தினமும் 50 ஆயிரம் லிட்டர் தண்ணீர் சேமிப்பு: சென்னை மக்களுக்கு சேவை செய்யும் நிறுவனம்!

ரெனால்ட் நிசான் என்ற நிறுவனம் தினமும் 50 ஆயிரம் லிட்டர் தண்ணீரை சேமித்து சென்னை மக்களுக்கு சேவை செய்து வருகிறது. சென்னை ஒரகடத்தில் உள்ள ரெனால்ட் நிசான் ஆட்டோமோட்டிவ் இந்தியா பிரைவேட் லிமிடெட் (RNAIPL) என்ற நிறுவனத்தின் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் தினமும் 50,000 லிட்டர் தண்ணீரை சேமித்து வருகிறது. இந்த தண்ணீர் சேமிப்பு காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் ஆலைகளுக்கு தண்ணீர் இடையூறு இன்றி கிடைத்து வருகிறது … Read more

சூடான காபி… குளிர் காற்று… நடிகர் சத்யராஜின் குன்னூர் பங்களா பற்றி தெரியுமா?

தமிழ் சினிமாவில் நகக்ல் நையாண்டியுடன் ரசிகர்களை குஷிப்படுத்தும் முக்கிய நடிகர்களில் ஒருவர் சத்யராஜ். கோயம்புத்தூரில் பிறந்த இவர், எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகரான இவர். சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து பாரதிராஜா இயக்கிய கடலோர கவிதைகள் படத்தின் மூலம் நாயகனாக உயர்ந்தார். தொடர்ந்து தனது திறமையின் மூலம் பல வெற்றிப்படங்களை கொண்டுத்த சத்யராஜ், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான பாகுபலி படத்தில் கட்டப்பா என்ற கேரக்ரில் நடித்ததன் மூலம் உலகளவில் புகழ்பெற்றார். நடிப்பு மட்டுமல்லாமல் … Read more

கும்பகோணத்தில் பிரபல ரவுடி ஒருவர் கொடூரமாக வெட்டி படுகொலை.!

கும்பகோணத்தில் பிரபல ரவுடி ஒருவர் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. கும்பகோணம், நெல்லித்தோப்பு பகுதியை சேர்ந்த புண்ணியமூர்த்தி என்பவர் மீது கொலை வழக்கு ஒன்று நிறுவையில் உள்ளது. சம்பவம் நடந்த அன்று இவரை இருசக்கர வாகனத்தில் வந்த கும்பல் ஒன்று வழி மறைத்து, சரா மாறியாக வெட்டி விட்டு தப்பியோடியுள்ளது. மர்ம  கும்பல் கொடூரமாக வெட்டியதில், சம்பவ இடத்திலேயே புண்ணியமூர்த்தி உயிரிழந்தார்.  புண்ணியமூர்த்தி அந்த பகுதியில் ரவுடியாக வலம் வந்ததாகவும் … Read more

பாலியல் வழக்கு | நாகர்கோவில் காசியின் தந்தைக்கு ஜாமீன் மறுப்பு: உயர் நீதிமன்றம் உத்தரவு 

மதுரை: சமூக வலைதளங்களில் பழகிய மாணவிகள், பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கைதான நாகர்கோவில் காசியுடைய தந்தையின் ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. நாகர்கோவிலை சேர்ந்தவர் சுஜி என்ற காசி. இவரை சமூக வலைதளங்கள் வழியாக அறிமுகமான மாணவிகள், பெண்களை திருமணம் செய்து கொள்வதாக நெருக்கமாக பழகி ஆபாச படங்கள் எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தது மற்றும் பண மோசடி செய்தது உட்பட பல்வேறு வழக்குகளில் போலீஸார் கைது செய்தனர். … Read more

பனிலிங்க தரிசனத்துக்கு 3 லட்சம் பேர் முன்பதிவு: அமர்நாத் யாத்திரை தொடங்கியது; முதல் நாளில் 10,000 பேர் பயணம்.!

