இலங்கையில் விசா கால எல்லை அதிகரிப்பு! வெளியானது அறிவிப்பு

இலங்கையர் அல்லாதோர் இலங்கையர் ஒருவரை திருமணம் செய்யும் போது வழங்கப்படும் விசா தொடர்பில் அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த விடயத்தை முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார். அதன்படி குறித்த விசாவிற்கான கால எல்லையை நீடிப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த விசாவிற்கான ஒரு வருட கால எல்லையானது 5 வருடங்களாக அதிகரிக்கப்படவுள்ளதாக கூறியுள்ளார். இந்த கால எல்லை அதிகரிப்பானது எதிர்வரும் 4ஆம் திகதி முதல் வரும் எனவும் அமைச்சர் தம்மிக்க பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.  கடவுச்சீட்டு … Read more

பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாக சீனாவுக்கு நேட்டோ நாடுகள் கண்டனம்

சீனாவுக்கு நேட்டோ மீதான எதிர்ப்பு மற்றும் ரஷ்யாவுடனான நெருக்கம் பாதுகாப்பு அச்சுறுத்தலை உருவாக்குவதாக நேட்டோ மாநாட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில் கடந்த 28 ஆம் தேதி தொடங்கிய மூன்று நாள் நேட்டோ நாடுகளின் மாநாடு இன்றுடன் நிறைவு பெறுகிறது. இந்நிலையில் சீனாவின் செயல்பாடுகள் நேட்டோ கூட்டமைப்புக்கு எதிராக இருப்பதாகவும் நேட்டோ நாடுகளின் பாதுகாப்புக்கும் மதிப்பீடுகளுக்கும் அச்சுறுத்தலாக இருப்பதாகவும் நேற்று வெளியிடப்பட்ட நேட்டோ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Source link

2 நாட்கள் கடலில் தத்தளித்த ஐந்து மீனவர்களை மீட்ட கடலோர காவல் படை… வெளியான வீடியோ

கொச்சி அருகே கடலில் மீன்பிடி படகு கவிழ்ந்து 2 நாட்கள் நீரில் தத்தளித்த ஐந்து மீனவர்களை கடலோர காவல்படையினர் மீட்டனர். மீனவர்கள் சென்ற படகு கடல் சீற்றத்தில் சிக்கி நீரில் மூழ்கியது. அந்தவழியாக சென்ற வணிகக் கப்பல் இரு நாட்களாக கடலில் தத்தளித்த 5 மீனவர்களை மீட்டது. தகவல் அறிந்து கடலோர காவல்படை படகு வந்த நிலையில், கடல் சீற்றத்தால் மீனவர்களை பரிமாற்றும் பணியில் தொய்வு ஏற்பட்டது. தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் வணிகக் கப்பலில் இருந்து மீனவர்கள் … Read more

உக்ரைனுக்கு மேலும் 1 பில்லியன் பவுண்டுகள் இராணுவ உதவி: பிரித்தானியா உறுதி

ரஷ்யாவை எதிர்த்துப் போராட உக்ரைனுக்கு மேலும் 1 பில்லியன் பவுண்டுகள் இராணுவ ஆதரவை பிரித்தானியா வழங்கவுள்ளது. விளாடிமிர் புட்டினின் மிருகத்தனமான படையெடுப்பை எதிர்க்க உக்ரைனுக்கு உதவும் வகையில் மேலும் 1 பில்லியன் பவுண்டுகள் இராணுவ ஆதரவை பிரித்தானியா அறிவித்தது. புதன்கிழமையன்று மாட்ரிட்டில் நேட்டோ உச்சிமாநாட்டின் முதல் முழு நாள் முடிவில் வந்த இந்த அறிவிப்பின்படி, இந்த ஆண்டு உக்ரைனுக்கு பிரித்தானியாவின் மொத்த பொருளாதார மற்றும் இராணுவ ஆதரவை 3.8 பில்லியன் பவுண்டுகளாக உயர்த்தியது. இது குறித்து பிரதமர் … Read more

ராணிப்பேட்டை ஆட்சியர் வளாகத்திற்கு ஜமதக்கனி பெயர் சூட்ட வேண்டும் : ராமதாஸ் வேண்டுகோள்!!

