3 ஆவது சர்வதேச குத்துசண்டை போட்டிகளில் வவுனியா டிலக்சினி கந்தசாமி

பாக்கிஸ்தானில் நடைபெறும் 3 ஆவது சர்வதேச குத்துசண்டை போட்டிகளில் கலந்துகொள்வதற்காக இலங்கையிலிருந்து 15 போட்டியாளர்கள் பாகிஸ்தானை சென்றடைந்துள்ளனர். கடந்த கடந்த 27 ஆம் திகதி பயணமான இந்த போட்டியாளர்களில் வவுனியாவை சேர்ந்த செல்வி டிலக்சினி கந்தசாமியும் இடம்பெற்றுள்ளார். இவர் வவுனியா கோவில்குளம் இந்துக்கல்லூரியின் பழைய மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.

சரியான உச்சரிப்புடன் தமிழில் பேசி ஆச்சரியமளித்த ஆளுநர்

வேலூரில் அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம் சார்பாக புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என். ரவி கலந்துகொண்டு பேசினார். 5வது நாள் நடைபெற்ற பாலாறு பெருவிழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு இருந்தார். இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என். ரவி சந்நியாசிகள் முன்னிலையில் சனாதன தர்மம் பற்றி பேசினார். அதைவிட, அவர் முழுக்க முழுக்க தமிழில் பேசியது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. ஆளுநர் ஆர்.என். ரவி தமிழ் வார்த்தைகளை ஆங்கிலத்தில் எழுதி வைத்து பார்த்து … Read more

இறங்கி வந்த ஓபிஎஸ்.. ஏற்க மறுத்த இபிஎஸ்.. திக்குமுக்காடும் 34 வேட்பாளர்கள்.!!

தமிழகத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் ஜூலை 9ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20 ஆம் தேதி முதல் தொடங்கியது. தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் ஏப்ரல் 30ஆம் தேதி வரை ஏற்பட்டுள்ள காலியிடங்களுக்கு ஜூலை 9ஆம் தேதி தற்செயல் தேர்தல் நடைபெறும் என தமிழக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 498 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கும், 12 நகர்ப்புற உள்ளாட்சி பதவிகளுக்கு என 510 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற … Read more

படிக்கிற வயசுல இது தேவையா..!! பேருந்தின் கூரைமீது நடனமாடிய பள்ளி மாணவர் படுகாயம்..!!

சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தில் இருந்து கொளத்தூர், பெரியார் நகருக்கு நேற்று மாலை ஒரு மாநகர பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்பேருந்தில் ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் சம்பத் (53), மாதவரம் பகுதியைச் சேர்ந்த ஜனார்த்தனன் (42) ஆகிய இருவரும் பணியில் இருந்தனர். பேருந்து பெரம்பூர், பேப்பர் மில்ஸ் சாலை அருகே சென்றபோது, அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பேருந்தில் ஏறி உள்ளனர். இதில் படிக்கட்டில் நின்று கொண்டிருந்த … Read more

“நாடு முழுவதும் தோற்கவுள்ள பாஜக, தமிழ்நாட்டில் மட்டும் எப்படி வெற்றி பெறும்?'' – கே.பாலகிருஷ்ணன்

மதுரையில் தீக்கதிர் நாளிதழின் வைரவிழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், செய்தியாளர்களிடம் பேசும்போது, “மோடி அரசு பத்திரிகை சுதந்திரத்தை காலில் போட்டு மிதிக்கின்றது. நாடாளுமன்றத்தில் ஜனநாயக உரிமை மிதிக்கப்படுகிறது. கே.பாலகிருஷ்ணன் உள்நாட்டில் நடப்பதை கண்டுகொள்ளாமல் வெளிநாடுகளில் ஜனநாயகம் இல்லை என பேசிவருகிறார். ஜனநாயகத்திற்காக குரல் எழுப்பும் சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்களை தொடர்ந்து கைது செய்யும் அவலம் தொடர்கிறது. அடக்குமுறைகளுக்கு எதிராக அனைத்து ஜனநாயக கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டும். கே.பாலகிருஷ்ணன் தி.மு.க … Read more

மூக்குத்தியை கூட விடல.. இதை வெளிய சொன்னா ரத்தம் கக்கி செத்துரூவீங்க..! சொல்வதெல்லாம் பொய்யான சோகம்.!

