Month: June 2022
ஆஸ்கர் குழுவில் இடம் பிடித்த சூர்யா, கஜோல்
சினிமாவில் உயர்ந்த விருதாக ஆஸ்கர் கருதப்படுகிறது. இந்த ஆஸ்கர் விருது விழா நிகழ்ச்சிகளில் இந்திய சினிமா பிரபலங்களும் பங்கேற்று வருகிறார்கள். இந்த நிலையில் ஆஸ்கர் விருதுக்காக சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான பிரிவில் விருது வழங்குவதற்காக ஆஸ்கர் குழு புதிதாக 397 உறுப்பினர்களை இணைக்கப் போகிறது. இதில் இந்திய சினிமாவில் இருந்து நடிகர் சூர்யா மற்றும் ஹிந்தி நடிகை கஜோல் ஆகியோரும் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். அந்த வகையில் உலகம் முழுவதும் இருந்து 4 ஆயிரம் உறுப்பினர்கள் தேர்வு … Read more
தமிழகத்தில் இருந்து வெளியேறும் நிறுவனத்திற்கு ரூ.5000 கோடி கடன் கொடுக்கிறதா எல்.ஐ.சி?
தமிழகத்தில் இருந்து வெளியேறும் வேதாந்தா குரூப் நிறுவனத்திற்கு எல்ஐசி 5000 கோடி ரூபாய் கடன் கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் காப்பர் தொழிற்சாலையை விற்பனை செய்ய அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம். விரைவில் இந்நிறுவனம் வேறு நிறுவனத்திற்கு விற்கப்படவுள்ள நிலையில் இந்நிறுவனம் ரூ.5000 கோடி எல்.ஐ.சியிடம் கடன் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது வேற லெவல் கணிப்பு.. வேதாந்தா 20% லாபம் தரலாம்.. நல்ல சான்ஸ்..! அதிக வட்டிக்கு … Read more
தோட்ட மக்களுக்கும் அத்தியாவசிய பொட்களை வழங்க நடவடிக்கை; ஜூலை 10 முதல் நாடு முழுவதும் எரிபொருள் விநியோகிக்கும் வேலைத்திட்டம்
தற்போது நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு மத்தியில் ,தோட்ட மக்களின் நிலைமைகளையும் அரசாங்கம் கவனத்தில் கொண்டுள்ளது. இவர்களுக்கு தேவையான அத்தியாவசிய் போருட்களை ஊட்டுறவுச்சங்கங்கள் ஊடாக விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். தற்போதைய எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு காண அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ரஷ்ய ஜனாதிபதியுடன் தொலைபேசியில் கலந்துரையாடி ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதனால், தூதுவர்கள் ஊடாக தேவையான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளார். ரஷ்ய ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றையும் சமர்ப்பித்து … Read more
15 நிமிடத்தில் சுடச் சுட ஆப்பம் ரெடி… இப்படி செஞ்சு பாருங்க 
2 பொருட்களை வைத்து சூப்பரான ஆப்பம் தோசைக் கல்லிலேயே தயாரித்து சுடச்சுட தேங்காய் பாலுடன் இப்படி செய்து சாப்பிட்டு பாருங்கள், அதனுடைய ருசியே சூப்பராக இருக்கும். ஆப்ப மாவு சுலபமாக எப்படி அரைப்பது ? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்துகொள்வோம் தேவையான பொருட்கள் இட்லி அரிசி – 2 கப், சாதம் – 1 கப் உப்பு – தேவையான அளவு. முதலில் ஆப்பம் செய்வதற்கு 2 கப் அளவிற்கு இட்லி அரிசியை … Read more
அதிமுகவின் முடிவால் உற்சாகத்தில் திமுகவினர்.. இன்று வெளியாகப் போகும் அறிவிப்பு.!!
தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் ஏப்ரல் 30ஆம் தேதி வரை ஏற்பட்டுள்ள காலியிடங்களுக்கு ஜூலை 9ஆம் தேதி தற்செயல் தேர்தல் நடைபெறும் என தமிழக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 510 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. 510 பதவியிடங்களில், 34 பதவிகளுக்கு கட்சி அடிப்படையில் தேர்தல் நடைபெறுகிறது. உள்ளாட்சி அமைப்புகளில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களுக்கும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் அனைத்து பதவிகளுக்கும் கட்சி அடிப்படையில் தேர்தல் நடைபெற உள்ளது. … Read more
இந்து சமய அறநிலையத் துறையை கடுமையாக கண்டித்த உயர் நீதிமன்றம் – என்ன நடந்தது?!
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அமைந்துள்ள காளத்தீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான 18.72 ஏக்கர் நிலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி சீனிவாசன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி சீனிவாசன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி என்.மாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் 26.06.2022 அன்று … Read more
பெண்களை ஆபாசமாக சித்தரித்து பணம் பறிக்கும் வடமாநில கும்பலுக்கு சிம்கார்டு விற்றவர் கைது.!
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் பெண்களை ஆபாசமாக சித்தரித்து பணம் பறிக்கும் வடமாநில கும்பலுக்கு சிம்கார்டு விற்றவரை கொல்கத்தா சைபர் கிரைம் கைது செய்தனர். செல்போன் கடை உரிமையாளர் ராஜேந்திரனிடம் சிம் கார்டு கேட்ட வட மாநில நபர், ராஜேந்திரனின் பெயரிலே சிம் கார்டு வழங்கினால் மாதந்தோறும் பணம் தருவதாக கூறி 5 சிம் கார்டுகளை வாங்கியதாக கூறப்படுகிறது. சமூக வலைதளத்தில் உள்ள பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து அவர்களிடம் வடமாநில கும்பல் பணம் பறித்து வந்த நிலையில், … Read more
கே.பி.அன்பழகனுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் விரைவாக குற்றப்பத்திரிகை: உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை: வருமானத்துக்கு அதிகமாக சொத்துகுவித்ததாக முன்னாள்அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் குடும்பத்துக்கு எதிரான வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக ஆட்சிக் காலத்தில் உயர் கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்தவர் கே.பி.அன்பழகன். தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதியில் 2001 முதல் தற்போது வரை அதிமுக எம்எல்ஏவாக இருந்து வருகிறார். இவர்,வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவிப்பில் ஈடுபட்டுள்ளதாகக் கூறி கிருஷ்ணமூர்த்தி என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்திருந்தார். இதுதொடர்பாக விசாரணை நடத்திய … Read more
கோ-லொக்கேஷன் வழக்கு | என்எஸ்இ-க்கு ரூ.7 கோடி; சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ரூ.5 கோடி அபராதம் – ‘செபி’ நடவடிக்கை
புதுடெல்லி: பங்குச் சந்தை வர்த்தகத்தை மேம்படுத்தும் நோக்கில் 2010-ம் ஆண்டு தேசிய பங்குச் சந்தை நிறுவனம் (என்எஸ்இ), கோ-லொக்கேஷன் வசதியை அறிமுகம் செய்தது. அதாவது, என்எஸ்இ சர்வருடன் புரோக்கிங் நிறுவனங்களின் சர்வர்களை இணைத்துக் கொள்ள வழிவகை செய்யப்பட்டது. இந்தக் கட்டமைப்பை முறைகேடாக பயன்படுத்தி சில குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு பங்குச் சந்தை தொடர்பான விவரங்களை முன்னதாக வழங்கியதாக 2015-ம் ஆண்டு என்எஸ்இ மீது குற்றச்சாட்டு எழுந்தது. அதையடுத்து என்எஸ்இ விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் இவ்வழக்குத் தொடர்பாக 18 … Read more