#திண்டுக்கல் || குடிபோதையில் மதுபாட்டிலை உடைத்து தன்னைத்தானே குத்தி இளைஞர் தற்கொலை முயற்சி.!

திண்டுக்கல் மாவட்டத்தில் குடிபோதையில் மது பாட்டிலை உடைத்து, இளைஞர் தன்னைத்தானே குத்திக் கொண்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். தேனியை சேர்ந்த திப்பு சுல்தான் என்பவர் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கலையரங்கம் அருகே உள்ள டாஸ்மாக் பாரில் குடித்து வந்தார். இதைத்தொடர்ந்து நேரம் அதிகமாக அதிகமாக குடிபோதை தலைக்கேறிய நிலையில் திப்பு சுல்தான் திடீரென மது பாட்டலை உடைத்து தன்னைத்தானே குத்திக் கொண்டார். இதைப்பார்த்த அருகில் இருந்தவர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து … Read more

இரட்டை இல்லை சின்னம் கிடைப்பதில் சிக்கல்: உள்ளாட்சி இடைத் தேர்தலை புறக்கணித்த அதிமுக

சென்னை: இரட்டை இல்லை சின்னம் கிடைப்பதில் உள்ள சிக்கல் காரணமாக உள்ளாட்சி இடைத் தேர்தலை அதிமுக புறக்கணித்துள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஜூலை 9-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன்படி மொத்தம் 510 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இந்தப் பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20 ஆம் தேதி தொடங்கி 27 ஆம் தேதி நிறைவு பெற்றது. வேட்புமனுக்களை திரும்பப் பெற இன்று கடைசி நாள் ஆகும். … Read more

பிஹாரில் ஒவைசி கட்சியின் 4 எம்எல்ஏ ஆர்ஜேடியில் ஐக்கியம்

பாட்னா: பிஹாரில் அசாதுதீன் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியைச் சேர்ந்த 4 எம்எல்ஏ.க்கள் லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தில் (ஆர்ஜேடி) சேர்ந்தனர். பிஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் – பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது. எதிர்க்கட்சியாக ஆர்ஜேடி உள்ளது. இந்நிலையில், அசாதுதீன் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியைச் சேர்ந்த ஷாநவஸ் ஆலம் (ஜோகிஹட் தொகுதி), முகமது அன்சர் நயீமி ((பஹதூர்பூர்), முகமது இசார் அஸ்பி (கோச்சாதாமன்) சையித் ருக்னுதீன் அகமது (பைசி) ஆகிய … Read more

இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படும் பேருந்து கட்டணம்

இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.  அதன்படி ஆகக்குறைந்த பேருந்து கட்டணம் 32 ரூபாவிலிருந்து 40 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது. அத்துடன், ஏனைய கட்டணங்கள் 22 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.  பேருந்து கட்டண அதிகரிப்பு எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இலங்கை முழுவதும் தனியார் பேருந்து பயணங்கள் நேற்று முன் தினம் முதல் முழுமையாக முடக்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் இந்த விடயத்தை தெரிவித்திருந்தது. இதனையடுத்து … Read more

இலங்கையில் கடுமையான தட்டுப்பாடு : எரிபொருள் வழங்க வலியுறுத்தி மருத்துவர்கள் போராட்டம்..!

தங்களுக்கும் எரிபொருள் வழங்க வலியுறுத்தி இலங்கையில் மருத்துவத்துறை ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். கடுமையான தட்டுப்பாடு உள்ளதால், இலங்கையில் அத்தியாவசியப் பணிகளுக்கு மட்டுமே எரிபொருள் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் தங்களுக்கும் எரிபொருள் வழங்க வலியுறுத்தி மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவத்துறை ஊழியர்கள் தலைநகர் கொழும்புவில் போராட்டம் நடத்தினர். Source link

டெல்லியில் இன்று காலை முதல் கனமழை.. சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியது..!

தலைநகர் டெல்லியில் இன்று காலை கனமழை பெய்தது. நகரின் பல்வேறு பகுதிகளிலும் விடாமல் மழை பெய்ததால் பணிக்கு செல்வோர் சிரமத்திற்குள்ளாகினர். இதேபோல் உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்திலும் கனமழை பெய்தது. நேற்று இரவு பெய்த கனமழையில் பெரும்பாலான சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியது. மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ள பகுதிகளை அடையாளம் கண்டு அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக ருத்ரபிரயாக் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆயுஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.     Source link

பா.ஜ.க. ஊராட்சி மன்றத் தலைவி முறைகேடு? அதிரடியாக தகுதி நீக்கம் செய்த பழனி ஆட்சியர்…

பழனி: பா.ஜ.க. ஊராட்சி மன்றத் தலைவி முறைகேடு செய்தது தெரிய வந்த நிலையில்,அவரை அதிரடியாக தகுதி நீக்கம் செய்த பழனி ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பழனி அடுத்த  புஷ்பத்தூர் ஊராட்சி மன்றத்தின் தலைவியாக பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த செல்வராணி இருந்து வந்தார். இந்த ஊராட்சியில் மொத்தம் 12 வார்டுகள் உள்ளன.  இந்தநிலையில் ஊராட்சி தலைவர், துணைத்தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களுக்கு இடையே பிரச்சினை இருப்பதாகவும், இதனால் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் முறையாக … Read more

ரஷ்யாவில் தொழிற்சாலை ஒன்றிற்கு தீவைப்பு… 1,000 சதுர மீற்றர் பரப்பை விழுங்கியும் அடங்காத தீ

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் அமைந்துள்ள டயர் தொழிற்சாலை ஒன்றில் திடீரென தீப்பற்றிய நிலையில், யாரோ வேண்டுமென்றே தீவைத்துள்ளதை ரஷ்ய அதிகாரிகள் உறுதி செய்துள்ளார்கள். நேற்று காலை, மாஸ்கோவில் நெடுஞ்சாலை ஒன்றில் அமைந்துள்ள டயர் தொழிற்சாலை ஒன்றில் திடீரென தீப்பற்றியது. தீயில் அங்கிருந்த எரிவாயு சிலிண்டர்களும் வெடித்துச் சிதறியதாகவும், மேலும் சிலிண்டர்கள் வெடிக்கும் அபாயம் உள்ளதாகவும் தகவல் வெளியானது. ஏற்கனவே 1,000 சதுர மீற்றர் பரப்பு தீக்கிரையாகிவிட்ட நிலையில், மேலும் தீ பரவிவருவதாகவும் தீயை அணைக்க ஹெலிகொப்டர் அழைக்கப்பட்டுள்ளதாகவும் … Read more

கருமுட்டை விவகாரம்: தற்கொலைக்கு முயன்ற சிறுமிக்கு மருத்துவர்கள் கவுன்சிலிங்

ஈரோடு: கருமுட்டை விற்பனை விவகாரத்தில் தற்கொலைக்கு முயன்ற சிறுமிக்கு மருத்துவர்கள் கவுன்சிலிங் அளித்து வருகின்றனர். ஈரோடு அரசு மருத்துவமனையில் உடல்நலம் தேறிவரும் சிறுமிக்கு கவுன்சிலிங் அளிக்கப்பட்டது.