கோடை கால முகாமில் திடீர் தீ விபத்து… நூற்றாண்டு கால பழமையான கட்டடம் எரிந்து சேதம்
அமெரிக்கா மேரிலேண்ட் மாகாணத்தில் கோடை கால முகாமில் பற்றிய தீ விண்ணை முட்டும் அளவுக்கு கரும் புகையை கக்கியது. 102 ஆண்டுகள் பழமையான கட்டடத்தின் உணவு பரிமாறும் அறையில் முதலில் தீப் பற்றியதாக கூறப்படுகிறது. தீ மெல்ல பரவி கட்டடம் முழுவதும் பரவி கொளுந்து விட்டு எரியத் தொடங்கியது. சம்பவ நேரத்தில் முகாமில் குழந்தைகள் உள்ளிட்ட யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. நூறு வீரர்கள் தீயணைப்பு பணியில் ஈடுபட்டனர். Source link