முகேஷ் அம்பானி-யை சீண்டும் டெல்லி நிறுவனம்.. 13 நாடுகளுக்கு தடாலடி விரிவாக்கம்..!

இந்தியாவில் மூக்குக்கண்ணாடி மற்றும் கூலிங்கிளாஸ் வர்த்தகம் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ள வேளையில் ரிலையன்ஸ் ஏற்கனவே வைத்திருக்கும் விஷன் எக்ஸ்பிரஸ் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வதோடு, ரிலையன்ஸ் பிராண்ட்ஸ் இந்தியாவில் ரே-பான் பிராண்டட் ஸ்டோர்களைத் திறக்க இத்தாலியின் லக்சோட்டிகா குழுமத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இதேவேளையில் முகேஷ் அம்பானி ரிலையன்ஸ்-ன் மூக்குக்கண்ணாடி வர்த்தகத்திற்குக் கடுமையான நெருக்கடியை உருவாக்கிய லென்ஸ்கார்ட் தற்போது இந்தியாவைத் தாண்டி ஆசியா முழுவதும் வர்த்தகம் செய்ய அதிரடி கூட்டணியை அமைத்துள்ளது. ரிலையன்ஸ் ரீடைல் சேர்மன் பதவியை … Read more

வெள்ளத்தில் மிதக்கும் வீடுகள் ரெடி! வைரலாகும் ஜப்பானின் புதிய டெக்னாலஜி

கிழக்கில் கடல் சூழ அமைத்துள்ள ஜப்பானில் வருடா வருடம் வெள்ளம், சுனாமி, நில நடுக்கம், கடல் கொந்தளிப்பு என பல்வேறு இயற்கை சீற்றங்கள் நிகழ்வதும் அதிலிருந்து மக்கள் விரைந்து தேறுவதுமே வழக்கமாக அமைந்துவிட்டது. சொல்லப்போனால், அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இருப்பினும் அங்கு மக்களின் வாழ்வாதாரம் ஒவ்வொரு வருடமும் முதலலில் இருந்து தொடங்குவதுபோல் தொடங்கவேண்டிய நிலை பெரும்பாலான மக்களுக்கு ஏற்பட்டு விடுகிறது. பலர் வீடுகளை இழந்து, வீட்டிலுள்ள பொருட்கள் வெள்ளத்தில் அடித்துச்சென்று பரிதாப நிலைக்கு செல்கின்றனர். … Read more

கல்லூரி மாணவர்களுக்கு என்னாச்சு? | தருமபுரி புத்தகத் திருவிழா ஹைலைட்ஸ் | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் தருமபுரி மாவட்டத்தின் தகடூர் புத்தகப் பேரவையும், பாரதி புத்தகாலயமும் இணைந்து நடத்தும் நான்காம் ஆண்டு தருமபுரி புத்தகக் கண்காட்சி தருமபுரி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் 102 அரங்குகள் இடம்பெற்றுள்ளன. ஜுன் 24 முதல் – ஜுலை 4 வரை … Read more

ஈரோடு | கருமுட்டை விற்பனை வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமி தற்கொலை முயற்சி

ஈரோடு: ஈரோட்டைச் சேர்ந்த 16 வயது சிறுமியிடம், கருமுட்டைகளை எடுத்து விற்பனை செய்தது தொடர்பாக சிறுமியின் தாய் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் சுகாதாரத்துறை சார்பில் உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டுள்ளது. கருமுட்டை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி ஈரோடு ஆர்.என்.புதூரில் உள்ள அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். சிறுமியிடம் உயர்மட்ட மருத்துவ குழுவினர் மற்றும் போலீஸார், ஏற்கெனவே விசாரணை மேற்கொண்டுள்ளனர். … Read more

“ஹனுமன் மந்திரத்தின் மகிமை” – உத்தவ் ராஜினாமா குறித்து ம.பி அமைச்சர் கருத்து

புதுடெல்லி: தம் கட்சியின் 40 எம்.எல்.ஏ.க்கள் கடத்தப்பட்டதாக கூறிய சிவசேனாவின் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ராவத் புகார் குறித்து மத்தியப் பிரதேச மாநில அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா கருத்து கூறியுள்ளார். “இவர்கள் கடத்தப்படவில்லை. 40 எம்.எல்.ஏ.க்கள் 40 நாட்களில் ஹனுமன் மந்திரம் ஓதிய மகிமையால் வெளியேறினர்” என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரலில் மகாராஷ்டிராவில் மசூதிகளின் ஒலிபெருக்கி சர்ச்சை கிளம்பியது. இதற்கு தடை விதிக்கக் கோரினார் மகாராஷ்டிராவின் சுயேச்சை எம்.பி.யான நவ்நீத் ராணா. இதற்காக அவர் … Read more

மகாராஷ்டிராவில் மீண்டும் தாமரை – ஆட்சி அமைக்க உரிமை கோரினார் பட்னவிஸ்!

