மிஸ் இந்தியா 2022 போட்டியிலிருந்து விலகிய ஷிவானி ராஜசேகர்

டாக்டர் ராஜசேகர், ஜீவிதா தம்பதியரின் மகள் ஷிவானி ராஜசேகர். இந்த ஆண்டுக்கான மிஸ் இந்தியா 2022 போட்டியில் தமிழ்நாடு சார்பில் கலந்து கொள்ள இருந்தார். ஆனால், தற்போது அதிலிருந்து விலகியுள்ளார். தமிழில் 'அன்பறிவு' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். சமீபத்தில் வெளிவந்த 'நெஞ்சுக்கு நீதி' படத்திலும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருந்தார். மூன்றாமாண்டு எம்பிபிஎஸ் படிக்கும் ஷிவானி, மலேரியாவால் பாதிக்கப்பட்டதால் அழகுப் போட்டிக்கான பயிற்சிகளை சரிவர மேற்கொள்ள முடியவில்லை எனத் தெரிகிறது. விலகலுக்கான காரணம் குறித்து ஷிவானி, … Read more

சென்செக்ஸ், நிஃப்டி தடுமாற்றம்.. ஜூன் காலாண்டின் கடைசி நாள்..!

ஜூன் காலாண்டின் கடைசி வர்த்தக நாளான இன்று ஆசிய சந்தைகளில் ஏற்பட்ட உயர்வின் காரணமாக மும்பை பங்குச்சந்தை உயர்வுடன் துவங்கியுள்ளது. இதேபோல் பங்குச்சந்தைக்கு ரூபாய் மதிப்பு சரிவும், எரிபொருள் விலை உயர்வும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக FPI முதலீட்டாளர்களின் முதலீட்டின் வெளியேற்றம் மூலம் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி அதிகளவிலான தடுமாற்றத்தை எதிர்கொண்டு வருகிறது. Jun 30, 2022 11:56 AM ஏறிய வேகத்தில் இறங்கிய சென்செக்ஸ் Jun 30, 2022 11:56 AM ரீடைல் … Read more

Gold, Silver Rate Today: ரூ60,000-ம் கீழே சரிந்த வெள்ளி; தங்கம் விலை நிலவரம் என்ன?

Gold price today in Chennai: அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டி விகித அதிகரிப்பு, சர்வதேச சந்தையில் நாணய விலையில் மாற்றம், இந்தியா மற்றும் அமெரிக்காவில் நிலவி வரும் பணவீக்கம், மத்திய வங்கிகளின் தங்கம் இருப்பு, வட்டி விகிதங்கள், நகைச் சந்தை, உக்ரைன் மீதான ரஷ்ய போர், வர்த்தகப் போர்கள் மற்றும் பல காரணிகள் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்திற்கு காரணங்களாக இருப்பதாக சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால் தங்கத்தின் விலையை பாதிக்கும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். … Read more

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.!

மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 01.07.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், … Read more

“திராவிட மாடல் என் முகம்… ஒன்றியம் என் குரல்; நான் விளம்பரப் பிரியரா?’’ – ஸ்டாலின் விளக்கம்

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய கட்டடத்தை இன்று காலை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரசு விழாவிலும் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது பேசிய அவர், ‘‘பூனை கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருண்டு விட்டதாக நினைப்பதைபோல சிலர் என்னைப் பற்றி பேசுகிறார்கள். ‘ஸ்டாலின் விளம்பரப் பிரியராக இருக்கிறார்’ என்று சொல்கிறார்கள். எனக்கு, எதற்கு விளம்பரம். 55 ஆண்டுகாலமாக அரசியலில் இருக்கிறேன். இனிமேலும், எனக்கு விளம்பரம் தேவையா? ‘நாடோடி … Read more

போக்சோ சட்டத்தின் கீழ் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த நபர் கொலை… பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினர் செய்த சம்பவம்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே போக்சோ சட்டத்தின் கீழ் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த நபரை பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் கொலை செய்தனர். பாண்டியம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த 17 வயது பள்ளி மாணவியை,  திருமணமாகி 3 குழந்தைகளுக்கு தந்தையான முருகன் என்பவன் பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், முருகன் கடந்த வாரம் ஜாமீனில் வெளியேவந்துள்ளான். இந்நிலையில், இன்று காலை வீட்டின் பின்புறம் உள்ள தைலமர தோப்பில் இயற்கை உபாதை கழிக்க சென்ற போது சிலர் … Read more

