குற்றவாளியை பாதுகாக்கும் நச்சு சூழல் – எதிர்க்கட்சியினர் மீது பாஜக குற்றச்சாட்டு

புதுடெல்லி: கடந்த 2002-ம் ஆண்டு குஜராத் கலவரம் தொடர்பாக பொய் ஆதாரங்கள், சாட்சிகளை உருவாக்கிய குற்றச்சாட்டின் கீழ் சமூக ஆர்வலர் தீஸ்தா சீதல்வாட் கைது செய்யப்பட்டுள்ளார். இதுபோல் ட்விட்டரில் சர்ச்சைக்குரிய பதிவு தொடர்பாக செய்தி இணையதள இணை நிறுவனர் முகம்மது ஜுபைர் கைது செய்யப்பட்டார். இந்த கைது நடவடிக்கைகள் தொடர்பாக பாஜகவை எதிர்க்கட்சித் தலைவர்கள் விமர்சித்துள்ளனர். இந்நிலையில் டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் கட்சியின் செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: காங்கிரஸ் கட்சி … Read more

தன்னை வசைபாடிய பார்வையாளரை நோக்கி துப்பிய ஆஸ்திரேலிய வீரர்.. அபராதம் விதிப்பது குறித்து நிர்வாகம் ஆலோசனை..!

பார்வையாளரை நோக்கி துப்பிய, ஆஸ்திரேலிய வீரருக்கு அபராதம் விதிப்பது குறித்து, விம்பிள்டன் நிர்வாகம் ஆலோசித்து வருகிறது. விம்பிள்டன் டென்னிஸ் தொடரில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில் பங்கேற்றுள்ள ஆஸ்திரேலிய வீரர் நிக் க்ரியோஸ் முதல் சுற்று ஆட்டத்தின் போது, தன்னை வசைபாடிய பார்வையாளரை நோக்கி துப்பினார். இதேபோல, Line Umpiresஐ 90 வயதுக்கு மேற்பட்டவர்கள் எனவும் திட்டினார். இந்த தவறுகளை எல்லாம் நிகி ஒத்துக்கொண்டுள்ள நிலையில் அவருக்கு அபராதம் விதிப்பது குறித்து விம்பிள்டன் நிர்வாகம் ஆலோசித்து வருகிறது. … Read more

காமன்வெல்த் போட்டிக்கு தயாராகும் இந்திய ஹாக்கி அணி வீரர்கள் இருவருக்கு கொரோனா தொற்று..!

இந்திய ஹாக்கி அணி வீரர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் அடுத்த மாத இறுதியில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவிருக்கிறது. இதற்காக இந்திய ஹாக்கி அணி வீரர்கள் பெங்களூருவில் பயிற்சி பெற்று வருகிறன்றனர். 31 வீரர்கள் இதில் கலந்து கொண்டுள்ள நிலையில், இருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், அணி உதவியாளர்கள் மூவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. Source link

லண்டனில் இலங்கை தமிழருக்கு நடிகர் அஜித்குமார் தந்த சர்ப்ரைஸ்.. நெகிழ்ச்சி வீடியோ

இலங்கை தமிழரான தனது ரசிகருக்கு லண்டனில் இருந்தபடி பிறந்தநாள் வாழ்த்து சொன்ன வீடியோ வெளியாகியுள்ளது. நடிகர் அஜித்குமார் தனது சொந்த காரணத்திற்காக லண்டன் சென்றுள்ளார். அங்கு பைக் ரேசர் குழுவுடன் சேர்ந்து பைக்கில் லண்டனைச் சுற்றி வருகிறார். இது தொடர்பான புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி வைரலாகி வருகின்றன. இந்நிலையில் நடிகர் அஜித் தனது ரசிகர் ஒருவருக்குப் பிறந்தநாள் வாழ்த்து கூறும் ஓடியோ மற்றும் கடிதம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. ரசிகருடனான தொலைபேசி உரையாடலையும், ரசிகருக்கான வாழ்த்து கடிதத்தில் … Read more

