இலங்கைக்கு மற்றுமொரு நெருக்கடி – சர்வதேச விமான சேவைகள் நிறுத்தப்படும் அபாயம்

இலங்கைக்கு வரும் விமானங்களை அடுத்த பயணங்களுக்கு எரிபொருள் நிரப்பி வருமாறு ஸ்ரீலங்கன் விமான சேவை அதிகாரிகளினால் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இலங்கையின் எரிபொருள் இருப்பு குறைந்துள்ளதாக அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளமைது. இதனால் இலங்கைக்கு வரும் வெளிநாட்டு விமான பயணங்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு அல்லது தற்காலிகமாக நிறுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக விமான சேவை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சர்வதேச விமானங்கள் தடைப்படும் அபாயம் விமானங்கள் திரும்பி செல்வதற்காக எரிபொருள் நிரம்பி வருவதனால் விமானங்களில் ஏற்றப்படும் சரக்குகளின் அளவு குறைவடைகின்றன. … Read more

உலகில் 110 நாடுகளில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிப்பு

உலகில் 110 நாடுகளில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. கொரோனா தொற்று முடிவடையவில்லை என்று தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதனோம் கேப்ரியாசெஸ், கொரோனா தொற்று உருமாறி வருவதாக தெரிவித்தார். வேகமாக பரவும் ஒமிக்ரான் துணை வகைகளான BA.4 மற்றும் BA.5 ஆகியவை அமெரிக்காவில் பதிவாகியுள்ள கொரோனா தொற்றில் 50 சதவீதம் இருப்பதாக கணிப்பிடப்பட்டுள்ளது.  Source link

ஆட்டோவை அதிவேகத்தில் முந்த முயன்ற தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து… பதறவைக்கும் சிசிடிவி

கேரளாவில் ஆட்டோவை அதிவேகமாக முந்திச்செல்ல முயன்ற தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். அந்த காட்சிகள் சிசிடிவி கேமிராவில் பதிவாகி உள்ளன. கண்ணூரில் இருந்து பையன்னூர் நோக்கி சென்றுகொண்டிருந்த பேருந்து குற்றிக்கோல் என்ற பகுதிக்கு சென்றபோது விபத்து நேர்ந்தது. இதில் பேருந்தில் இருந்த ஜோபியா ஜோசப் என்ற செவிலியர் உயிரிழந்த நிலையில் காயமடைந்த பேருந்து ஓட்டுநர் மற்றும் 15க்கும் மேற்பட்ட பயணிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்து அதிவேகமாக இயக்கப்பட்டதே விபத்துக்கு … Read more

சிரஞ்சீவி படத்தில் சல்மான் கான்; சல்மான் கான் படத்தில் ராம்சரண்! அசத்தல் கேமியோக்கள்

‘RRR’ படத்திற்குப் பிறகு, இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார், ராம் சரண். அது அவரின் 15-வது படம் மட்டுமல்ல, தயாரிப்பாளர் தில் ராஜுவின் 50வது படமும் கூட. மிக பிரமாண்டமாக படத்தின் படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள். கார்த்திக் சுப்புராஜ் கதை, எழுத்தாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சு.வெங்கடேசன் ஸ்கிரிப்டில் பணியாற்றி இருக்கிறார். திரு ஒளிப்பதிவு, தமன் இசை, அன்பறிவ் ஸ்டன்ட்ஸ், ஜானி டான்ஸ் என ஒவ்வொரு க்ராஃப்டும் பார்த்து பார்த்து செதுக்கப்பட்டு வருகிறது. ஷங்கர் – ராம்சரண் … Read more

35 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி கேப்டன்! வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கு சிறப்பு

ரோகித் சர்மா கொரோனவால் பாதிக்கப்பட்ட நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, பர்மிங்காமில் நாளை தொடங்க உள்ளது. இந்த போட்டிக்கு இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் பயிற்சி ஆட்டத்தில் விளையாடிய அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்ட அவரை பரிசோதித்தபோது, இன்னும் கொரோனா தாக்கம் அவருக்கு குறையவில்லை … Read more

தற்காலிக ஆசிரியர்கள் பணி நியமனம் நிறுத்தம்?

