ட்விட்டா் நிறுவனத்துக்கு ஜூலை 4 வரை கெடு விதித்தது ஒன்றிய அரசு

டெல்லி: ஒன்றிய அரசின் உத்தரவுகளை முழுமையாக பின்பற்ற ட்விட்டா் நிறுவனத்துக்கு ஜூலை 4ம் தேதி வரை ஒன்றிய அரசு கெடு விதித்தது. உத்தரவுகளை பின்பற்றாவிடில் ட்விட்டா் நிறுவனம் சட்டப் பாதுகாப்பை இழக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்தது.

வேளாங்கண்ணி: விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த தரமற்ற 100 கிலோ மீன்கள் பறிமுதல்

வேளாங்கண்ணியில் தரமற்ற அழுகிய 100 கிலோ மீன்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதனை விற்பனை செய்த 10 கடைகளுக்கு 10 ஆயிரம் வீதம் ஒரு லட்சம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர். நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயத்திற்கு தினம்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகை புரிவதுண்டு. அவர்களுக்காகவே வேளாங்கண்ணி பேருந்து நிலையம் மற்றும் வேளாங்கண்ணி கடற்கரை ஓரங்களில் ஏராளமான வறுவல் மீன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. மிகப்பிரபலமான இடமான அங்கு, தற்போதெல்லாம் … Read more

உத்தவ் தாக்கரே ராஜினாமாவால் பாஜகவினர் கொண்டாட்டம் – முதல்வராகிறார் ஃபட்னாவீஸ்

மகாராஷ்டிரா முதல்வர் பதவியை உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்ததை அடுத்து அங்கு பாஜகவினர் பெரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனாவின் 39 எம்எல்ஏக்கள் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக அணி திரண்டுள்ளனர். இதனால் ஆட்சியில் இருப்பதற்கான பெரும்பான்மையை சிவசேனா இழந்தது. இதையடுத்து, முக்கிய எதிர்க்கட்சியான பாஜகவின் பரிந்துரையின் பேரில் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு அம்மாநில ஆளுநர் கோஷ்யாரி உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு எதிராக சிவசேனா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. 16 அதிருப்தி எம்எல்ஏக்களை … Read more

பிரியாங்கா அக்கா, என்ன இது.. விலை படு பயங்கரமா இருக்கே..!

இந்தியாவின் மிக பிரபலமான நடிகையான பிரியங்கா சோப்ரா, உலக அளவில் பிரபலமான நட்சத்திரமாவார். நடிகை மட்டுமல்ல, சிறந்த தொழிலதிபர் என்றும் கூட கூறலாம். பிரியங்கா சோப்ரா சமீபத்தில் தனது ஹோம்வேர் சேகரிப்பான சோனா ஹோமை அறிமுகப்படுத்தினார். ஜிஎஸ்டி கவுன்சில்: 3 துறைக்கு முக்கிய அறிவிப்பு.. சிறப்பான வரி சலுகை..! இந்த சோனா ஹோமில் உள்ள பொருட்கள் இந்திய பாரம்பரியத்தினை போற்றும் வகையிலும், அழகான பொருட்களாகவும் உள்ளன. இதில் மேஜை மேல் போடப்படும் துணி என பலவும் அடங்கும். … Read more

போலிஸ் உயர் அதிகாரிகள் வீடுகளில் வேலை செய்த 210 ஆர்டர்லிகளை திரும்பப் பெற்றது காவல்துறை

தமிழகத்தில் உள்ள போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகளின் வீடுகளில் ‘ஆர்டர்லி’யாக பணியாற்றிய 210 காவலர்களை தமிழக காவல்துறை திரும்ப பெற்றுள்ளது. இன்னும் 150 போலீசார் தங்கள் காவல் பணிக்கு திரும்பவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறையில் `ஆர்டர்லி’ என்ற நடைமுறை ஆங்கிலேயேர்கள் காலத்தில் கொண்டுவரப்பட்டது. அந்தக் காலத்தில், போன் அழைப்புகளுக்கு பதிலளிப்பது, சீருடைகளைப் பராமரிப்பது, உயரதிகாரிகளின் பாதுகாப்பில் கவனம் செலுத்துவது உள்ளிட்ட பணிகளில் ஆர்டர்லிகள் ஈடுபடுத்தப்பட்டனர். ஆரம்பத்தில் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு கார் … Read more

#BigBreaking || அதிமுகவின் பொதுக்குழுவுக்கு தடை….? ஓபிஎஸ் தலையில் இடியை இறக்கிய உயர்நீதிமன்றம்.! 