புதுச்சேரிக்கு வருகிறார் திரவுபதி முர்மு: முதல்வர், எம்எல்ஏக்களை சந்தித்து ஆதரவு கோருகிறார்

புதுச்சேரி: தேசிய ஜனநாயக் கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்க குடியரசுத்தலைவர் வேட்பாளர் திரவுபதி முர்மு புதுச்சேரிக்கு நாளை மறுநாள் (ஜூலை 2) வருகிறார். முதல்வர், எம்எல்ஏக்களை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார். குடியரசுத்தலைவர் தேர்தல் வரும் ஜூலை 18-ம் தேதி நடைபெற உள்ளது. பாஜக- கூட்டணி கட்சிகளின் சார்பில் குடியரசுத்தலைவர் வேட்பாளராக திரவுபதி முர்மு போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளார். அவரை எதிர்த்து எதிர்கட்சிகள் சார்பில் யஷ்வந்த்சின்கா போட்டியிடுகிறார். தேர்தலில் போட்டியிடும் 2 வேட்பாளர்களும் நாடு முழுவதும் அனைத்து … Read more

கடந்த மே மாதத்தில் ஊரக வேலைவாய்ப்பில் 2.61 கோடி குடும்பம் பயன்

புதுடெல்லி: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் (எம்ஜி – என்ஆர்இஜிஏ) கீழ், கடந்த மே மாதம் 2 கோடியே 61 லட்சம் குடும்பங்கள் வேலைவாய்ப்பு பெற்று பயனடைந்துள்ளன. இது கடந்தாண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில் 39 லட்சம் குடும்பத்தினர் கூடுதலாகும். தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் (என்ஆர்இ ஜிஎஸ்) கீழ், ஊரக பகுதியில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திலும் வயது வந்தோர், ஒரு நிதியாண்டில் குறைந்தது 100 நாட்கள் வேலைபெற்று ஊதியம் பெறுகின்றனர். … Read more

பிலிப்பைன்ஸ் அதிபராக முன்னாள் சர்வாதிகாரி மகன் பதவியேற்பு

மணிலா: பிலிப்பைன்ஸின் முன்னாள் சர்வாதிகாரியான பெர்டினாண்ட் மார்க்கோஸின் மகனான பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் பிலிப்பைன்ஸ்ஸின் அதிபராக பதவியேற்றார். பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபர் ரோட்ரிகோ டுட்ரேட் சர்ச்சைகளின் நாயகர். இவர் பிலிப்பைன்சில் யாரேனும் போதைப் பொருட்களைப் பயன்படுத்தினாலும்,விற்றாலும் அவர்களை சுட்டுக் கொல்ல ஆணை பிறப்பித்தவர். சட்டம் என்ன சொல்கிறது என்பதைப் பற்றி டுட்ரேட் அச்சம் கொண்டது இல்லை. இதன் காரணமாக உலகம் முழுவதிலுள்ள மனித உரிமை அமைப்புகள் இவருக்கு வலுவான் கண்டனங்கள் தெரிவித்து வந்தன. இந்த நிலையில் பிலிப்பைன்ஸ் … Read more

Telecom: 30 நாள்கள் வேலிடிட்டி தரும் BSNL மலிவு விலை திட்டங்கள் அறிமுகம்!

BSNL 30 days unlimited plan: பொதுத் துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) தனது வாடிக்கையாளர்களுக்கு இரண்டு புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி வாடிக்கையாளர்கள் ஜூலை 1, 2022 முதல் இரண்டு புதிய ப்ரீபெய்ட் திட்டங்களையும் ரீசார்ஜ் செய்ய முடியும். BSNL-இன் புதிய இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களின் விலை முறையே ரூ.228, ரூ.239 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு திட்டங்களும் ஒரு மாத வேலிடிட்டியுடன் வருவது கூடுதல் … Read more