இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா … சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது; அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்!! ..

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 18,819 பேர் பாதித்துள்ளனர்.* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,34,52,164 ஆக உயர்ந்தது.* புதிதாக 39 பேர் இறந்துள்ளனர்.* இதனால், … Read more

ஆண்கள் கழிவறையில் டையப்பர் ஸ்டேஷன்: பெண்களின் பாராட்டை பெற்ற பெங்களூரு ஏர்போர்ட் நிர்வாகம்

பாலின சமத்துவத்தை வளர்க்கும் வகையில் சமூகத்தில் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதுவும் குழந்தைகள் வளர்ப்பதில் தாய் தந்தை என இருவரது பங்கும் பொறுப்பும் இருத்தல் வேண்டும் என்பது தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. அதனை வெளிப்படுத்தும் விதமாக கர்நாடகாவின் பெங்களூரு விமான நிலையத்தில் உள்ள ஆண்களுக்கான கழிவறையில் டையப்பர் ஸ்டேஷன் என்ற புது வசதியை விமான நிலைய நிர்வாகம் ஏற்படுத்தியுள்ளது. அதன் மூலம் தாய்மார்கள் மட்டுமல்லாமல் தற்போது தந்தைகளும் குழந்தைகளின் டையப்பரை மாற்றி விடும் வகையில் பெங்களூரு … Read more

புதிய கட்சி அபார வெற்றி| Dinamalar

கோல்கட்டா: மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் மலையில் உள்ள கூர்க்காலாந்து பிராந்திய நிர்வாகத்துக்கு நடந்த தேர்தலில் புதிதாக உருவான பி.ஜி.பி.எம்., எனப்படும் பாரதிய கூர்க்கா பிரஜாதந்திரிக் மோர்ச்சா கட்சி அமோக வெற்றி பெற்றது. மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, டார்ஜிலிங் மலையில் உள்ள கூர்க்காலாந்து பிராந்திய நிர்வாகத்துக்கு, 2012ல் தேர்தல் நடந்தது. கடந்த, 2017ல் தனி மாநிலம் கேட்டு கூர்க்காலாந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் தேர்தல் நடத்தப்படவில்லை. இந்நிலையில், … Read more

நடிகை மீனா கணவர் மறைவு : திரைப்பிரபலங்கள் இரங்கல்

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் மீனா. ரஜினி, கமல், அஜித் உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த இவர், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் கடந்த 2009ம் ஆண்டு பெங்களூருவை சேர்ந்த ஐ.டி.,யில் பணிபுரிந்த வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். நைனிகா தெறி படத்தில் விஜய்யின் மகளாக நடித்தார். கடந்த ஆண்டு, மீனா மற்றும் அவரது … Read more

இந்த நகரங்களில் பணிபுரிந்தால் பர்ஸ் காலி… உலகில் அதிக செல்வாகும் நகரங்களின் பட்டியல்!

உலக அளவில் பணியாளர்களை நியமிக்கும் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் பல்வேறு நாடுகளுக்கு மாற்றலாகி செல்லும் நிலையில் எந்தெந்த நாடுகளில் அவர்களுக்கு அதிக செலவு ஆகிறது என்பது குறித்த சர்வே ஒன்று சமீபத்தில் எடுக்கப்பட்டுள்ளது. வாழ்க்கை முறை, வீட்டு வசதி, பொருட்களின் விலைவாசி, பாதுகாப்பு, கல்வி தரநிலை ஆகியவை மதிப்பிடப்பட்டு இந்த சர்வே எடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் பணிபுரியும் ஊழியர்களுக்கு உலகின் மிகவும் விலையுயர்ந்த நகரங்கள் பட்டியலில் நிச்சயம் ஆச்சரியத்தை ஏற்படுத்தும். அன்றாட செலவு உலகளாவிய பொருளாதார நெருக்கடி … Read more

அவரின் பெயரை சூட்டுவது கூடுதல் பெருமை சேர்க்கும் – முதலமைச்சருக்கு மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தல்.!

இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்கு விடுதலைப் போராட்ட வீரர் இரா.ஜமதக்கனி பெயர் சூட்ட வேண்டும் என்று, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளாகம் கட்டி முடிக்கப்பட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் இன்று திறந்து வைக்கப்படுவதில் மகிழ்ச்சி. அந்த வளாகத்திற்கு விடுதலைப் போராட்ட வீரரும், அறிஞருமான ஜமதக்கனியின் பெயர் சூட்டப்படுவது வளாகத்திற்கு கூடுதல் பெருமை சேர்க்கும்! தமிழ்நாட்டில் விடுதலைக்காக போராடி அதிக காலம் சிறை தண்டனை … Read more

சாலை விதிகளை பின்பற்றினால் உலகம் முழுவதும் 5 லட்சம் உயிர்களை பாதுகாக்கலாம்: ஆய்வு சொல்லும் செய்தி என்ன ?

சாலை விதிகள் முறையாக பின்பற்றப்பட்டால், வருடத்திற்கு  உலகம் முழுவதும் உள்ள 5 லட்சத்து 40 ஆயிரம் உயிர்களை காப்பற்ற முடியும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. கொரோனா தொற்றைவிட சாலை விபத்தில் அதிகம் பேர் உயிரிழப்பதாக தகவல்கள் முன்பு வெளியிப்பட்டன. இந்நிலையில் தி லேன்செட் ( The Lancet) என்ற இதழில் சாலை விபத்து தொடர்பான ஆய்வு ஒன்றை வெளியிட்டுள்ளனர். சரியான ஹெல்மெட் அணிவது, சீட் பெல்ட் அணிவது, மது அருந்தாமல் வாகனம் ஓட்டுவது போன்ற சாலை … Read more

Doctor Vikatan: மூன்று மாதங்களுக்குத் தொடரும் ப்ளீடிங்… மெனோபாஸ் காலத்தில் அப்படிதான் இருக்குமா?

எனக்கு வயது 49. கடந்த மாதங்களாக பீரியட்ஸ் வந்தால் மூன்று மாதங்கள் வரைகூட தொடர்கிறது. மாதவிலக்கு நிற்கும் நேரத்தில் அப்படித்தான் இருக்கும் என்கிறார் என் அம்மா. அது உண்மையா? இது மெனோபாஸின் அறிகுறியா அல்லது வேறு ஏதேனும் பிரச்னையாக இருக்க வாய்ப்புள்ளதா? மாலா ராஜ் பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மாலா ராஜ். 40 வயதைக் கடந்த பல பெண்களும் `மெனோபாஸ் வரப்போகுது… பீரியட்ஸ் நிக்கறதுக்கு முன்னாடி … Read more

தனியார் கம்பெனிக்குள் இரும்பு திருடச் சென்ற மர்ம கும்பல் … குடோனில் இருந்த பொருட்களுக்கு தீ வைப்பு

சிதம்பரம் அருகே தனியார் கம்பெனிக்குள் இரும்பு திருடச் சென்ற மர்மகும்பல், குடோனில் இருந்த பொருட்களை தீ வைத்து கொளுத்திய சம்பவத்தில் 7 பெண்கள் உட்பட 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெரியகுப்பம் கிராமத்தில் செயல்படாத தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை உள்ளது. சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த சிலர் அடிக்கடி அங்கிருந்து இரும்பு பொருட்களை திருடி செல்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 26 மற்றும் 27-ஆம் தேதியில் ஆலைக்குள் நுழைந்த கும்பல் அங்கிருந்த முக்கிய கோப்புகள், எலக்ட்ரானிக், காப்பர் … Read more