மகாராஷ்டிராவில் திடீர் திருப்பம்: அடுத்த முதல்வர் ஏக்நாத் ஷிண்டே

மும்பை: மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து திருப்பங்கள் நிலவி வரும் நிலையில் புதிய முதல்வராக பாஜகவின் தேவேந்திர பட்னவிஸ் பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக உத்தவ் தாக்கரேவை எதிர்த்து போர்க்கொடி தூக்கிய சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே முதல்வர் பதவி ஏற்கவுள்ளார். இன்று இரவு 7.30 மணிக்கு பதவியேற்கிறார். சிவசேனா கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 38 எம்எல்ஏக்கள் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். அவர்கள் அசாம் மாநிலம் குவாஹாட்டியில் உள்ள ஒரு … Read more

மகாராஷ்டிர முதல்வர் ஆகிறார் ஏக்நாத் ஷிண்டே – பாஜக கொடுக்கும் கிப்ட்!

மகாராஷ்டிர மாநிலத்தின் முதலமைச்சராக சிவசேனா அதிருப்தித் தலைவர் ஏக்நாத் ஷிண்டே பதவி ஏற்க உள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தின் பரபரப்பான அரசியல் திருப்பங்களுக்கு இடையே, முதலமைச்சர் பதவியை, சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று ராஜினாமா செய்தார். அவரது கட்சியைச் சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே, சிவசேனா எம்எல்ஏக்களை திரட்டிக் கொண்டு போர்கொடி தூக்கியதால், உத்தவ் தாக்கரே முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டார். இந்நிலையில் இன்று, பாஜக மூத்தத் தலைவரும், முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சித் … Read more

AK 61: லண்டனில் போட்டோ ஷுட்; வரப்போகும் புது லுக்; டைட்டில் அறிவிக்கும் தேதி இதுதான்!

அஜித் தனது `ஏகே-61′ படத்தின் முதல் ஷெட்யூல் படப்பிடிப்பு நிறைவடைந்ததையொட்டி கிடைத்த இடைவெளியில் இப்போது ஐரோப்பிய நாடுகளில் பைக் ட்ரிப்பில் மகிழ்ந்து வருகிறார். இதனிடையே அவரது 61வது படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹெச்.வினோத்தின் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் `ஏகே-61′ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து முடிந்தது. `வலிமை’யில் இணைந்த நீரவ் ஷா, திலீப் சுப்பராயன் இவர்களுடன் ஜிப்ரான், சுப்ரீம் சுந்தர் போன்ற டெக்னீசியன்களும் … Read more

மகாராஷ்டிரா மாநில புதிய முதல்வராகிறார் ஏக்நாத் ஷிண்டே…. இன்று இரவு பதவி ஏற்பு…

மும்பை: மகாராஷ்டிரா புதிய முதல்வராக அதிருப்தி எம்எல்ஏக்களின் தலைவரான முன்னாள் அமைச்சர்  ஏக்நாத் ஷிண்டே இன்று இரவு 7.30 மணி அளவில் பதவி ஏற்கிறார். பாஜக ஆதரவுடன் அவர் ஆட்சி அமைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 3வது முறையாக முதல்வராக பதவி ஏற்கும் ஆசையில் இருந்த பட்னாவிஸ் ஆசை, நிராசையாகி போனது. இதனால் அவர் ஆட்சி பொறுப்பில் இருந்து விலகி இருப்பதாக தெரிவித்து உள்ளார். உத்தவ்தாக்கரேவுக்கு எதிராக சிவசேனா கட்சியின் பெரும்பாலான எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர் ஏக்நாத் … Read more

திருச்சியில் வாகன கட்டணம் செலுத்தாத பள்ளி மாணவனுக்கு மாற்றுச்சான்றிதழ் வழங்கிய தனியார் பள்ளி நிர்வாகம் மீது பெற்றோர் புகார்

திருச்சி: முசிறியில் வாகன கட்டணம் செலுத்தாத பள்ளி மாணவனுக்கு தனியார் பள்ளி நிர்வாகம் மாற்றுச்சான்றிதழ் வழங்கியதால் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். அவகாசம் கொடுக்காமல் மாற்றுச்சான்றிதழை கொடுத்து அனுப்பியதாக பள்ளி நிர்வாகத்தின் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். பெற்றோர் அளித்த புகாரின் பேரில் டிஎஸ்பி அருள்மணி மற்றும் முசிறி கல்வி மாவட்ட அலுவலர் பாரதி விவேகானந்தன் விசாரணை நடத்தினர்.