அதிமுகவின் ஒற்றை தலைமை விவகாரம் தீவிரம் அடைந்துள்ள நிலையில், அதிமுகவின் ஒற்றை தலைமையை தேர்ந்தெடுக்க உள்ள பொதுக்குழு கூட்டத்தை தடுத்து நிறுத்துவதற்கு உண்டான அனைத்து வேலைகளையும் ஓ பன்னீர்செல்வம் தரப்பு மேற்கொண்டு வருகிறது. உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு ஒன்றை தாக்கல் செய்த ஓபிஎஸ் தரப்பு, தேர்தல் ஆணையத்திலும் முறையிட்டு உள்ளது. மேலும், வருகின்ற ஜூலை 11ஆம் தேதி எடப்பாடி தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தை முடக்குவதற்கு உண்டான ஆலோசனைக் கூட்டத்தை ஓபிஎஸ் தரப்பு மேற்கொண்டது. … Read more

புதிய சர்ச்சையில் உதயநிதி முதல் வெளுத்து வாங்கிய கனிமொழி வரை… கழுகார் அப்டேட்ஸ்!

தஞ்சாவூரில் கிளம்பிய புதிய சர்ச்சை!“உதயநிதிக்கு மலர் தூவ கழக முன்னோடிகளா?’’ தஞ்சாவூர் மத்திய மாவட்ட தி.மு.க சார்பில் கழக மூத்த முன்னோடிகள் 603 பேருக்கு பொற்கிழி வழங்கும் விழா கடந்த 27-ம் தேதி நடந்தது. உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு அவர்களுக்குப் பொற்கிழி வழங்கினார். மூத்த முன்னோடிகள் அனைவரின் கைகளிலும் பூக்களைக் கொடுத்து உதயநிதி ஸ்டாலின் மீது தூவி வரவேற்பு கொடுக்கவைத்திருக்கிறார்கள் மாவட்டக் கழக நிர்வாகிகள். “விழா யாருக்காக எடுக்கப்பட்டதோ அவர்களைவைத்தே உதயநிதிக்குப் பூக்களைத் தூவவைப்பதுதான் அவர்களை கௌரவிக்கும் … Read more

கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது விபரீதம்.. விஷவாயு தாக்கியதில் கூலி தொழிலாளிகள் உயிரிழப்பு..!

சென்னை பெருங்குடியில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கியதில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பெருங்குடி காமராஜர் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், 20 அடி ஆழமுள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய கூலி தொழிலாளிகள் பெரியசாமி மற்றும் தட்சணாமூர்த்தி ஆகியோர் தொட்டிக்குள் இறங்கிய போது விஷவாயு தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் இருவரும் கூச்சலிட்டதையடுத்து, சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், மயங்கி இருந்த இருவரையும் மீட்ட நிலையில் பெரியசாமி … Read more

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்கு விடுதலை போராட்ட வீரர் ஜமதக்கனி பெயர் சூட்டுக: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்கு விடுதலைப் போராட்ட வீரர் இரா.ஜமதக்கனி பெயரை சூட்ட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளாகம் கட்டி முடிக்கப்பட்டு முதல்வர் மு.க.ஸ்டாலினால் இன்று திறந்து வைக்கப்படுவதில் மகிழ்ச்சி. அந்த வளாகத்திற்கு விடுதலைப் போராட்ட வீரரும், அறிஞருமான ஜமதக்கனியின் பெயர் சூட்டப்படுவது வளாகத்திற்கு கூடுதல் பெருமை சேர்க்கும். தமிழகத்தில் விடுதலைக்காக போராடி அதிக காலம் சிறை தண்டனை அனுபவித்தவர் … Read more

மகாராஷ்டிரா அடுத்த முதல்வர் யார்?- இரவு முழுவதும் அடுத்தடுத்து நடந்த அரசியல் திருப்பங்கள்

மும்பை: மகாராஷ்டிர முதல்வர் பதவியில் இருந்து உத்தவ் தாக்கரே விலகியுள்ள நிலையில் நேற்று இரவு முழுவதும் அடுத்தடுத்து அரசியல் திருப்பங்கள் நடந்தன. அடுத்த முதல்வரை முடிவு செய்ய பாஜக மற்றும் அதிருப்தி சிவசேனா எம்எல்ஏக்களின் கூட்டம் இன்று நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிவசேனா கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 38 எம்எல்ஏக்கள் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். அவர்கள் அசாம் மாநிலம் குவாஹாட்டியில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி இருந்தனர். மகாராஷ்டிர … Read more