது. இந்நிகழ்வு நடந்து, இன்றுடன் 25 ஆண்டுகள் முடிவடைந்துள்ளன. இந்த படுகொலைக்கான பின்னணியை சுருக்கமாகவாவது அறிந்து கொண்டால்தான் சாதி வன்மத்தின் கோரமுகங்கள் தெரியவரும். 1996ஆம் … Read more

தொழில் சீர்திருத்தங்களில் தமிழ்நாடு முதன்மை மாநிலம் – மத்திய அரசு அறிக்கை!

தொழில் சீர்திருத்த திட்டங்களை நடைமுறைப்படுத்தியதில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்வதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தொழில் சீர்திருத்த செயல்திட்ட அடிப்படையில் மாநிலங்களுக்கான மதிப்பீட்டு அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில், தமிழ்நாடு, ஆந்திரா, குஜராத், ஹரியானா, கர்நாடகா, பஞ்சாப், தெலங்கானா ஆகிய 7 மாநிலங்கள் தொழில் சீர்திருத்த திட்டங்களை நடைமுறைப்படுத்தியதில் முதன்மை மாநிலங்களாக திகழ்வதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. முதன்மை மாநிலங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள 7 மாநிலங்களில் 5 மாநிலங்கள் தென்னிந்தியாவை சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. ஒற்றைச் … Read more