எம்பிசி வகுப்பில் மூன்றாம் பாலினத்தவர்.. ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்..!

மூன்றாம் பாலினத்தவர் அமைப்பைச் சேர்ந்த பி.சுதா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அதில், “மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உச்சநீதிமன்றம் அங்கீகாரம் வழங்கிய போதும், அவர்களுக்கு இதுவரை எந்த ஒரு நலத்திட்ட உதவிகளும், இட ஒதுக்கீடும் வழங்கப்படவில்லை. உச்சநீதிமன்றம் ஏற்கனவே மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், ரேஷன் கார்டு மற்றும் கல்வி நிலையங்களில் மாணவர் சேர்க்கைக்கு வழிவகை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு வழங்கப்பட்டது … Read more

தமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு.!

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களிலும், நாளை 5 மாவட்டங்களிலும் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இன்றும் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் நாளையும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில … Read more

சமூகநலத் துறை சார்பில் குழந்தைகள் நலனுக்கான 3 புதிய திட்டங்கள் தொடக்கம் – ரூ.7.32 கோடி நிதி ஒதுக்கியது தமிழக அரசு

சென்னை: சமூகநலத் துறை சார்பில் குழந்தைகளின் வளர்ச்சி, ஊட்டச்சத்து, சுகாதாரம் தொடர்பாக ரூ.7.32 கோடியில் 3 திட்டங்களை தொடங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து சமூகநலத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: குழந்தைகள் நலனில் தமிழக அரசு மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது. வளர்ச்சி, ஊட்டச்சத்து, சுகாதாரம் ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில், சமூகநலத் துறை அமைச்சர் இந்த ஆண்டுக்கான துறையின் மானிய கோரிக்கையை தாக்கல் செய்து அறிவிப்புகள் வெளியிட்டார். அதில், … Read more

சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் அசாமுக்கு ரூ.51 லட்சம் நிதியுதவி

குவாஹாட்டி: அசாம் வெள்ள நிவாரணப் பணிகளுக்கு மாகாராஷ்டிராவை சேர்ந்த சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் ரூ.51 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளனர். மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் மகா விகாஸ் கூட்டணி ஆட்சியில் உள்ளது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக உள்ளார். இந்நிலையில் சிவசேனா மூத்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அக்கட்சி அதிருப்தி எம்எல்ஏக்கள் கட்சித் தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். பாஜகவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க வேண்டும் என அவர்கள் கோரினர். … Read more

முப்படைகள் வசமானது எரிபொருள் விநியோகம் – இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவிப்பு

அரசாங்கத்தின் அறிவுறுத்தலுக்கு இணங்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) நேற்று (29) எரிபொருள் விநியோகத்தை முப்படை, பொலிஸ் மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு வழங்க தீர்மானித்துள்ளது. இந்த சமீபத்திய நடவடிக்கை தொடர்பாக பாதுகாப்புப் படையினருக்கு விளக்கமளித்ததாகவும், இந்த முறை இன்று (30) முதல் நடைமுறைக்கு வரும் எனவும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அடையாளத்தை நிரூபிக்க வேண்டும் அரசாங்கத்தின் இந்த சமீபத்திய உத்தரவின்படி, மறு அறிவிப்பு வரும் வரை எந்த இலங்கை பெற்றோலிய … Read more

மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்று தலைமை வழக்கறிஞராக தொடர கே.கே.வேணுகோபால் முடிவு

மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக உள்ள கே.கே.வேணுகோபால் அரசின் கோரிக்கையை ஏற்று பதவியில் தொடர ஒப்புக்கொண்டுள்ளார். 91 வயதான மூத்த வழக்கறிஞரான கே.கே.வேணுகோபால் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். 2020-ம் ஆண்டுடன் அவரது பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில் இரண்டு முறை நீட்டிக்கப்பட்டது. நீட்டிக்கப்பட்ட அவரது பதவிக்காலம் நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில் மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று பதவியில் தொடர் உள்ளார்.  Source link

நேட்டோ அமைப்பில் சேர முறைப்படி அழைப்பு: ஸ்வீடன், பின்லாந்து நாடுகளுக்கு புடின் மிரட்டல்!

