முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் குடியரசு தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா சந்திப்பு

சென்னை: எதிர்க்கட்சிகளின்  குடியரசு தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா, சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான  மு.க.ஸ்டாலினை சந்தித்தார். அப்போது, தேர்தலில் தனக்கு வாக்களிக்கும்படி ஆதரவு கோரினார். குடியரசு தலைவர் தேர்தல் அடுத்த மாதம் (ஜூலை)  18ஆம் தேதி நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து பாஜக கூட்டணியான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும், ஜார்க்கண்ட்  மாநில முன்னாள் ஆளுநர் திரெளபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் மத்திய அமைச்சர் … Read more

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 3 செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய்ந்தது PSLV C -53 ராக்கெட்

ஸ்ரீஹரிகோட்டா: செயற்கைகோள்களுடன் PSLV C -53 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மைய 2-வது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் பாய்ந்தது. 365 கிலோ எடை கொண்ட டி.எஸ்.இ.ஓ.செயற்கைக்கோள் புவியை துல்லியமாக புகைப்படம் எடுக்கும் திறன் கொண்டது.

ராஜஸ்தான் படுகொலை குற்றவாளிகளிக்கு உச்சபட்ச தண்டனை: தையல் கடைக்காரர் குடும்பத்துக்கு முதல்வர் அசோக் கெலாட் உறுதி

ஜெய்ப்பூர்: உதய்பூரில் தையல் கடைக்காரரை படுகொலை செய்த குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் உறுதி அளித்துள்ளார். முகமது நபிகள் குறித்து தொலைக்காட்சி விவாதத்தில் சர்ச்சைக்குரிய கருத்துகளை பாஜ தகவல் தொடர்பாளராக இருந்த  நுபுர் சர்மா கூறியதற்கு உலகளவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதைத் தொடர்ந்து, கட்சியில் இருந்து அவர் நீக்கப்பட்டார். இருப்பினும், அவரை ஆதரித்து சமூக வலைதளங்களில் சிலர் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். இதேபோல், ராஜஸ்தான் மாநிலம், … Read more

டாஸ்மாக் போல் வனத்துறை மீது அக்கறை காட்டுவீர்களா? – தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

டாஸ்மாக் நிறுவனம் போல் வருமானம் கிடைத்தால் தான் வனத்துறை மீது அக்கறை காட்டுவீர்களா என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழக வனப் பகுதிகளில் உள்ள அந்நிய மரங்களை அகற்றக் கோரிய வழக்குகள், நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வனத்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், அந்நிய மரங்களை அகற்ற வேண்டிய அவசியம் குறித்து கூறப்பட்டுள்ளது. சத்தியமங்கலம், முதுமலை சரணாலயங்களில் 1,500 ஹெக்டேர் … Read more

45 நாள் கெடு.. சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு மீண்டும் அபராதம்! செபியின் 186 பக்க அறிக்கை!

விதிமுறைகளை சரியாக பின்பற்ற வில்லை என கடந்த பிப்ரவரியில் என்.எஸ்.இ.யின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணா , எஸ்.எஸ்.இ நிறுவனம் உள்ளிட்ட பலருக்கும் செபி அபராதம் விதித்தது. ஆனந்த் சுப்ரமணியன் நியமனம், முக்கியமான தகவல்களை அடையாளம் தெரியாத நபரிடம் பகிர்ந்துகொள்வது மற்றும் நிர்வாக முறைகேடு காரணமாக பிப்ரவரியில் 3 கோடி ரூபாய் அளவுக்கு அபராதம் விதிக்கப்பட்டது,. தற்போது `டார்க் பைபர்’ வழக்கில் செபி மீண்டும் ரூ.5 கோடி அளவுக்கு சித்ராவுக்கு அபராதம் விதித்திருக்கிறது. 18 … Read more

சி.பி.எஸ்.இ., பொதுத் தேர்வுகள்: ஜூலை 15க்குள் ரிசல்ட்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகளை, ஜூலை 15ம் தேதிக்குள் வெளியிட, சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் மற்றும் சி.ஐ.எஸ்.சி.இ., எனப்படும் இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வு கவுன்சில் திட்டமிட்டுள்ளன. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிகளை பெரும்பாலான மாநில கல்வி வாரியங்கள் அறிவித்துள்ளன. இந்நிலையில், ஜூலை 15ம் தேதிக்குள் தேர்வு முடிவுகளை வெளியிடுவதாக, … Read more

அம்மன் தொடருக்கு விரைவில் எண்ட் கார்டு?

