இஸ்ரேலின் இடைக்கால பிரதமராக யயீர் லபிட் நியமனம்.!

இஸ்ரேலில் நப்தாலி பென்னட் தலைமையிலான ஆட்சி கவிழ்ந்த நிலையில், இடைக்கால பிரதமராக வெளியுறவுத்துறை அமைச்சர் Yair Lapid நியமிக்கப்பட்டுள்ளார். 8 கட்சிகளின் கூட்டணியில் ஏற்பட்ட விரிசலை அடுத்து நாடாளுமன்றத்தில் ஆட்சி கலைப்பு மசோதா நிறைவேற்றப்பட்டு, பிரதமர் நப்தாலி பென்னட் பதவி விலகினார். அக்டோபர் இறுதியில் 5-வது முறையாக தேர்தல் நடைபெற உள்ளது. அதுவரை காபந்து அரசின் தலைவராக வெளியுறவுத்துறை அமைச்சர் Yair Lapid இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக நப்தாலி பென்னட் தெரிவித்துள்ளார். … Read more

இரண்டாண்டு இடைவெளிக்குப் பின் அமர்நாத் பனிலிங்க தரிசன யாத்திரை தொடக்கம்

கொரோனா தொற்று காரணமாக நிறுத்தப்பட்ட அமர்நாத் பனிலிங்க தரிசனம் இந்த ஆண்டு அனுமதிக்கப்பட்டதால் இன்று அதிகாலை 4 ஆயிரத்து 890 பக்தர்களின் முதல் குழு புறப்பட்டுச் சென்றது. பனிலிங்கத்தை தரிசனம் செய்வதற்காக 43 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வருகின்ற ஆகஸ்ட் 11ம் தேதி யாத்திரை முடிவுக்கு வரும்.பகவதி நகர் அடிவார முகாமில் இருந்து அமர்நாத் யாத்திரை குழுவை துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்கா நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். தீவிரவாத அச்சுறுத்தல் உள்ளதால் பக்தர்களுக்கு … Read more

புன்னைநல்லூர் மாரியம்மன் திருக்கோவில்

புன்னைநல்லூர் மாரியம்மன் திருக்கோவில், தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. கீர்த்தி சோழன் என்னும் அரசர் இவ்வம்பிகையின் அருளால் ஒரு ஆண்மகனைப் பெற்று அதற்கு தேவசோழன் என்னும் பெயரைச் சூட்டி அவன் பல ஆண்டுகள் சோழ சாம்ராஜ்யத்தை ஆண்டு வந்தான். தஞ்சையை ஆண்ட வெங்கோஜி மகாராஜா 1680 ல் திருத்தல யாத்திரை செய்யுங்கால் கண்ணபுரம் என்னும் சமயபுரத்தில் தங்கி வழிபாடு செய்தார். அன்றிரவு அம்பிகை அரசனின் கனவில் தோன்றி, தஞ்சைக்கு கிழக்கே 7 கி.மீ. தூரத்தில் உள்ள புன்னைக் காட்டில் … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,355,906 பேர் பலி

ஜெனீவா:உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63.35 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,355,906 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 551,579,883பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 526,764,441 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 36,828 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அதிரடி முடிவு பேக்கிங் கோதுமை மாவு, அப்பளம், தயிர், தேன், மோர், லஸ்சிக்கு 5% வரி

* கத்தி, பிளேடு, ஷார்ப்பனர், காசோலையும் தப்பவில்லை* ஓட்டல், மருத்துவமனை அறைகளுக்கான சலுகை ரத்துசண்டிகார்: பேக்கிங் செய்யப்படாத பிராண்ட் அல்லாத உணவு பொருட்களுக்கு இருந்த வரி விலக்கை திரும்பப் பெற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், காசோலை, அஞ்சலக சேவைகள், மருத்துவமனை அறை வாடகைக்கும் வரி விதிக்கப்படும். ஆயிரம் ரூபாய்க்கு கீழுள்ள ஓட்டல் அறை வாடகைக்கு வரி விதிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி கவுன்சிலின் 47வது கூட்டம் சண்டிகாரில் நேற்று முன்தினம் தொடங்கியது. … Read more

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றின் மேற்கு திசை காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வுமையம் கூறியுள்ளது. மேலும் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. பின்னர் ஒன்றாம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு, தமிழ்நாடு, புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் … Read more

ஜனாதிபதி தேர்தலுக்கான எதிர்க்கட்சிகள் ஒற்றுமையில் பிளவு!| Dinamalar

புதுடில்லி: ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் 18ல் நடக்கிறது. இதில், பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி சார்பில், திரவுபதி முர்மு போட்டியிடுகிறார். காங்கிரஸ், திரிணமுல், தேசியவாத காங்., சிவசேனா, சமாஜ்வாதி, தி.மு.க., உள்ளிட்ட 17 எதிர்க்கட்சிகளின் சார்பில், முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார். இவர் தன் வேட்புமனுவை, கடந்த 27ல் தாக்கல் செய்தார். மொத்தம் நான்கு செட் வேட்புமனுக்கள், தாக்கல் செய்யப்படுவது வழக்கம். முதல் செட் வேட்பு மனு, காங்கிரஸ் … Read more

மலையாள நடிகை அம்பிகா ராவ் மறைவு

கொரோனா தொற்று மீண்டும் மெல்ல விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கி உள்ளது. மலையாள குணசித்ர நடிகையும், இணை இயக்குனருமான அம்பிகா ராவ் காலமானார். கடந்த சில மாதங்களாக சிறுநீரக பிரச்னை காரணமாக திருச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அம்பிகா ராவ் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவருக்கு திடீரென்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிறுநீரக ஆபரேஷன் நடக்க இருந்த நிலையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 58. … Read more

இனி 24 மணி நேரமும் வங்கி சேவைகள்.. எஸ்பிஐ புதிய வசதி அறிமுகம்!

பாரத ஸ்டேட் வங்கி இனி 24 மணி நேரமும் தனது வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்வதாக அறிவித்துள்ளது. வங்கி வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு விஷயத்துக்கும் வங்கிக்கு நேரடியாக செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. வங்கிக்கு செல்லாமலேயே ஆன்லைன் மூலம் மற்றும் தொலைபேசி மூலம் பல வங்கிப் பணிகளை முடித்துக் கொள்ளும் நிலை தற்காலத்தில் ஏற்பட்டுள்ளது. சாமானியர்களின் சுமை இன்னும் அதிகரிக்கலாம்.. எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் ஷாக்..! எஸ்பிஐ வங்கி இந்த நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய … Read more