ஆட்சி அமைக்க உரிமை கோரி வந்த பட்னாவிஸ், ஏக்நாத் ஷிண்டேவுக்கு இனிப்பு ஊட்டினார் ஆளுநர் கோஷியாரி..!!

மும்பை: ஆட்சி அமைக்க உரிமை கோரி வந்த பட்னாவிஸ், ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆளுநர் கோஷியாரி இனிப்பு ஊட்டினார். உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்த நிலையில் பட்னாவிசும், ஷிண்டேவும் ஆட்சி அமைக்க உரிமை கோரினர். பட்னாவிஸ் இன்று இரவு 7 மணியளவில் முதலமைச்சராக பதவியேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

“அன்புள்ள அண்ணன் ஓபிஎஸ் அவர்களுக்கு..”.. ஈபிஎஸ் எழுதிய கடிதமும், பின்னணியும்!

ஓ.பன்னீர்செல்வம் அதிமுக ஒருங்கிணைப்பாளரே கிடையாது. பொருளாளர் மட்டும்தான் என்று தலைமை நிலையச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பன்னீர்செல்வம் கடந்த 29ஆம் தேதி உள்ளாட்சி இடைத்தேர்தல் வேட்பு மனுதாக்கல் தொடர்பாக கடிதம் எழுதியிருந்தார். உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவியிடங்களை நிரப்புவதற்கான தற்செயல் தேர்தல்களில் அதிமுக வேட்பாளர்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட ஏதுவாக படிவம் ஏ மற்றும் படிவம் பி ஆகியவற்றை தனக்கு அனுப்பி வைக்குமாறு ஓ.பி.எஸ் இபிஎஸ்-இடம் கோரியிருந்தார். இதற்கு … Read more

'ByeByeModi' என்ற வாசகத்துடன் பேனர்! – வருகைக்கு 2 நாள் முன்பே ஹைதராபாத்தில் பரபரப்பு

பிரதமர் நரேந்திர மோடியின் ஐதராபாத் வருகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் ‘#ByeByeModi’  என்ற வாசகத்துடன் பேனர் வைத்தது அதிர்வலைகளை கிளப்பியுள்ளது. பாஜக தேசிய செயற்குழு கூட்டம் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஜூலை 2 மற்றும் 3ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா, ஜே.பி. நட்டா உள்ளிட்ட தலைவர்கள், பாஜக ஆளும் மாநில முதலமைச்சர்கள், மாநில தலைவர்கள், நிர்வாகிகள் என பலர் பங்கேற்பார்கள் என்று கட்சி வட்டாரங்கள் … Read more

இந்தியாவின் வளர்ச்சியில் எம்எஸ்எம்இ மிகப்பெரிய தூண்: பிரதமர்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: இந்தியாவின் வளர்ச்சி பயணத்தில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்(எம்எஸ்எம்இ) மிகப்பெரிய தூணாக அமைந்துள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். டில்லியில் 2022ம் ஆண்டுக்கான சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான விருது வழங்கும் விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது: இந்தியாவின் ஏற்றுமதி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவின் தயாரிப்புகள் புதிய சந்தைகளை அடைய நாட்டின் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்(எம்எஸ்எம்இ) துறை வலுவாக இருப்பது மிகவும் … Read more

ஆர்ஜே ஆனந்தியை கலாய்க்கும் நெட்டிசன்கள்

ரேடியோ ஜாக்கியான ஆர்ஜே ஆனந்தி வீஜே, நடிகை என பன்முக திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார். ஜீ தமிழ் தொலைக்காட்சியின் சில ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கி வரும் ஆனந்தி, தனியாக யு-டியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். தற்போது மாடலிங்கிலும் அடியெடுத்து வைத்துள்ள அவர் சில போட்டோஷூட்டுகளை வெளியிட்டு வருகிறார். அந்த வரிசையில் லுங்கி மற்றும் சட்டையை காஸ்ட்யூமாக அணிந்து கொண்டு சூப்பர் பைக் ஒன்றின் மீது ஏறி போஸ் கொடுத்துள்ளார். இதை பார்க்கும் நெட்டிசன்கள் 'என்ன … Read more

52 வார சரிவில் உள்ள பங்கினை வாங்கலாம் என கூறும் நிபுணர்கள்.. என்ன காரணம்?