79 வயது முதியவரின் நோய் தீர்க்க பூஜை செய்வதாகக் கூறி, மாமியார் மற்றும் மருமகளிடம் இருந்து 20 லட்ச ரூபாய் பணத்தையும், 37 சவரன் நகைகளையும் ஏமாற்றிய பெண் மந்திரவாதியை போலீசார் கைது செய்துள்ளனர். ‘சொல்வதெல்லாம் உண்மை’ என்று மாந்த்ரீகத்தை நம்பி வீதிக்கு வந்த பெண்ணின் பரிதாபம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.. மாமியார் மற்றும் மருமகளிடம் நோய்களை குணப்படுத்த பரிகார பூஜை செய்வதாகப் பேசி மயக்கி மொத்தமாக நகை பணத்தை ஆட்டையை போட்டுச்சென்றதாக போலீசில் … Read more

குரூப்-1 முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியீடு: நேர்காணலுக்கு 137 பேர் தேர்ச்சி

சென்னை: குரூப்-1 முதன்மைத் தேர்வு முடிவை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. அதில் நேர்காணலுக்கு 137 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் துணை ஆட்சியர், காவல் துறை துணை கண்காணிப்பாளர், கூட்டுறவு சங்க துணைப் பதிவாளர், வணிகவரி உதவி ஆணையர் உட்பட குரூப்-1 பதவியில் காலியாக உள்ள 66 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டது. முதல்நிலை,முதன்மை, நேர்முகத் தேர்வுகள்அடிப்படையில் இதற்கான பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். … Read more

தீஸ்தா சீதல்வாட்டின் மும்பை வீட்டில் குஜராத் மாநில போலீஸார் சோதனை

மும்பை: சமூக செயற்பாட்டாளர் தீஸ்தா சீதல்வாட்டின் வீட்டில் குஜராத் போலீஸார் நேற்று சோதனை நடத்தினர். குஜராத் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடி மீதான வழக்கை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் சில தினங்களுக்கு முன் உத்தரவிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் மனுதாரராக இருந்த சமூக செயற்பாட்டாளர் தீஸ்தா சீதல்வாட்டை குஜராத் போலீஸார் கைது செய்தனர். அவருடன் முன்னாள் காவல் துறை அதிகாரி ஸ்ரீகுமாரும் கைது செய்யப்பட்டார். தீஸ்தா சீதல்வாட்டின் கைதுக்கு நாடு முழுவதும் பல்வேறு அமைப்பினரும் … Read more

உக்ரைன் போரில் காயமடைந்த வீரர்களுக்கு பதக்கங்கள்.!

உக்ரைன் போரில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் வீரர்களுக்கு ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் தங்க பதக்கங்களை வழங்கும்  வீடியோவை ரஷ்ய பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ளது. மாஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வீரர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்த அமைச்சர், Sergei Shoigu, அவர்களுடன் கலந்துரையாடினார்.  Source link

பீகாரில் பலத்த மழை – மின்னல் தாக்கி ஒரே நாளில் 16 பேர் உயிரிழப்பு.!

பீகாரில் மின்னல் தாக்கி ஒரே நாளில் 16 பேர் உயிரிழந்தனர். தலைநகர் பாட்னாவிலும், சீதாமாரி, மாதேபுரா, கிஷன்கஞ்ச் மாவட்டங்களிலும் கடும் மழைபெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநில அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்நிலையில் பல்வேறு மாவட்டங்களில் மின்னல் தாக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்தது. இதே போல் சட்டிஸ்கரிலும் 3 பேர் மின்னல் தாக்கி பலியாகினர்.   Source link