ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன்: 8 மணிநேர போராட்டத்திற்கு பிறகு நடந்த அதிசயம்

இந்திய மாநிலம் மத்தியப் பிரதேசத்தில், சத்தர்பூர் மாவட்டத்தில் 40 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன், கிட்டத்தட்ட 8 மணி நேரம் கழித்து மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சத்தர்பூர் மாவட்ட தலைமையகத்திற்கு அருகில் உள்ள நாராயண்புரா பதர்பூர் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. குழந்தையின் தந்தை அகிலேஷ் யாதவ்க்கு சொந்தமான விவசாய நிலத்தில் 40 அடி ஆழ்துளை கிணற்றில், நேற்று மதியம் 2 மணியளவில் அவரது 5 வயது மகன் தீபேந்திர யாதவ் தவறி … Read more

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இருந்து ரோகித் சர்மா விலகல் ?: ராகுல் டிராவிட் விளக்கம்

மும்பை :இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இருந்து ரோகித் சர்மா விலகுவது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று இந்திய அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தகவல் அளித்துள்ளார். இன்னும் 2 மருத்துவ சோதனைகளின் முடிவுகளை பொறுத்தே ரோகித் சர்மா விலகுவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று மாலை விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட்

பெங்களூரு : ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று மாலை விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட். விண்ணில் ஏவப்படும் பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட்டுக்கான 25 மணி நேர கவுண்டவுன் நேற்று தொடங்கியது.DSEO என்ற புவி கண்காணிப்பு செயற்கைகோளுடன் பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட்டை இஸ்ரோ விண்ணில் ஏவுகிறது.

உதய்பூர் கொலையாளிகளுக்கு பாகிஸ்தானின் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு – விசாரணையில் அம்பலம்

ராஜஸ்தானில் தையல் கடைக்காரர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்களுக்கும், பாகிஸ்தானில் இயங்கும் தவாத் – இ – இஸ்லாமி பயங்கரவாத அமைப்புக்கும் இடையே தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூர் நகரில் தையல் கடை நடத்தி வந்தவரான கன்னையா லால் என்பவரை நேற்று முன்தினம் இரண்டு பேர் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்தனர். மேலும், அந்த வீடியோவையும் அவர்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இந்த சம்பவம் ராஜஸ்தான் மட்டுமல்லாமல் நாடு முழுவதுமே பெரும் … Read more

ஜவான் படத்தில் யாரை கொல்லப்போகிறார் அட்லீ? – புது அப்டேட்டால் நெட்டிசன்களிடையே சலசலப்பு!

பிரமாண்ட இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி கமெர்சியல் இயக்குநர் பட்டியலில் இணைந்துள்ள அட்லீ, ஷாருக்கானின் ஜவான் படத்தை இயக்குவதன் மூலம் பாலிவுட்டிலும் தனது கால் தடத்தை பதிய இருக்கிறார். ஜவான் படம் ஷாருக்கானுக்கு நல்ல கம்பேக்கை கொடுக்குமா இல்லையா என்பதை தாண்டி அட்லீ எப்படி இயக்கியிருக்கிறார் என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்திருக்கிறது. ஏனெனில் அட்லீ இயக்கத்திலான அனைத்து படங்களுமே ஏற்கெனவே தமிழில் வந்த படங்களின் சாயல், கதையம்சத்தோடு தொடர்புடையதாக இருக்கும் … Read more

இதுவரை 2 லட்சம் பேர் விண்ணப்பம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: முப்படைகளுக்கு, நான்கு ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் வீரர்களை தேர்வு செய்யும் அக்னிபத் திட்டத்தை, மத்திய அரசு சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. இந்நிலையில், ராணுவம், விமானப்படை, கடற்படை என முப்படைகளுக்கும் அக்னிபத் திட்டத்தின் கீழ் தனித்தனியாக வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இத்திட்டத்தின் கீழ் வீரர்களை தேர்வு செய்யும் நடவடிக்கையை, விமானப் படை கடந்த 24ல் துவக்கியது. ‘பணியில் சேர ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள், https://agnipathvayu.cdac.in/AV/ என்ற இணையதளத்தில் தங்கள் … Read more

மீனாவின் கணவர் மரணம் ; யாரையும் பயமுறுத்த வேண்டாம் : குஷ்பு

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நுரையீரல் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். அவரது மரணம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நேரத்தில் மீனாவின் கணவர் மறைவு குறித்து நடிகை குஷ்பு தனது டுவிட்டரில் ஒரு பதிவு போட்டிருக்கிறார். அதில் மீனாவின் கணவர் வித்யாசாகர் உயிரிழந்த சம்பவம் மிகப்பெரிய வேதனையைக் கொடுத்தது. நுரையீரல் பிரச்சனை காரணமாக அவர் சிகிச்சை பெற்று வந்தார். வாழ்க்கை மிகவும் குரூரமானது என்பதை இந்த இறப்பின் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது. மீனாவையும் அவரது மகள் … Read more

இந்திய ராணுவத்தில் இத்தனை பிரபலங்களா..?! யார் யார் இருக்காங்க பாருங்க!

இந்திய ராணுவத்தில் இணைந்து தாய் நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும் என்பது ஒவ்வொருவரின் கனவாக இருந்து வருகிறது. மற்ற அனைத்து தொழிலை விட விளையாட்டு மற்றும் ராணுவம் ஆகிய இரண்டும் மனதுக்கு நெருக்கமாக உள்ள தொழிலாகும். அதிலும் விளையாட்டு வீரர்கள் இராணுவத்தில் உயர் பதவிகளை பெற்றுள்ளனர் என்பது ஆச்சரியமான தகவலாகும். பாகிஸ்தான் மற்றும் சீனா எல்லைகளை கண்கானிக்க.. புதிய ட்ரோன்களை வாங்க “இந்திய ராணுவம்“ திட்டம்.. இந்திய ராணுவத்தில் பிரபலங்கள் விளையாட்டு வீரர்கள் மட்டுமின்றி அரசியல்வாதிகள், நடிகர்கள் … Read more

இலங்கையின் ஏற்றுமதி ஐந்து மாதங்களில் 5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிப்பு

இலங்கையின் ஏற்றுமதிகள் இந்த வருடத்தின் முதல் ஐந்து மாதங்களில் 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை பதிவு செய்துள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபை (நுனுடீ) தெரிவித்துள்ளது. இலங்கை சுங்க திணைக்களத்தால் வெளியிடப்பட்ட தரவுகளின்படி 2022 மே மாதத்தில் வர்த்தகப் பொருட்கள் ஏற்றுமதியின் வருமானம் 980.2 மில்லியன் அமெரிக்க டொலர்களாக (9.9%)அதிகரித்துள்ளது. இதில் முக்கியமாக ஆடை கைத்தொழில்,பலசரக்கு பொருட்கள், தென்னை சார்ந்த உற்பத்திகள்,அலங்கார மீன் மற்றும் மின்சார உபகரணங்களின் ஏற்றுமதி அதிகரித்து ஏற்றுமதி வருமானமும் அதிகரித்துள்ளது. இந்த பொருட்களில் அதிக … Read more