தமிழக அரசின் மாதம் 1000 ரூபாய் திட்டத்துக்கான கால அவகாசம் நீட்டிப்பு.!

தமிழக அரசுப் பள்ளியில் படித்து, பட்டப் படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்துக்கு விண்ணப்பிக்க மேலும் கால அவகாசம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது . தமிழகத்தில் அரசுப் பள்ளியில் படித்து, சான்றிதழ் படிப்பு, பட்டயம், பட்டம், தொழிற்கல்வி ஆகியன படிக்கும் மாணவிகளுக்கு மூவலூா் ராமாமிா்தம் அம்மையாா் உயா்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ், மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.  அரசுப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை … Read more

சிவசேனாவை உடைத்து உத்தவ் தாக்கரே அரசை உருக்குலைத்த பட்னாவிஸ்… யார் இவர்?

மகாராஷ்டிரா முதல்வர் பதவியிலிருந்து உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்ததை தொடர்ந்து, பா.ஜ.க தலைமையிலான புதிய கூட்டணி அரசு பதவியேற்க உள்ளது. பாஜக-வின் தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் முதல்வராக பதவியேற்க இருக்கிறார். மகாராஷ்டிராவில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸுடன் இணைந்து முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி, கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஆட்சி நடத்தி வருகிறது. இவருடைய அமைச்சரவையில் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்த ஏக்நாத் ஷிண்டே தலைமையில், சிவசேனாவை சேர்ந்த 40 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள், உத்தவ் … Read more

“திமுக, பாஜக, அதிமுக மூன்றும் வேண்டும் என ஓபிஎஸ் நினைப்பதை ஏற்க முடியாது” – கடலூர் அதிமுக நிர்வாகிகள்

கடலூர்: “அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்படுவார்” என்று கடலூர் அதிமுக கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட செயலாளர்கள் தெரிவித்துள்ளனர். சிதம்பரத்தில் கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், சிதம்பரம் தொகுதி எம்எல்ஏவுமான கே.ஏ.பாண்டியன், கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், புவனகிரி தொகுதி எம்எல்ஏவான ஆ.அருண்மொழிதேவன் ஆகியோர் இன்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், “கட்சியின் ஒட்டுமொத்த பொதுக்குழு உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்களின் ஆதரவுகளை எடப்பாடி பழனிசாமி பெற்றுள்ளார். … Read more

யார் இந்த தீஸ்தா சீதல்வாட்? – குஜராத் கலவர வழக்கு முதல் கைது பின்புலம் வரை

கடந்த 2002-ம் ஆண்டு குஜராத் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடி மீதான வழக்கை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் சில தினங்களுக்கு முன் உத்தரவிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் மனுதாரராக இருந்த சமூக செயற்பாட்டாளர் தீஸ்தா சீதல்வாட்டை குஜராத் போலீஸார் கைது செய்தனர். குஜராத் கலவரம் தொடர்பாக பொய் ஆதாரங்கள், சாட்சிகளை உருவாக்கிய வழக்கில் தீஸ்தா மட்டுமன்றி முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிகள் ஸ்ரீகுமார், சஞ்சீவ் பட் ஆகியோரும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் சஞ்சீவ் பட் சிறையில் … Read more

மாகாராஷ்டிரா அரசியல் நெருக்கடி: ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்த உத்தவ் தாக்கரே!

மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதற்கான கடிதத்தை அம்மாநில ஆளுநர் பிகத் சிங் கோஷியாரியாவிடம் அவர் சமர்பித்துள்ளார். நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தடையில்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்வதாக அறிவித்தார். மகாராஷ்டிர மாநில அரசியல் களம் உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ளது. ஆளும் கூட்டணி அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள எம்.எல்.ஏ.க்கள் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அசாம் மாநிலத்தில் உள்ளனர். அவர்களுடன் இணைந்து … Read more

வெளிநாடுகளில் தொழில்புரிவோரின் வருமானம் குறித்து இலங்கை அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்

வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கையர்கள் நாட்டுக்காக பணம் அனுப்பி நாட்டை மீட்பார்கள் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் வைத்து நேற்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். பிரபலமாகியுள்ள இலங்கை மேலும் தெரிவிக்கையில், எமது நாடு கடன் செலுத்த முடியாத நாடு என முழு உலகுக்கும் பிரபலமாகி இருக்கின்றது. அப்படியானால் எமக்கு யாரும் கடன் வழங்குவதில்லை. நாட்டில் … Read more

ஜெயம் ரவி பிரஸ் மீட்: எம்.குமரன் 2, தனி ஒருவன் 2, யுவராஜ் சிங் பயோபிக் | Jayam Ravi Exclusive

பர்சனல் தொடங்கி ப்ராஃபஷனல் வரை, விகடன் பத்திரிகையாளர்களின் பலதரப்பட்ட கேள்விகளுக்குச் சளைக்காமல் பிரபலங்கள் பதிலளிக்கும் நிகழ்ச்சி ‘விகடன் பிரஸ்மீட்’. 2018-ல் விஜய் சேதுபதியுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன், விஷால், அரவிந்த்சாமி, சிம்பு, கமல், யுவன்ஷங்கர் ராஜா என பல முன்னணி பிரபலங்கள் இதுவரை பங்குகொண்டிருக்கிறார்கள். தனது முதல் படமான ‘ஜெயம்’ தொடங்கி மணிரத்னம் இயக்கத்தில் அவர் இப்போது நடித்திருக்கும் ‘பொன்னியின் செல்வன்’ வரை திரைத்துறையில் அவரது பல தரப்பட்ட அனுபவங்கள் அனைத்தையும் நம்முடன் பகிர்ந்துகொண்டார் ஜெயம் … Read more

குடியரசு தலைவர் தேர்தல்: திரௌபதி முர்மு, யஷ்வந்த் சின்ஹா வேட்புமனுக்கள் சரியாக உள்ளதாக தகவல்..

டெல்லி: குடியரசு தலைவருக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெற்றது. அதில்,  தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு, எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவின் வேட்புமனுக்கள்  சரியாக உள்ளதாகவும், அதனால் அவை ஏற்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவின் 14வது குடியரசுத் தலைவராக தற்போதுள்ள  ராம்நாத் கோவிந்த்பதவிக் காலம், வரும் ஜூலை மாதம் 24 ஆம் தேதி முடிவடைகிறது. இதையடுத்து, நாட்டின் 15வது குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், அடுத்த … Read more

உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு..!!

சென்னை: உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கால அவகாசம் இன்றுடன் முடியவிருந்த நிலையில் ஜூலை 10ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. www.penkalvi.tn.gov.in என்ற இணையதளத்தில் மாணவிகள் தங்கள் விவரங்களை பதிவேற்ற வேண்டும். கல்வி உதவித் தொகை திட்டம் குறித்த விவரங்களுக்கு கட்டணமில்லா எண் 14417ல் தொடர்புகொள்ளலாம். ரூ.1000 உதவித் தொகை பெற இதுவரை சுமார் 2 லட்சம் மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.

‘டுவிட்டர்’ நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு இறுதி கெடு: சட்டப் பாதுகாப்பை இழக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை

புதுடெல்லி: இதுவரை பிறப்பித்துள்ள உத்தரவுகளை நிறைவேற்ற, ‘டுவிட்டர்’ சமூக வலை தள நிறுவனத்துக்கு ஒன்றிய அரசு, ஜூலை 4ம் தேதி வரை இறுதி கெடு விதித்துள்ளது. சமூக வலைதளங்கள், இணைய பொழுதுபோக்கு தளங்களை கட்டுப்படுத்தும் வகையில், தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, பொதுமக்கள் புகார் தெரிவிக்க வசதி, அரசு அமைப்புகள் ஆட்சேபிக்கும் பதிவுகளை நீக்க வேண்டும் என்பது போன்ற கட்டுப்பாடுகள் உள்ளன. இதை நிறைவேற்ற சமூக வலை தளங்கள் முதலில் எதிர்ப்பு தெரிவித்தன. அதன்பிறகு … Read more