சென்னை : ராணிப்பேட்டை  ஆட்சியர் வளாகத்திற்கு ஜமதக்கனி பெயர் சூட்ட வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளாகம் கட்டி முடிக்கப்பட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் இன்று திறந்து வைக்கப்படுவதில் மகிழ்ச்சி. அந்த வளாகத்திற்கு விடுதலைப் போராட்ட வீரரும், அறிஞருமான ஜமதக்கனியின்  பெயர் சூட்டப்படுவது வளாகத்திற்கு கூடுதல் பெருமை சேர்க்கும்! தமிழ்நாட்டில் விடுதலைக்காக போராடி அதிக காலம் சிறை தண்டனை அனுபவித்தவர் ஜமதக்கனி. … Read more

டெல்லியில் 'தொழில் முனைவு இந்தியா' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்பு!!

டெல்லி : டெல்லி, விஞ்ஞான் பவனில் ‘தொழில் முனைவு இந்தியா’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று கலந்து கொள்கிறார். சிறு, குறு, நடுத்தர தொழில்கள் சார்ந்த திட்டங்களை பிரதமர் இன்று தொடங்கி வைக்கிறார்.  

ஒற்றைக்காலுடன் 2 கி.மீ-க்கு குதித்தபடியே தினமும் பள்ளி செல்லும் மாற்றுத்திறனாளி மாணவி

பீகாரில் மாற்றுத்திறனாளி மாணவி ஒருவர், ஒற்றைக்காலிலேயே 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பள்ளிக்கு சென்று பயின்று வருகிறார். இவர் தற்போது அரசு உதவி கோரியுள்ளார். சிவான் பகுதியைச் சேர்ந்த மாணவி பிரியன்சு குமாரிக்கு பிறவியிலேயே இடது காலில் குறை இருந்தது. பெற்றோரின் ஊக்கத்தால், ஒற்றைக்காலிலேயே துள்ளித்துள்ளி குதித்தபடியே நடக்கப் பழகி உள்ளார் இவர். 11 வயதான பிரியன்சு குமாரிக்கு, மருத்துவராகி சேவை புரிவதே லட்சியம் என்கிறார். #WATCH Bihar | Siwan’s Priyanshu Kumari, a … Read more

10 வயது சிறுவனுக்காக பூதமாக மாறிய பிரபுதேவா

அபிஷேக் பிலிம்ஸ் சார்பில் ரமேஷ் பி பிள்ளை தயாரித்துள்ள படம் மை டியர் பூதம். மஞ்சப்பை மற்றும் கடம்பன் படங்களை இயக்கிய என்.ராகவன் இயக்கி உள்ளார். இப்படத்தில் பிரபுதேவா பூதமாக நடிக்கிறார். ரம்யா நம்பீசன், அஸ்வந்த், ஆலியா, சுரேஷ் மேனன், சம்யுக்தா, இம்மான் அண்ணாச்சி மற்றும் லொள்ளு சபா சுவாமிநாதன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இமான் இசை அமைத்துள்ளார், யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். அடுத்த மாதம் வெளிவருகிறது. படம் பற்றி இயக்குனர் என்.ராகவன் கூறியதாவது: குழந்தைகளுக்கான படம் … Read more

Linkedin மூலம் லட்சக்கணக்கில் சம்பாதிக்க முடியுமா? சாதித்து காட்டிய தூத்துகுடி இளைஞர்!

பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் மூலம் சம்பாதிக்க முடியும் என அனைவரும் அறிந்ததே. ஆனால் Linkedin சமூக வலைதளம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்பதை தமிழகத்தைச் சேர்ந்த தூத்துக்குடி இளைஞர் சுதர்சனம் கணபதி நிரூபித்துள்ளார். தனிநபர்களின் Linkedin கணக்குகளை கையாள ‘தி சோசியல் கம்பெனி’ என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்தியர்களுக்கு இப்ப இதுதான் ரொம்ப பிடிச்சிருக்காம்..! தி சோசியல் கம்பெனி ‘தி சோசியல் கம்பெனி’ நிறுவனத்தின் சுதர்சன் கணபதியின் சொந்த ஊர் தூத்துக்குடி. ஆனால் அதே நேரத்தில் … Read more