சென்னை: தமிழகஅரசு அறிவித்துள்ள இடைக்கால ஆசிரியர் பணி நியமனத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையிலும், மதுரை ஐகோர்ட்டு கிளையும், காலி பணியிடங்களுக்கு தற்காலிக ஆசியர்களை நிரப்பும் செயல் ஆபத்தானது என விமர்சித்துள்ளது.  இந்த நிலையில்,  இடைக்கால ஆசிரியர்களை நியமனம் செய்யும் பணியை உடனடியாக நிறுத்துமாறு பல்வேறு மாவட்ட பள்ளிகளுக்கு வாய்மொழியாக  உத்தரவிட்டப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் 13,331 காலிப்பணியிடங்கள் உள்ளது. இடைநிலை ஆசிரியர்பணியில் 4,989  பணியிடமும், பட்டதாரி ஆசிரியர் களில் 5,154 … Read more

சென்னையில் முதல் முறையாக செப். மாதம் நடைபெறுகிறது சர்வதேச மகளிர் டென்னிஸ் தொடர்

சென்னை: சென்னையில் முதல் முறையாக மகளிர் சர்வதேச டென்னிஸ் தொடர் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது. செப்டம்பர் 10ம் தேதி முதல் 18ம் தேதி வரை போட்டிகள் நடைபெற உள்ளதாக விளையாட்டு துறை செயலாளர் அபூர்வா தெரிவித்தார். சர்வதேச மகளிர் டென்னிஸ் தொடரை நடத்த நடவடிக்கை எடுத்த முதலமைச்சருக்கு நன்றி எனத் தெரிவித்த டென்னிஸ் சங்கத் தலைவர் விஜய் அம்ரித், மீண்டும் சர்வதேச டென்னிஸ் தொடர் சென்னையில் துளிர்விட ஆரம்பித்திருப்பது மகிழ்ச்சி என கூறினார்.    

இந்தியாவில் தொழில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளும் முதன்மையான 7 மாநிலங்கள் பட்டியலில் தமிழகத்திற்கு இடம்..!!

டெல்லி: இந்தியாவில் தொழில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளும் முதன்மையான 7 மாநிலங்கள் பட்டியலில் தமிழகத்திற்கு இடம் கிடைக்கப்பெற்றுள்ளது. ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள பட்டியலில் தமிழகம், ஆந்திரா குஜராத் உள்ளிட்ட 7 மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன. அரியானா, கர்நாடகா, பஞ்சாப், தெலுங்கானாவும் முதன்மை மாநிலங்களாக திகழ்கின்றன.

நாகர்கோவில் காசியின் ஃபோன், லேப்டாப்பில் இத்தனை ஆபாச வீடியோக்களா? – ஷாக்கான நீதிபதி!

1900 நிர்வாண படங்கள், 400 ஆபாச வீடியோக்கள் நாகர்கோவில் காசியின் மடிக்கணினி மற்றும் செல்போனில் இருந்ததாக சிபிசிஐடி குறிப்பிட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது என நீதிபதி தெரிவித்திருக்கிறார். ஆசை வார்த்தைகளைக் கூறி சமூக வலைதளங்கள் மூலமாக தமிழகம் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த 120க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் இளம் பெண்களை காதலிப்பதாக ஏமாற்றியதோடு, பணமோசடி மற்றும் ஆபாச புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டிய வழக்கில் நாகர்கோவிலை சேர்ந்த சுஜி என்ற காசி கடந்த 2020-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இந்த … Read more

தங்கச் செயின் திருட்டு; ஆனால் வழக்கு இல்லை – ஏன் தெரியுமா?

தங்கச் செயினை மனிதர்கள் திருடினால் வழக்கு பதியலாம்; கைது செய்யலாம். ஆனால் எறும்புக் கூட்டம் இந்தக் காரியத்தை செய்தால் போலீஸாரால் என்ன செய்ய முடியும்? பொதுவாகவே எறும்புகள் தனது எடையை விட 20 மடங்கு அதிக எடைக்கொண்ட பொருட்களையும் தூக்கிச் செல்லும் திறன் கொண்டவை. சில சமயங்களில் மூன்று எறும்புகள் மட்டுமே சேர்ந்து பெரிய அளவிலான பூச்சிகள், மிட்டாய்கள் உள்ளிட்டவற்றை இழுத்துச் செல்வதை நமது வீட்டிலேயே பார்த்திருப்போம். ஆனால், தங்க செயினை அலேக்காக ஆட்டையை போடும் எறும்புக் … Read more