மகாராஷ்டிர மாநில ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்த முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். மகாராஷ்டிர மாநில முதலமைச்சராக இருந்த சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக, அவரது கட்சியைச் சேர்ந்த மூத்தத் தலைவர் ஏக்நாத் ஷிண்டே போர்க்கொடி தூக்கினார். மேலும், தனது ஆதரவு எம்எல்ஏக்களை திரட்டிக் கொண்டு, அசாம் மாநிலம் கவுகாத்தியில் தஞ்சம் அடைந்தார். இதற்கிடையே, மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் … Read more

ISRO: விண்ணுக்கு பாயும் PSLV-C53 செயற்கைக்கோள்; இதன் சிறப்புகள் என்ன?

PSLV-C53 Launch: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வியாழக்கிழமை தனது பிஎஸ்எல்வி செயற்கைக்கோள் ஏவுதல் வாகனத்துடன், மூன்று செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துகிறது. நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் உடனான ஒப்பந்தத்தின் கீழ் சிங்கப்பூரின் மூன்று செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்படுகின்றன. இது நியூஸ்பேஸ் இந்தியா வணிக பயணத்தின் இரண்டாவது பணியாகும். பிஎஸ்எல்வி சி-523 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து, இன்று மாலை 6:00 மணிக்கு ஏவப்படும். Telecom: மாதத்திற்கு வெறும் … Read more

Pushpa 2: "புஷ்பா முதல் பாகத்தைவிட இன்னும் சூப்பரா இருக்கும்" – மைம் கோபி

வில்லனாக அதட்டல், உருட்டல் நடிப்பில் மிரட்டும் மைம் கோபி தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் இப்போ பிஸி மேன். ‘கே.ஜி.எஃப்’ இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துவரும் ‘சலார்’ படப்பிடிப்பில் நேற்று தன் பிறந்த நாளை கேக் வெட்டிக் கொண்டாடியவருடன் பேசினேன். `புஷ்பா’ உட்பட தெலுங்கில் 13 படங்களுக்கு மேல நடிச்சிருக்கீங்க. `புஷ்பா 2’ல இருக்கீங்களா? மைம் கோபி ”தெலுங்கில் ‘செலோ’ படத்துலதான் முதல்ல அறிமுகமானேன். ‘செலோ’, ‘பீஷ்மா’ ரெண்டு படத்துக்குமே விக்கிதான் … Read more

முதல்வர் ஸ்டாலினை சந்திக்க சென்னை வந்தார் எதிர்க்கட்சி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா!

சென்னை: குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிடும்  பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா, சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அவரை திமுக எம்.பி.க்கள் வரவேற்றனர். இன்று மாலை முதல்வர் ஸ்டாலினை சந்திக்கிறார். நாட்டின் புதிய குடியரசு தலைவருக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு, வேட்புமனுக்களும் தாக்கல் செய்யப்பட்டு விட்டன. அடுத்த மாதம் 18-ந்தேதி நடைபெற இருக்கிறது. எதிர்க்கட்சிகளின் சார்பில் பொதுவேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகிறார். இவர் ஏற்கனவே வேட்புமனுத் தாக்கல் செய்த நிலையில், மாநில கட்சிகளின் தலைவர்களை சந்தித்து … Read more

எண்ணும் எழுத்தும் திட்டம் தொடர்பாக குறைந்தபட்ச செயல்திட்டத்தை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை

சென்னை: எண்ணும் எழுத்தும் திட்டம் தொடர்பாக குறைந்தபட்ச செயல்திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. 2025க்குள் அணைத்து குழந்தைகளும் எண்ணறிவு, எழுத்தறிவை பெரும் வகையில் திட்டம் அமல்படுத்தப்படுகிறது. அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் தொடக்கக் கல்வி இயக்குனர் சுற்றறிக்கை மூலம் அறிவுரை வழங்கினார்.