ஜம்மு: இமயமலையில் உள்ள பனிலிங்கத்தை தரிசிக்க, அமர்நாத் பனிக்குகையை நோக்கி பக்தர்கள் பலத்த பாதுகாப்புடன் கிளம்பினர்.  நேற்று  10 ஆயிரம் பேர் கோயிலுக்கு புறப்பட்டு சென்றனர். ஜம்மு காஷ்மீரில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை மாதங்களில் இயற்கையாக உருவாகும் பனிலிங்கத்தை தரிசிக்க, அமர்நாத் கோயிலுக்கு பக்தர்கள் யாத்திரை செல்வது வழக்கம். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக இந்த யாத்திரை நடத்தப்படவில்லை. தற்போது தொற்று பீதி குறைந்துள்ளதால், நேற்று முதல் இந்த யாத்திரை தொடங்கியது. அனந்தநாக் மாவட்டத்தில் … Read more

நீட் முதுநிலை தேர்வு; டாப் 25 பேருக்கு பாராட்டு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ‘புதுடில்லி-முதுநிலை மருத்துவ படிப்பிற்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வில், அதிக மதிப்பெண் பெற்ற 25 பேரை, மத்திய அரசு இன்று கவுரவிக்கிறது. முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றவர்களின் விபரங்கள், கடந்த மாதம் வெளியிடப்பட்டன. இத்தேர்வில் வெற்றி பெற்ற மருத்துவம் மற்றும் பல் மருத்துவர்களில், அதிக மதிப்பெண் பெற்ற 25 பேருக்கு, இன்று டில்லியில் பாராட்டு விழா நடக்கிறது. டாக்டர்கள் தினத்தையொட்டி, லேடி ஹர்டிங்கி மருத்துவ கல்லுாரியில் … Read more

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கிர்த்தி ஷெட்டி

தெலுங்கில் உப்பெனா என்ற படத்தில் அறிமுகமானவரான கிர்த்தி ஷெட்டி. தற்போது ராம் பொத்தினேனி நடிப்பில் லிங்குசாமி இயக்கியுள்ள தி வாரியர் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கில் வெளியாக உள்ளது. இதனையடுத்து பாலா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் அவரது 41வது படத்தில் நடிக்கும் கிர்த்தி ஷெட்டி, அதன் பிறகு மண்டேலா இயக்குனர் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் நடிக்கப் போகிறார். அனுதீப் இயக்கியுள்ள பிரின்ஸ் படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன் அடுத்து கமல் … Read more

இந்திய நகரங்களில் வசிப்போர் எண்ணிக்கை 2035ல் 67.5 கோடியாக இருக்கும்: ஆய்வறிக்கையில் தகவல்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் நியூயார்க்-‘இந்திய நகரங்களில் வசிப்போர் எண்ணிக்கை, 2035ல், 67.5 கோடியாக இருக்கும்’ என, ஐ.நா., அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஐ.நா., உலக நகரங்கள் குறித்த அறிக்கையை, நேற்று முன்தினம் வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:கொரோனா பரவல் காலத்தில், நகரங்களில் பாதிப்பு அதிகமாக இருந்தது. இதனால், மக்கள் நகரங்களில் இருந்து, கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களுக்கு இடம்பெயர்ந்தனர். தற்போது, இந்த நிலை மாறி, மக்கள் மீண்டும் நகரங்களுக்கு படையெடுக்கத் துவங்கிவிட்டனர்.படிப்பு, வேலை, தொழில் … Read more

ஒப்பந்ததாரர்களிடம் இருந்து ஆவணங்களை பெற்ற மத்திய உள்துறை அதிகாரிகள்

பெங்களூரு: 40 சதவீத கமிஷன் குற்றச்சாட்டு கர்நாடக அரசு ஒப்பந்ததாரர்கள் சங்க தலைவராக இருந்து வருபவர் கெம்பண்ணா. இவர், கடந்த ஆண்டு(2021) பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார். அதில், கர்நாடக அரசின் திட்ட பணிகளில் 40 சதவீதம் வரை கமிஷன் வழங்குமாறு வற்புறுத்தப்படுவதாகவும், இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கெம்பண்ணா கூறி இருந்தார். பிரதமருக்கு எழுதப்பட்ட இந்த கடிதம் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பையும், ஆளும் பா.ஜனதா அரசு … Read more

டிஎன்பிஎல்: மதுரை அணிக்கு 152 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது கோவை கிங்ஸ்

திண்டுக்கல், 8 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதன் 8-வது லீக் ஆட்டத்தில் சதுர்வேத் தலைமையிலான மதுரை பாந்தர்ஸ் அணியும், ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற மதுரை அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி கோவை கிங்ஸ் அணி முதலில் களமிறங்க உள்ளது. தொடக்க வீரர்களாக ஸ்ரீதர் ராஜுவும், சுரேஷ் குமாரும் களமிறங்கினர். ஸ்ரீதர் ராஜு ரன் … Read more