ஸ்வீடன் மற்றும் பின்லாந்தில் நேட்டோ உள்கட்டமைப்பை அமைத்தால், ரஷ்யா ‘உரிய வகையில்’ பதிலளிக்கும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளார். நார்டிக் நாடுகளான ஸ்வீடன் மற்றும் பின்லாந்து மேற்கத்திய கூட்டணியான நேட்டோவில் சேர வழிவகுத்த ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு புடின் இந்த அச்சுறுத்தலை விடுத்தார். ஹெல்சின்கி மற்றும் ஸ்டாக்ஹோம் உடனான மாஸ்கோவின் உறவுகளில் ‘பதட்டங்கள் வெளிப்படும்’ என்பதை தன்னால் நிராகரிக்க முடியாது என்று புடின் கூறியுள்ளார். இதையும் படிங்க: தற்செயலாக வந்த ரூ.6.45 கோடி … Read more

நடிகர் திலீப்பின் ஜாமீனை ரத்து செய்ய கோரிய மனு தள்ளுபடி

திருவனந்தபுரம்: சாட்சிகளை மிரட்டியது உள்பட ஜாமீன் நிபந்தனைகளை மீறியதால், நடிகர் திலீப்பின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி குற்றப்பிரிவு போலீஸ் தாக்கல் செய்த மனுவை, எர்ணாகுளம் விசாரணை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.பிரபல மலையாள நடிகையை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த விவகாரத்தில் சதி திட்டம் தீட்டியதாக கூறி, திலீப் கைது செய்யப்பட்டார். கடந்த 85 நாட்கள் சிறைவாசத்துக்கு பிறகு நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். ‘சாட்சிகளை மிரட்டவோ, கலைக்கவோ கூடாது. ஆதாரங்களை அழிக்கக்கூடாது’ … Read more

துணை ஜனாதிபதி தேர்தல் எப்படி? யார் போட்டியிடலாம்?| Dinamalar

புதுடில்லி: துணை ஜனாதிபதி தேர்தல், ஆக., 6ம் தேதி நடக்க உள்ளது. ஜனாதிபதி போல, துணை ஜனாதிபதிக்கான தேர்தலும் மறைமுக தேர்தல் தான். ஜனாதிபதி தேர்தலை போல எம்.எல்.ஏ.,க்கள் இதில் ஓட்டளிக்க முடியாது. லோக்சபா, ராஜ்யசபா எம்.பி.,க்கள் ஓட்டளித்து துணை ஜனாதிபதியை தேர்வு செய்வர். யார் போட்டியிடலாம்? * இந்திய குடிமகனாக இருக்க வேண்டும் * 35 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும் * ராஜ்யசபா எம்.பி., ஆவதற்கான தகுதி பெற்றிருக்க வேண்டும்* எம்.பி., / எம்.எல்.ஏ., … Read more

பிரபல காமெடி நடிகர் வெங்கல் ராவ் மருத்துவமனையில் அனுமதி

சினிமாவில் ஆரம்பத்தில் ஸ்டண்ட் நடிகராக வலம் வந்தவர் வெங்கல் ராவ். பிறகு காமெடி கலந்த குணச்சித்ர வேடங்களில் நடித்தார். குறிப்பாக வடிவேலுவின் காமெடி டீமில் ஒருவராக அறியப்பட்ட வெங்கல்ராவ், விஜயவாடா பக்கம் புனாதிபாடு கிராமத்தில் பிறந்தவர். வடிவேலுவுடன் தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். தற்போது சுராஜ் இயக்கி வரும் 'நாய்சேகர் ரிட்டன்ஸ்' படத்தில் நடித்து வருகிறார் . இந்நிலையில் சிறுநீரகக் கோளாறால் அவதிப்பட்டு வந்த வெங்கல்ராவ் திடீரென ஐதராபாத்தில் மருத்துவமனையில் ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர … Read more