மகாராஷ்டிரா அரசியலில் திடீர் திருப்பம்: இன்று இரவு 7.30 மணிக்கு முதல்வராக பதவியேற்கிறார் ஏக்நாத் ஷிண்டே..!

மும்பை: மராட்டிய மாநில முதலமைச்சராக சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே பதவியேற்பார் என பாஜகவின் பட்னாவிஸ் அறிவித்துள்ளார். இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த இருந்த நிலையில், மகாராஷ்டிரா முதல்வர் பதவியை உத்தவ் தாக்கரே நேற்றிரவு ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து பாஜ தலைமையிலான புதிய கூட்டணி அரசு பதவியேற்க உள்ளது. பாஜவின் தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் முதல்வராக பதவியேற்க உள்ளார். அதிருப்தி எம்எல்ஏ ஏக்நாத் ஷிண்டேவுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என்று கூறப்பட்டு வந்தது. … Read more

'பதவி கொடுத்த பிறகுதான் எடப்பாடியின் குணம் தெரிந்தது' – டிடிவி தினகரன் ஆதங்க பேட்டி

பதவி கொடுத்த பிறகு தான் எடப்பாடியின் குணம் தெரிந்ததாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த குழப்பம் நீடித்து வரும் நிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். தலைமைக் கழக செயலாளர் கழக அமைப்புச் செயலாளர்கள், அணிச் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் என 138 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் இருந்து 320 கழக நிர்வாகிகளை அம்மா … Read more

ஆஸ்கர் அழைப்பை ஏற்ற சூர்யா – 'அருமை தம்பி' எனப் பாராட்டிய கமல்ஹாசன்

ஆஸ்கர் விருது தேர்வுக்குழு உறுப்பினராக சேர நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு வந்தநிலையில், நடிகர் கமல்ஹாசன் அவருக்கு தனது ட்விட்டர் வாயிலாக வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். உலக அளவில் திரையுலகப் பிரபலங்களிடையே மிக உயரிய விருதாக ஆஸ்கர் விருது கருதப்படுகிறது. ஆண்டுதோறும் இந்த விருது வழங்கும் விழா நடத்தப்பட்டு, பல பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த விருதுகளை வழங்கும் தேர்வுக்குழுவில், உலகம் முழுவதிலுமிருந்து சுமார் 4000 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். விருதுக்கான படங்களை பரிந்துரை செய்யும் குழுவின் உறுப்பினர்களான … Read more

பாலிவுட்டில் அறிமுகமாகும் மதுமிதா, அர்ஜூன்தாஸ்

கைதி படத்தில் டெரர் வி்ல்லனாக அறிமுமானவர் அர்ஜூன்தாஸ், மாஸ்டர், விக்ரம் படத்திலும் வில்லனாக நடித்தார். அந்தகாரம் என்ற படத்தில் ஹீரோவாக நடித்த அர்ஜூன்தாஸ் தற்போது வசந்த பாலன் இயக்கும் அநீதி படத்தில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார். இது தவிர துருவ நட்சத்திரம் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் பாலிவுட்டில் அறிமுகமாகிறார். மலையாளத்தில் இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில் உருவான அங்கமாலி டைரீஸ் பாலிவுட்டில் ரீமேக் செய்யப்படுகிறது. அதில் அர்ஜுன் தாஸ் நாயகனாக நடிக்கிறார். … Read more