உள்நாட்டு தரகு நிறுவனம் ஒன்று 52 வார சரிவில் உள்ள ஒரு பங்கினை வாங்கலாம் என கணித்துள்ளது. ஏன் இவ்வளவு சரிவினைக் கண்டுள்ள ஒரு பங்கினை வாங்க பரிந்துரை செய்ய்துள்ளது. அது இனியும் சரியாதா? அப்படி என்ன பங்கு அது? நிபுணர்களின் கணிப்பு என்ன? அதிலும் தற்போது பங்கு சந்தைகள் ரத்த களரியாகி வரும் நிலையில், இனி என்னவாகுமோ? என்ற நிலையே இருந்து வருகின்றது. தொடர்ந்து ஏற்ற இறக்கம் அதிகளவில் உள்ளது? வேற லெவல் கூட்டணி: டாடா … Read more

சென்னை, கோவை டாப் பொறியியல் கல்லூரிகளில் புதிதாக கம்ப்யூட்டர் கோர்ஸ்கள்: யூஸ் பண்ணுங்க மாணவர்களே!

Chennai and Kovai top Engineering colleges list for new courses: எதிர்கால தொழில்நுட்பம், வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகள் சார்ந்த பொறியியல் படிப்புகளை தேர்ந்தெடுக்க மாணவர்களிடையே அதிக ஆர்வம் இருந்து வருகிறது. அப்படியான கோர்ஸ்கள் என்ன? எந்தெந்த கல்லூரிகளில் அந்த கோர்ஸ்கள் கிடைக்கின்றன? உள்ளிட்ட தகவல்களை இப்போது பார்ப்போம். அகில இந்திய தொழில் நுட்பக் கல்வி கவுன்சில் (AICTE), பல்வேறு புதிய பொறியியல் படிப்புகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது. இந்த படிப்புகள் எதிர்காலத் தொழில்நுட்பம் மற்றும் வேலைவாய்ப்பு … Read more

கள்ளக்குறிச்சி.! விவசாய கிணற்றில் தவறி விழுந்த பெண் உயிரிழப்பு.!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாய கிணற்றில் தவறி விழுந்த பெண் உயிரிழந்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் திம்மலை கிராமத்தைச் சேர்ந்தவர் கொளஞ்சி. இவரது மனைவி சுசீலா (49). கொளஞ்சி நேற்று அலங்கிரி செல்லும் சாலையில் உள்ள விவசாய நிலத்தில் நெல் பயிருக்கு தண்ணீர் பாய்சுவதற்காக சென்றார். இதையடுத்து அவரது மனைவியும், மகனும் இருசக்கர வாகனத்தில் விவசாய நிலத்திற்கு சென்று உள்ளனர்.  அப்பொழுது கிணற்றில் எவ்வளவு தண்ணீர் இருக்கிறது என்று பார்ப்பதற்காக சுசீலா கிணற்றை எட்டி பார்த்தபோது எதிர்பாராத விதமாக தவறி … Read more

துரோகம் தாங்குமோ நெஞ்சம் | சிறுகதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் காலை மணி ஏழு பத்து.தனது அறையில்.. பீரோவில் பதித்திருந்த ஆளுயர கண்ணாடி முன் நின்று தலைவாரிக்கொண்டிருந்தாள் பத்மினி.ஏழரை மணிக்கு வீட்டிலிருந்துசற்று தூரத்திலிருக்கும் bus stop புக்கு அவள் பணியாற்றும் ஐடி நிறுவனமான டிசிஎஸ்-ஸின் cab வந்துவிடும்.எப்படியும் வீட்டிலிருந்து குறிப்பிட்ட பஸ் நிறுத்தத்தை அடைய … Read more

ஜிஎஸ்டி உயர்வு தொழிலை கடுமையாக பாதிக்கும்: கோவை வெட்கிரைண்டர் உற்பத்தியாளர்கள் கவலை

கோவை: ஜிஎஸ்டி வரி 5 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதால் வெட்கிரைண்டர் தொழில் கடுமையாக பாதிக்கப்படும் என, உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். கோவையில் நடைபெற்றுவரும் பல்வேறு தொழில்களில் முக்கியமானது வெட்கிரைண்டர் உற்பத்தி. கோவையின் அடையாளமாக உள்ள இந்த வெட்கிரைண்டர்களுக்கு மத்திய அரசின் புவிசார் குறியீடு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. கொங்கு மண்டலத்தில் மட்டுமே கிடைக்கக்கூடிய தரம் வாய்ந்த கற்களால் இவை உருவாக்கப்பட்டு வருகின்றன. சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கோவையில் இத்தொழில் … Read more