கருப்பு உடையணிந்து டாஸ்மாக்குக்கு எதிராக போராட்டம் நடத்திய ஸ்டாலின் அரசின் வருமானத்திற்காக மக்களை பலி கொடுக்கலாமா? கமல்ஹாசன்

சென்னை: கடந்த ஆட்சியின்போது,  கருப்பு உடையணிந்து டாஸ்மாக்குக்கு எதிராக போராட்டம் நடத்திய ஸ்டாலின், தற்போது அரசின் வருமானத்திற்காக மக்களை பலி கொடுக்கலாமா? என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்து உள்ளார். புதிதாக திறக்கப்படும் டாஸ்மாக் கடைகளை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ள கமல்ஹாசன், ஆட்சி மாறினாலும், காட்சி மாறவில்லை’ என்றும் விமர்சித்துள்ளார். இதுகுறித்து மக்கள்  நீதி மய்யத்தின் மாநிலச் செயலாளர்  செந்தில்ஆறுமுகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,   தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுக்கடைகளின் … Read more

ஈரோடு கருமுட்டை விற்பனை: சிறையிலுள்ள 4 பேரிடம் விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி

ஈரோடு: ஈரோட்டில் சிறுமி கருமுட்டை விற்பனை விவகாரத்தில் சிறையிலுள்ள 4 பேரை மருத்துவக்குழு விசாரிக்க அனுமதி வழங்கியது. சிறைகளில் உள்ளவர்களிடம் வரும் 4ம் தேதி மருத்துவக்குழு விசாரணை நடத்த ஈரோடு மகிளா நீதிமன்றம் அனுமதி அளித்தது. கோவை, ஈரோடு சிறை கண்காணிப்பாளர் முன்னிலையில் மருத்துவக்குழு விசாரணை நடத்தலாம் என நீதிபதி மாலதி தெரிவித்தார்.

மணிப்பூர் மாநிலம் நோனி மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 7 பேர் உயிரிழப்பு..!!

நோனி: மணிப்பூர் மாநிலம் நோனி மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். நுபுல் ரயில் நிலையம் அருகே இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடக்கிறது. 13 பேர் இதுவரை உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், முழு வீச்சில் ராணுவம், அசாம் ரைபிள்ஸ் குழு மீட்புபணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மொட்டை அடித்து பிச்சை எடுத்து ஒப்பாரி வைத்து போராடும் டெட் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள்

பள்ளிக் கல்வித்துறையில் தற்காலிக ஆசிரியர்களை பணி நியமனம் செய்யக் கூடாது என வலியுறுத்தி மொட்டை அடித்தும், பிச்சை எடுத்தும், ஒப்பாரி வைத்தும் ஆசிரியர்கள் டி.பி.ஐ வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். “தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம் என முதல்வர் கூறி வருகிறார். உண்மையில் அப்படி எதுவும் நடக்கவில்லை” என ஆசிரியர்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ வளாகத்தில் 2013-ஆம் ஆண்டுக்கு பிறகு நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிப் பெற்ற ஆசிரியர்கள் தங்களுக்கு பணி நியமனம் … Read more

கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து சிறுமி கொலை – அக்காவே திட்டம் தீட்டிய கொடூரம்!

உத்தரப் பிரதேசத்தில் 13 வயது சிறுமியை 4 பேர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் உள்ள ஒரு கரும்புத் தோட்டத்தில் அதே பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. பிரேதப் பரிசோதனையில், அவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, அந்தப் பகுதியில் போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். … Read more

இந்தியாவில் ஒருநாள் கோவிட் பாதிப்பு 18,819 ஆக அதிகரிப்பு| Dinamalar

புதுடில்லி: இந்தியாவில் நேற்று (ஜூன் 29) 14,506 பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் தொற்று எண்ணிக்கை 18,819 ஆக அதிகரித்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,819 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,34,52,164 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில், 13,827 பேர் நலமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை … Read more