கலர்ஸ் தமிழ் சேனல் சீரியல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இதற்காகவே சீரியல்களுக்கு மற்ற சேனல்களை விட அதிக பட்ஜெட் ஒதுக்கி வருவதாகவும் சின்னத்திரை வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில் கலர்ஸ் தமிழ் சேனலின் பெரிய பட்ஜெட் சீரியல்களில் ஹிட் அடித்த தொடர்களில் ஒன்று அம்மன். மூன்று சீசன்களாக ஒளிபரப்பாகிய அம்மன் தொடர் 1140 எபிசோடுகளை கடந்துள்ள நிலையில் இப்போது முடிவுக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கேற்றார் போல் சமீபத்தில் வெளியான ப்ரோமோவிலும் ஹீரோயின் சக்தி … Read more

தவறியும் இந்த பங்கினை இப்போதைக்கு வாங்காதீங்க.. சன் டிவிக்கு ஏன் இந்த நிலை?

பங்கு சந்தையில் ஏற்ற இறக்கம் அதிகமாக இருக்கும்போது முதலீடு செய்தால் நல்ல லாபம் பார்க்கலாம். அந்த சமயத்தில் இண்டிரா டே வணிகர்கள் தொடர்ந்து நல்ல லாபம் பார்க்கலாம். மீடியம் டெர்ம் வணிகர்கள் தொடர்ந்து லாபம் பார்க்க சரியான வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. ஏற்ற இறக்கம் அதிகமாக இருக்கும் காலகட்டத்தில் முதலீட்டாளர்கள், ஆர்டர்கள் அதிகளவில் எடுத்து விற்பனை செய்வார்கள். இதனால் குறிப்பிட்ட சில நல்ல பங்குகள் இந்த லிஸ்டில் இருக்கலாம். இந்த சமயத்தில் என். எஸ்.இ-யால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள 95% … Read more

“அனைத்து சமூகங்களும் நல்லிணக்கத்துடன் வாழ்வதை உறுதிசெய்ய வேண்டும்!" – உதய்பூர் விவகாரத்தில் ஐ.நா

ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில், நுபுர் ஷர்மாவின் கருத்துக்கு ஆதரவாக ஃபேஸ்புக்கில் வீடியோ வெளியிட்டதாக டெய்லர் கன்ஹையா லால் என்பவர் கடந்த செவ்வாயன்று இரண்டு பேரால் தலைதுண்டித்துக் கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து கொலையாளிகளை அன்றிரவே போலீஸார் கைதுசெய்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியடுத்து. ராஜஸ்தானில் கலவரம் ஏதும் ஏற்படாமல் காக்கும் வண்ணம் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. மேலும் இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணையை மத்திய அரசின் உத்தரவின்படி என்.ஐ.ஏ மேற்கொண்டு வருகிறது. … Read more

பணியின்போது விபத்தில் உயிரிழப்பு: குடிநீர் வாரிய ஊழியர்கள் இருவரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.15 லட்சம் நிவாரணம்

சென்னை: விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் இருவரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.15 லட்சம் நிவாரணம் வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் 28-ம் தேதி காலை முதல் ஜெட் ராடிங் மற்றும் சூப்பர் சக்கர் இயந்திரத்தைப் பயன்படுத்தி மாதவரம் முத்துமாரியம்மன் கோயில் தெருவில் கழிவுநீர் அடைப்பை அகற்றும் … Read more